உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்னா ஹசாரேவை ஆதரித்து சுற்றுலா பயணிகள் கையெழுத்து

அன்னா ஹசாரேவை ஆதரித்து சுற்றுலா பயணிகள் கையெழுத்து

மூணாறு : மூணாறில் அன்னா ஹசாரேவை ஆதரித்து நடத்தப்பட்ட கையெழுத்து இயக்கத்தில், சுற்றுலாப்பயணிகள் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர். ஊழலுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் அன்னா ஹசாரேவுக்கு, சுற்றுலாப்பகுதியான மூணாறில், நாளுக்கு நாள் ஆதரவு அதிகரித்து வருகிறது. கடந்த 18ல் வாயில் கருப்பு துணி கட்டி நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்று போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கையெழுத்து இயக்கம் நடந்தது. நகரின் மையப்பகுதியில், பஸ் ஸ்டாண்டிற்கு எதிரே வைக்கப்பட்டிருந்த போர்டில் பொது மக்களும்,பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் கையெழுத்திட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ