உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி; தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு

தொகுதி பங்கீட்டில் சிறிய கட்சிகள் அதிருப்தி; தே.ஜ., கூட்டணிக்குள் மீண்டும் சலசலப்பு

பாட்னா : பீஹார் சட்டசபை தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில், தே.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளின் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதால், மீண்டும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. பீஹார் சட்டசபைக்கு நவ., 6ல், 121 தொகுதிகளுக்கும், நவ., 11ல் 122 தொகுதிகளுக்கும் இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஆளும் தே.ஜ., கூட்டணி சார்பில் தொகுதிகள் பங்கீடு தொடர்பான பேச்சு முடிவடைந்து, நேற்று முன்தினம் அது குறித்த அறிவிப்பு வெளியானது. அதில், பா.ஜ., மற்றும் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் தலா, 101 தொகுதிகளில் போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. வருத்தம் சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சிக்கு 29 இடங்களும், மத்திய அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா, ராஜ்யசபா எம்.பி.,யான உபேந்திர குஷ்வாஹாவின் ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா ஆகிய சிறிய கட்சிகளுக்கு தலா ஆறு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், தொகுதி பங்கீட்டில் இந்த இரு கட்சிகளும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன. இதுகுறித்து ஜிதன் ராம் மஞ்சி நேற்று கூறுகையில், “தலைமை என்ன முடிவு எடுக்கிறதோ, அதற்கு நாங்கள் கட்டுப்படுகிறோம். ஆனால், எங்களை குறைத்து மதிப்பிட்டு, குறைவான தொகுதிகளை ஒதுக்கியது தான் வருத்தத்தை அளிக்கிறது. தேர்தலில் நிச்சயம் இது எதிரொலிக்கும்,” என்றார். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுகள் ஆரம்பித்தபோது, 15 இடங்களை கேட்டுப்பெற மஞ்சி முயற்சித்தார். கடைசியாக, எட்டு தொகுதிகளாவது கிடைக்கும் என எதிர்பார்த்தார். ஆனால், அதற்கும் குறைவாக வெறும் ஆறு சீட்களே ஒதுக்கப்பட்டதால், அவர் மிகுந்த அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அதே போல், ராஷ்ட்ரீய லோக் மோர்ச்சா தலைவர் உபேந்திர குஷ்வாஹாவும் தன் சமூக வலைதளத்தில் அதிருப்தியை வெளிப் படுத்தினார். அதில் கூறப்பட்டிருப்பதாவது: கட்சி தொண்டர்கள் என்னை மன்னிக்க வேண்டுகிறேன். தேர்தலில் ஆறு தொகுதிகள் மட்டுமே கிடைத்திருப்பது நிச்சயம் உங்களுக்கு ஏமாற்றத்தை தந்திருக்கும். நம் கட்சி சார்பில் வேட்பாளர்களாக களத்தில் இறங்க ஆர்வமாக இருந்தவர்களுக்கு, இம்முடிவு வருத்தத்தை கொடுத்திருக்கும். விமர்சனம் க ட்சி தலைமைக்கும், கட்சிக்கும் இருக்கும் கட்டுப்பாடுகள் மற்றும் வரம்புகள் குறித்து நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே, ஏமாற்றத்தை புறந்தள்ளிவிட்டு தேர்தலுக்காக அனைவரும் பணியாற்ற வேண்டும். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். பீ ஹார் சட்டசபை தேர்தலை பொறுத்தவரை, தே.ஜ., கூட்டணியில் உள்ள நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் தான் அதிக தொகுதிகளில் போட்டியிடும். ஆனால், அந்த வழக்கம் முதல் முறையாக இந்த தேர்தலில் மாறி இருக்கிறது. இம்முறை, பா.ஜ.,வுக்கு இணையாக 101 தொகுதிகளில் மட்டுமே நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடுகிறது. இதன் மூலம், 'நிதிஷ் குமாரை, பா.ஜ., ஓரங்கட்டப் பார்க்கிறது' என, காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜேஷ் ரத்தோர் விமர்சித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

தத்வமசி
அக் 14, 2025 07:35

எழுத்து நிற்கவே வக்கு இல்லையாம், பத்து பொண்டாட்டி கேட்குதாம் - இது தான் குட்டி கட்சிகளின் நிலைமை. தமிழகத்தில் இரண்டுக்கு மேல் தாண்டாத கட்சிகளின் அலம்பல்களை பார்க்கிறோம். அது போலத் தான். பேராசை அரசியலின் முக்கியமான ஆயுதம். உடனே பிஜேபியை விமரிசிக்க வேண்டாம். அது சிறிய மற்றும் பெரிய கட்சிகளுக்கு பொருந்தும். கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தராத மாநிலம் தமிழகம். ஆனால் பிகாரில் அனைத்து கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சியில் அதிகாரம் உண்டு. அதனால் உடனே பிஜேபி மேல் உபிக்கள் பாய வேண்டாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை