உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிகம் சம்பாதிக்கும் சிந்து: போர்ப்ஸ் பட்டியலில் இடம்

அதிகம் சம்பாதிக்கும் சிந்து: போர்ப்ஸ் பட்டியலில் இடம்

புதுடில்லி: உலகின் அதிகம் சம்பாதிக்கும் பாட்மின்டன் வீராங்கனைகளில் இந்தியாவின் சிந்து முதலிடம் பிடித்தார். அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிகை 'போர்ப்ஸ்'. இதன் சார்பில் 2024ல் அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீராங்கனைகள் பட்டியல் வெளியானது. பாட்மின்டன் வீராங்கனைகள் வரிசையில் இந்தியாவின் சிந்து 29, முதலிடம் பிடித்தார். இவர், 2024ல் போட்டிகளில் வென்ற பரிசுத் தொகை ரூ. 86 லட்சம், பல்வேறு நிறுவனங்களில் விளம்பர ஒப்பந்தம் வாயிலாக ரூ. 60 கோடி என சுமார் ரூ. 61 கோடி சம்பாதித்துள்ளார். 2019ல் உலக சாம்பியன் ஆன சிந்து, ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் மூவர்ணக் கொடி ஏந்திச் செல்லும் கவுரவம் பெற்றார். இதில் 'ரவுண்டு-16' போட்டியுடன் வெளியேறினாலும், தொடர்ந்து ஆறாவது ஆண்டாக போர்ப்ஸ் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.சமீபத்தில் வெங்கட்ட சாயை திருமணம் செய்த சிந்து, தரவரிசையில் 17 வது இடத்திலுள்ளார். தவிர இந்திய அளவில் அதிகம் சம்பாதிக்கும் வீராங்கனைகளில் முதலிடத்தில் உள்ளார்.இதுகுறித்து போர்ப்ஸ் வெளியிட்ட செய்தியில்,' அமெரிக்காவில் சிந்துவை அதிகம் பேர் அறிந்திருக்கவில்லை என்ற போதும், இந்தியாவில் இவர் தான் முன்னணி நட்சத்திரமாக திகழ்கிறார்,' என தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

என்றும் இந்தியன்
ஜன 01, 2025 17:13

அப்போ தோனி விராட் கோஹ்லி ரூ 150 முதல் ரூ 175 கோடி சம்பாதிக்கின்றார்களே அது எங்கேயும் சொல்லப்படவில்லையா


Kalyanaraman
ஜன 01, 2025 08:47

உலக அளவில் ஒரு விளையாட்டு வீரன் தகுதி பெறுகிறான் என்றால் தனது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் முழுமையாக அர்ப்பணித்தால் மட்டுமே சாத்தியமாகும். அதுவும் இந்தியா போன்ற நாடுகளில் சாதிப்பது மிகவும் கடினம். ஆக, கடுமையான உழைப்பு, அர்ப்பணிப்புக்கு பரிசாகத் தான் இவரது வருமானத்தை பார்க்க வேண்டும்.


Kasimani Baskaran
ஜன 01, 2025 07:39

எங்க சார் இதை ஒரு நாள் காலை சாப்பாட்டுக்கே செலவு செய்வாப்ல..


கிஜன்
ஜன 01, 2025 07:03

நோ க்ளோஸ் அப் பிளீஸ் ...


Amsi Ramesh
ஜன 01, 2025 12:05

சார் மூஞ்ச காட்டுங்க பார்ப்போம்


Kumar Kumzi
ஜன 01, 2025 12:49

ஹீஹீஹீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை