உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை; அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார்

புற்று நோய்க்கு அறுவை சிகிச்சை; அமெரிக்கா சென்ற சிவராஜ்குமார்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பெங்களூரு: பிரபல கன்னட நடிகர் சிவராஜ்குமார், புற்று நோய் அறுவை சிகிச்சைக்காக அமெரிக்கா புறப்பட்டு சென்றுள்ளார்.கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவராஜ்குமார், 62. இவர் மறைந்த பிரபல கன்னட நடிகர் ராஜ்குமாரின் மகன். தமிழில் நடிகர் ரஜினியுடன் இணைந்து ஜெயிலர், தனுஷ் உடன் கேப்டன் மில்லர் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.சமீபத்தில், இவரது பைரதி ரங்கல் திரைப்படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது.இதன் வெற்றி விழாவில் பேசிய சிவராஜ்குமார், தன் உடல்நிலை குறித்து சில தகவல்களை கூறினார்; விரைவில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதாகவும் கூறியிருந்தார். அவருக்கு புற்று நோய் பாதிப்பு இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், தனக்கு ஏற்பட்ட நோய் பாதிப்பு குறித்து, அவர் வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பெங்களூரில் இருந்து, அமெரிக்காவின் புளோரிடாவுக்கு விமானத்தில் புறப்பட்டு சென்றார். அவருடன் மனைவி கீதாவும் சென்றார். புளோரிடாவில் உள்ள மியாமி கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் வரும் 24ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை நடக்கிறது.அங்கு வசிக்கும், கர்நாடகாவை சேர்ந்த டாக்டர் கோபால், அறுவை சிகிச்சை செய்ய உள்ளார். அதன்பின், ஒரு மாதம் அங்கு ஓய்வில் இருக்கும் சிவராஜ்குமார் அடுத்த மாத இறுதியில் பெங்களூரு திரும்புகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

angbu ganesh
டிச 20, 2024 09:42

ஆபரேஷன் வெற்றி பெற்று நலமுடன் திரும்புங்க சார்


அப்பாவி
டிச 20, 2024 07:46

கர்னாடகாவில் எய்ம்ஸ் இருக்கா? நட்டாவைத்தான் கேக்ஜணும்.


வைகுண்டேஸ்வரன் V, chennai
டிச 20, 2024 08:26

அடப்பாவி, பல் நோக்கு மருத்துவமனை இருக்கும் போது ஏன் உங்க daleevaru காவேரிக்கு போறாங்க?


Barakat Ali
டிச 20, 2024 06:51

அங்கு வசிக்கும், கர்நாடகாவை சேர்ந்த டாக்டர் கோபால் .......... இங்கதான் இருக்குது சூக்குமம் ........


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை