உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்

வாக்காளர் பட்டியலில் இறந்தவர்களின் பெயர்களை சேர்க்கணுமா? தேர்தல் கமிஷனர் ஆவேசம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி:“இறந்தவர்களையும், வெளிநாட்டினரையும் பீஹார் வாக்காளர் பட்டியலில் சேர்க்க அனுமதிக்க வேண்டுமா?,” என, எதிர்க்கட்சியினருக்கு தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். பீஹாரில் இந்தாண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதையடுத்து, அங்கு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தலைமை தேர்தல் கமிஷன் மேற்கொண்டுள்ளது. வா க்காளர் பட்டியலில் உரிய ஆவணங்களுடன் பெயர்களை சேர்க்கவும், நீக்கவும் இன்று கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில், சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதனால், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சிறுபான்மையினர்களின் ஓட்டுகள் நீக்க வாய்ப்பிருப்பதாக அக்கட்சியினர் குற்றஞ்சாட்டி வருகின்ற னர். இந்த விவகாரம் குறித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் நேற்று கூறியதாவது: வாக் காளர் பட்டியல் என்பது ஜனநாயகத்தின் அடித்தளம். இதில், போலி வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களையும், வெளிநாட்டினரையும், இறந்தவர்களையும் சேர்க்க தலைமை தேர்தல் கமிஷன் அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி யினர் விரும்புகின்றனரா? அத்தகைய வாக் காளர்களை தேர்தல் கமிஷன் நீக்க வேண்டாமா? வெளிப்படையான செயல்மு றை வாயிலாக, உண்மையான வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் தயாரிக்கிறது. இது நியாயமான முறையில் தேர்தல்களை நடத்துவதற்கும், வலுவான ஜனநாயகத்திற்குமான அஸ்திவார கல். இதில், தவறு நேர அனுமதிக்கலாமா?- இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மோசடிக்கு ஆதாரம் உள்ளது: ராகுல்

லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று கூறியதாவது: தேர்தல் கமிஷனுக்கு ஒரு செய்தியை சொல்ல விரும்புகிறேன். நீங்கள் தப்பிக்க முடியும் என நினைக்காதீர்கள். விரைவில் நாங்கள் உங்களைத் தேடி வருவோம். கர்நாடகாவில் ஒரு தொகுதியில் த லைமை தேர்தல் கமிஷன் மோசடியை அனுமதித்த தற்கு 100 சதவீத ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன. அதை நாங்கள் உங்களுக்கு காண்பிப்போம். ஜனநாயகத்தையும் அரசியலமைப்பையும் அழிக்க முயற்சிப்பவர்கள் அதற்குரிய தண்டனையை நிச்சயம் பெறுவர். இவ்வாறு அவர் கூறினார். இதை மறுத்துள்ள தேர்தல் கமிஷன் அதிகாரிகள், 'ராகுலின் புகார் ஆதாரமற்றது; இது குறித்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்குமானால், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரை காத்திருங்கள். அதுவரை பொய்யான குற்றச்சாட்டுகளை சொல்ல வேண்டாம்' என, கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

கூத்தாடி வாக்கியம்
ஜூலை 25, 2025 16:10

பப்பு சார் எலெக்ஷன் கமிஷனை மிரட்டி பார்க்க வேண்டாம். ஒரு நல் வாய்ப்பு திருந்து வதற்கு. இத்தனை நாள் ஊரை ஏமாற்றி பிழைச்சது போதும்


அருண் பிரகாஷ் மதுரை
ஜூலை 25, 2025 10:56

குறைந்த சம்பளத்தில் வேலைக்கு ஆள் கிடைக்கிறது என்ற காரணத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் முதலில் வட மாநிலத்தவர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டனர்.. வட மாநிலத்தவர் என்ற போர்வையில் வங்க தேசத்தைச் சேர்ந்த பலரும் வேலையில் அமர்ந்தனர்..இவ்வாறு வேலைக்கு வருபவர்கள் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயலில் ஈடுபட்டதால் ஆதார் எண் கட்டாயம் என்று பதிவு செய்யப்பட்டது.எப்போதும் போல நமது அரசு அதிகாரிகள் எல்லோருக்கும் ஆதார் எண் அளித்து அவர்கள் அதன் மூலம் வங்கி கணக்கு துவக்கி அடுத்து ஓட்டு உரிமையும் பெற்று விட்டார்கள்.. இதில் சிறுபான்மையினர் மிகவும் அதிகம்..இண்டி கூட்டணி ஓட்டு வங்கியாக மாறி பல இடங்களில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக உள்ளது.. எனவே எப்போதும் போல இண்டி கூட்டணி இதனை எதிர்த்து குரல் கொடுக்கிறது...


GMM
ஜூலை 25, 2025 09:53

இந்தியாவில் மக்கள் தொகை அதிகம் , மாறுபட்ட கலாச்சாரம் அதிகம் காரணமாக தேர்தல் ஆணையம் 18 முதல் 58 வரை வாக்களிக்க அனுமதி 78 வரை வேட்பு மனு தாக்கல் செய்ய அனுமதி . வாக்காளர் எண் நீக்கம் செய்த பின் இறப்பு சான்று வழங்கும் முறையை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். வாக்காளர் அட்டையில் பிறப்பு, பள்ளி சான்று எண் ... பதிவு கட்டாயம் ஆக்க வேண்டும். உண்மையான தேர்தல் இன்னும் நடைபெறவில்லை என்று தெரிகிறது. ?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 25, 2025 07:55

இறந்தவர்களை எல்லாம் ஒட்டு போட தேர்தல் அன்று தேர்தல் அதிகாரிகளான அரசு ஊழியர்கள் அனுமதிக்கும்போது அவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதில் என்ன தவறு ?


Varadarajan Nagarajan
ஜூலை 25, 2025 06:58

அரசு அதிகாரிகள் வழங்கும் போலி சான்றிதழ்களைகொண்டு இதுபோன்ற சில முக்கய ஆவணங்களை ஏஜெண்டுகள்மூலம் சட்டவிரோத குடியேறிகள் பெறுவது நாட்டின் பாதுகாப்பிற்கு பெரிய அச்சுறுத்தல். ஆனால் சில எதிர்க்கட்சிகள் நாட்டின் பாதுகாப்பைவிட தங்களது வாக்குகள்தான் முக்கியம் என நினைத்து செயல்படுவது மிகவும் துரதிஷ்ட்டமானது. இதில் சமரசம் என்பதற்கு இடம்கிடையாது.


D Natarajan
ஜூலை 25, 2025 05:29

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் கட்டாயமாக இணைக்கப் படவேண்டும் . மரண சான்றிதழ் வழங்கும்போது ஆதார் , வாக்காளர் அட்டைகலை நீக்கம் செய்ய வேண்டும். தேர்தல் கமிஷன் இந்த சீர்திருத்தம் கொண்டு வர வேண்டும்


Kasimani Baskaran
ஜூலை 25, 2025 03:46

இறந்தவர்களுக்குப்பதிலாக வங்கதேசத்தவர்களுக்கு வாக்குரிமை என்றுதான் சொல்கிறார்கள் இந்திக்கூட்டணியினர்.


சமீபத்திய செய்தி