உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அய்யா தெரியாம பண்ணிட்டேன் : மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த அதிகாரி மன்னிப்பு கோரினார்

அய்யா தெரியாம பண்ணிட்டேன் : மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செய்த அதிகாரி மன்னிப்பு கோரினார்

புதுடில்லி: சண்டிகர் மேயர் தேர்தலில் பா.ஜ., வென்றதாக தவறான அறிக்கை வெளியிட்டமைக்காக சுப்ரீம் கோர்ட்டில் மன்னிப்பு கோரினார் தேர்தல் அதிகாரி அனில் மாஷிபஞ்சாப் மற்றும் ஹரியானாவின் பொது தலைநகர் சண்டிகர். அதன் மாநகராட்சி மேயர் தேர்தல் நடந்தது. ஆம் ஆத்மி - காங்கிரஸ் கூட்டணியின் 8 ஓட்டுகள் செல்லாது என்று கூறி, பாரதிய ஜனதா வேட்பாளர் வெற்றி பெற்றதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார்.அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதில் நடந்த விசாரணையின்போது, தேர்தல் அதிகாரிக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம் தெரிவித்தது. கோர்ட் உத்தரவுப்படி, தேர்தல் அதிகாரி அனில் மாஷி ஆஜரானார். அப்போது, அவரிடம் நீதிபதிகள் பல கேள்விகளை கேட்டனர்இந்நிலையில் கடந்த பிப்.,20ல் சண்டிகர் மேயர் தேர்தல் குளறுபடி தொடர்பான வீடியோ காட்சிகள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் அனைவரும் முன்பாகவும் திரையிடப் பட்டது. வீடியோவில் பா. ஜ., வேட்பாளரை மேயராக தேர்வு செய்வதற்காக ஆம் ஆத்மிக்கு ஆதரவான 8 வாக்கு சீட்டுகளை வேண்டுமென்றே தேர்தல் அதிகாரி சிதைத்த வீடியோ வெளியானது. இதன் பின்னர், நீதிபதிகள், தேர்தல் அதிகாரி அனில் மாஷி மிகப்பெரிய தவறு செய்து தனது அதிகார வரம்பை மீறியும், விதிமுறைகளை மீறியும் செயல்பட்டு உள்ளார் என முடிவு செய்து முந்தைய தேர்தல் முடிவுகளை சட்டவிரோதம் எனக்கூறி ரத்து செய்தனர். இதையடுத்து அனில் மாஷி அறிவித்த மேயர் தேர்தல் செல்லாது எனவும் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் வெற்றியே செல்லும் என உத்தரவிட்டனர். தில்லுமுல்லு செய்த தேர்தல் அதிகாரி அனில் மாஷி மீது நடவடிக்கை எடுக்க நோட்டீஸ் அனுப்பியது.இந்நிலையில் பா.ஜ.,வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவித்து தவறு செய்துவிட்டதாகவும் இதற்காக தாம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும், உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாண மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

முருகன்
ஏப் 06, 2024 14:06

இவரைப் போன்ற மனிதர்கள் நாட்டின் அவமானம் கடும் தண்டனை வழங்க வேண்டும்


ஆரூர் ரங்
ஏப் 06, 2024 11:13

கேமரா இருந்தது அவருக்கு நன்கு தெரியும். ஆம் ஆத்மி நீதிமன்றத்தை நாடலாமெனவும் தெரியும். ஆக இதையெல்லாம் எதிர்பார்த்தே செய்த இவர் யாருடைய ஏஜெண்ட்?


அப்புசாமி
ஏப் 06, 2024 09:50

இவருக்கு பா.ஜ.,வில் பெரிய்ய பதவி காத்திருக்கு.


Anantharaman Srinivasan
ஏப் 05, 2024 22:38

பல பேர் முன்னிலையில் குருட்டு தைரியத்தில் செய்வதையும் செய்து விட்டு பகிரங்க மன்னிப்பா ? எந்த தைரியத்தில் இதை செய்தார் செய்ய தூண்டியது யார் என்பது மக்களுக்கு தெரிந்தாக வேண்டும் இல்லையேல் தேர்தல் கமிஷனக்கு Black Mark


பாரதி
ஏப் 05, 2024 22:06

இதுக்குதான் வாக்கு சீட்டே ஆகாது.... எலக்ட்ரானிக் மெஷின் தான் நல்லது...


venugopal s
ஏப் 05, 2024 21:44

இதையும் நியாயப்படுத்தி பாஜகவுக்கு முட்டுக் கொடுக்க முரட்டு மோடி பக்தர்களால் மட்டுமே முடியும்!


Anantharaman Srinivasan
ஏப் 05, 2024 22:26

அதைத்தான் வரும் தேர்தலில் செய்ய துடிக்கிறார்கள் இல்லையென்றால் நானூறு இடம் வருமென்று மார் தட்ட முடியுமா? எத்தனை அதிகாரிகளை வளைத்துப்போட்டுள்ளனரோ?


vaiko
ஏப் 05, 2024 21:31

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்தியா தேர்தல் கமிசனர்கள் இதே மாதிரி உச்ச நீதி மன்றத்தில் வந்து கதற pokinraarkal


GMM
ஏப் 05, 2024 21:30

மேயர் தேர்தல் குறைந்த அளவு வாக்கு தேர்தல் அதிகாரி எட்டு வாக்கு செல்லாது என்று அறிவிக்க வழக்கை உச்ச நீதிமன்றம் எடுக்கிறது தேர்தல் ஆணையம் பணி? பொதுவாக ஓட்டு எண்ணும் போது, கட்சிகள் முன் தான் எண்ணுவர் இவர் எப்படி தனி அறையில் இருந்து வாக்கு சீட்டை கசக்க முடியும்? வெப் கேமரா இருப்பது யாரும் அறிவர் வீடியோ பதிவை ஒப்படைத்து காங்கிரஸ் ஆம் ஆத்மி என்று கூற முடியாது ? அரசு அதிகாரிகள் மன்னிப்பு புரிய முடியாத புதிர்


K.n. Dhasarathan
ஏப் 05, 2024 21:25

உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டால் ஆச்சா ? மக்களிடத்தில் மன்னிப்பு கேட்டு அனைத்து செய்தித்தாள்களிலும் போட்டோவோடு அவரின் செய்தி வரணும் , முக்கியமாக , அவரை பதவியை விட்டு டிஸ்மிஸ் பண்ணனும் மற்ற ஊழல் அதிகாரிகளுக்கு ஒரு பாடம் வேண்டும்


Easwar Kamal
ஏப் 05, 2024 21:07

எதுக்கு பெரிய வார்த்தை எல்லாம் பேசிகிட்டு நேரா செய்ய சொன்னவன்கிட்ட போனா போதுமே உடனே பதவி வாஷிங் மெஷின் போட துணி மாதிரி பரி சுத்தம் ayuduvae.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை