வாசகர்கள் கருத்துகள் ( 4 )
அரசு வங்கிகளில் அப்படி என்னதான் பெரும்பாலும் செய்கிறார்கள் ?? நாம் எழுதிக்கொடுத்த சலான், அதை அப்படியே பார்த்து கணினியில் டைப் செய்கிறார்கள். அவ்வளவுதானே. மற்றதை எல்லாம் கணினியே வரவு செலவில் வைக்கிறது. தனியாக ஆறாவது அறிவை உபயோகிக்க வேண்டிய அவசியமே எழவில்லை. மேலும், மின்தடை ஏற்பட்டால், அந்த வேலையையும் இவர்கள் செய்வதில்லை. மேலும், தற்போது மெஷினிலியே பணத்தை செலுத்தி ரசீது பெறுகிறோம். சாதாரண ஐம்பது ரூபாய் கால்குலேட்டர் செய்யும் வேலைக்கு எதற்கு இவ்வளவு பேர்கள்? இவ்வளவு ஆயிரத்தில் சம்பளம், பஞ்சபடிகள், போனஸ் மற்றும் சலுகைகள்?? தவிர ஓய்வூதியம் வேறு. அதிலும் பஞ்சபடி. இதில் வாரம் இருமுறை விடுமுறை, பண்டிகை கால விடுமுறை, சிறப்பு விடுமுறைகள் வேறு தனி. இதைத்தவிர, இன்னும் கூடுதல் சம்பளம் / போனஸ் / சலுகை மற்றும் விடுமுறைகள் வேண்டும் என்ற வேலை நிறுத்தங்கள் வேறு. தெரியாமல் தான் கேட்கிறேன். இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டில், தனியார் நிறுவனங்கள் மேற்சொன்ன எதுவும் அளவுக்கு அதிகமாக இல்லாமல், திறன்பட தங்கள் நிறுவனங்களை நிர்வாகம் செய்யும் போது, எந்த அரசும் நமது நாட்டின் பொருளாதாரத்தை அனாவசியமாக மேலும் மேலும் இதன்மூலம் வீணடிக்க வேண்டுமா என்ன?? ஓ புரிகிறது. தனியார் ஊழியர்கள் தங்கள் வாயை வயிற்றை கட்ட தயாராக இருக்கையில், அரசு ஜமாய்க்க வேண்டியது தானே. இதில் அந்த அரசு, இந்த அரசு, எந்த அரசாக இருந்தால் என்ன? இக்கரைக்கு அக்கறை பச்சை தானே. அரசியல் வேறு, நிர்வாகம் வேறு என்று, திரு. காமராஜர் மற்றும் திரு. மன்மோகனை போல யார் ஒருவர் இந்தியாவுக்கு ஆள்வதற்கு கிடைக்கிறாரோ, அப்போது தான் இந்தியா அடுத்த கட்டத்துக்கு வேகமாக முன்னேறும். அந்த பொன்நாள் எந்நாளோ?? இறைவா, தனியார் ஊழியரை கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு மற்றும் வரி விதிப்பிலிருந்து காப்பாற்று. உன்னையே சரணடைந்தோம்.
நீங்கள் வங்கி வேலைக்கு மிகவும் முயற்சி செய்து அது கிடைக்காத ஆத்திரம் உங்கள் கருத்து மூலம் தெரிகிறது. வங்கி வேலை என்பது வெறுமனே பணத்தை வாங்கி கணக்கில் போட்டு அதே பணத்தை திருப்பி கொடுக்கும் வேலை அல்ல. ஃபாரின் எக்ஸ்சேஞ்ச், கார்ப்பரேட் ஃபைனான்ஸ், ப்ராஜெக்ட் ஃபண்டிங்,கன்ஷார்ஷியம் ஃபைனான்ஸ், மல்டிபிள் பாங்கிங், ரிஸ்க் மேனேஜ்மென்ட்,ரெக்கவரி என்று ஆயிரெத்தெட்டு கலைகள் உள்ளன. லோன் கொடுத்து விட்டு அதிலும் கோடிக்கணக்கில் கொடுத்து விட்டு இரவு தூக்கம் வராமல் தவிக்கும் வங்கி உயரதிகாரிகள் நிறையவே உள்ளனர்.மத்திய அரசு, மாநில அரசு ஊழியர்களை விட எவ்வளவோ மேலானவர்கள், நேர்மையானவர்கள் வங்கி ஊழியர்கள்!
இந்த நாலாயிரம் வேலைக்கு நாப்பது லட்சம் பேர் மனு போடுவாங்க. தலைக்கு நூறு ரூவா கட்டணம் வசூலிச்சாலும் நாப்பது கோடி வருமானம் வந்துரும். காசு வாங்கிட்டு வேலை போட்டுக்.குடுத்திரலாம்.
பட்டப்படிப்பு இருந்தா போதும். ஆனால் நுழைவுத் தேர்வில் சரித்திரம், பூகிளம், இங்கிலீஷ், கம்பியூட்டர் சயன்ஸ், கணிதம், பௌதிகம், ரசாயனம் இன்ன பிற துறைகளில்.பி.ஹெச்.டி லெவலில் கேள்விகள் கேப்பாங்க. எவனாவது கேள்வித்தாள்களை கசியவிட்டு தேர்வில் பாஸ் பண்ணி, லஞ்சம் குடுத்து வேலை வாங்கிடுவான். இவ்வளவு படிச்சுட்டு அங்கே கிளார்க் வேலை பாக்கறதுக்குள்ளே ஐ.எஸ்.ஆர்.ஓ, நாசா வில் வேலைக்குப் போற தகுதி நமக்கு வந்துரும்.
மேலும் செய்திகள்
உலகளாவிய ஒத்துழைப்பு அவசியம்; நிர்மலா சீதாராமன் அழைப்பு
3 hour(s) ago
ஜடேஜா, ஜூரெல் அரைசதம்; இந்திய அணி ரன் குவிப்பு
3 hour(s) ago
பிரிட்டனில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம்
6 hour(s) ago | 8
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
11 hour(s) ago