வாசகர்கள் கருத்துகள் ( 10 )
தமிழ்நாட்டுக்கு கவர்னர் தேவை . . . ? . . மக்களை கவர்வதில் , சிஎம் - க்கும் கவர்னருக்கும் , கடும் போட்டி பரபரப்பா இருக்கும் . . . ராகுல் என்ற பெரிய அப்பாடக்கரே ஓடீயே போய்ட்டாரு - - - இந்த சில்லு அப்பாடக்கரு ? . . .
அதாவது , ஏதாவது ஊரில் , அல்லது சிட்டியில் , அந்த ஊர் இன்ஸ்பெக்டரோ , டிஎஸ்பி-யோ , ஏ-சி யோ , அந்த ஊர் பெரிய அப்பாடக்கருக்கு எதிரா , கேஸ் போட்டு உள்ள தள்ளிட்டார்னா , ஊரில் பல பிரச்சினை வரும் , அதனால , அந்த அதிகாரிக்கு கொஞ்சம் மிரட்டல் , பிரச்சினை வரும் , அதனால அந்த அதிகாரியை கொஞ்ச நாள் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பர் போட்டு , அமைதியா இருக்க சொல்வாங்க , ஒரு ஆறு மாசம் கழிச்சு , மறுபடி கொண்டுவந்து அதே கேஸை அவரிடமே ஒப்படைப்பாங்க . . . . அதுமாதிரிதான் - மறுபடி ஆட்டத்தை ஆரம்பிக்க சொல்றாங்க . . .
மிகத்தகுதியானவர்
திறமையானவர். இந்த 2வது வாய்ப்பில் எதிர்கட்சிகளை கட்டுப்படுத்த முழு கவனத்தைச் செலுத்தி நாட்டை காக்க வேண்டும்.
காங்கிரசை வசை பாட ஆளுங்க வாணாமா?
முடிவு பண்ணிருச்சோ
1). உத்தரபிரதேசத்தில் தேர்தல் வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று சொன்னால் மிகையாகாது. 2). நல்ல பேச்சாளர் அதுவும் ஒரு காரணம். 3). ஆண்டவர் கமல்ஹாசனை விவாதத்தில் என்ன சேதி என்று கேட்டார். 4). வானதி சீனிவாசன் ஓரம் கட்டப்பட்டு அதற்கு பதிலாக மகளிர் அடிப்படையில் தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். 5). அதாவது 2029 தேர்தலில் உத்தரபிரதேசத்தில் வெற்றி வாகை சூட வேண்டும் என்பதே கட்சியின் இப்போதைய நிலை.
சிலருக்கு கட்சி, ஆட்சியில் முக்கிய பொறுப்பு கொடுக்க கட்சி மேலிடம் அவர்களை பொறுமையை கடை பிடிக்க வைக்கும். பா.ஜ.வில் இது எப்போதும்நடப்பதுதான். பொறுமையுடன் இருப்பவர் பதவியையும், பொறுப்பையும், ஆட்சி அதிகாரத்தையும் பெறுவர். பொறுமை இல்லாதவர்கள் கட்சி மீது குறை சொல்லி ஒன்று கட்சியை விட்டு வெளியேறி விடுவர் அல்லது மாற்றுக் கட்சிக்கு சென்று விடுவர். அந்த வகையில் ஸ்மிருதி ராணிக்கு மீண்டும் பதவியும், பொறுப்பும் கிடைக்கப் பெறும் சூழல் உருவாகி உள்ளது.
ஸ்மிருதி இரானி 2014 ல் அமேதியில் ராகுல் காந்தியிடம் ஒரு லட்சத்து எட்டாயிரம் வாக்குகளில் தோல்வியடைந்தார். ஆனால் 2019 ல் மீண்டும் போட்டியிட்டு ராகுலை அவரது சொந்த மண்ணிலேயே தோற்கடித்தார். இந்தியாவில் வெற்றி பெறுவதற்கு மிகவும் கடினமான மற்றும் சவாலான தொகுதிகளில் இதுவும் ஒன்றாகும். அமேதியில் ஏற்பட்ட அவமானகரமான தோல்வியின் காரணமாக, ராகுல் காந்தியை வயநாடுக்கும் பின்னர் ராய்பரேலிக்கும் தப்பி ஓடச் செய்தார். தோல்விக்குப் பிறகு ராகுல் அமேதிக்குத் திரும்பத் துணியவே இல்லை. ஸ்மிருதி தொடர்ந்து ஜவுளி, மனிதவள மேம்பாடு மற்றும் கல்வி ஆகிய துறைகளின் அமைச்சராகப் பணியாற்றினார், மேலும் அரசாங்கத்தின் மிக முக்கியமான சில துறைகளைக் கையாண்டார். 2024 ல், அவர் அமேதி தொகுதியில் காங்கிரஸின் கிஷோரி லால் சர்மாவிடம் தோல்வியடைந்தார். அதன்பின் அவர் தீவிர அரசியலில் இருந்து விலகிய பிறகு மீண்டும் தொலைக்காட்சிக்குத் திரும்பினார். அப்போது, எதிர்க்கட்சிகள் அவரைக் கேலி செய்தன. ஆனால் ஸ்மிருதி இரானி ஒருபோதும் தனது கட்சியான பாஜகவை விட்டு விலகவில்லை. அடுத்த இரண்டு ஆண்டுகளை அவர் அரசியல் வெளிச்சத்திலிருந்து விலகியே கழித்தார். ஆனாலும் கட்சிக்கு ஒரு விசுவாசமான தொண்டராகவே இருந்தார். அவர் வங்காளத்திலும் அசாமிலும் பாஜகவுக்காக அயராது பிரச்சாரம் செய்தார். சிறிய கூட்டங்களில் கூட உரையாற்றி, வங்காளிகளைத் தங்களில் ஒருவராகக் கருதி, அவர்களுடன் வங்காள மொழியில் சரளமாகப் பேசினார். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பவன் கேடா, சுப்ரியா ஸ்ரீநாத் மற்றும் அபிஷேக் மனு சிங்வி போன்ற தனது சகாக்களைப் போல அவர் ராஜ்யசபா இடத்தையோ அல்லது ஒரு அமைப்புப் பதவியையோ கோரவில்லை. அவர் தனது கட்சிக்கும் நாட்டிற்கும் ஆற்ற வேண்டிய கடமையை தொடர்ந்து செய்து கொண்டே வந்தார். தனது கட்சி மீதான அவரது பொறுமைக்கும் விசுவாசத்திற்கும் வெகுமதியாக, அவருக்கு பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டு, உத்தரப் பிரதேசத்திற்கான கட்சியின் பொறுப்பாளராகவும் ஆக்கப்பட்டார். அடுத்ததாக ராஜ்யசபா எம்.பி பதவியும் அவருக்கு வயங்கப்பட இருக்கிறது. இதுதான் பாஜகவுக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி, ராஷ்ட்ரிய ஜனதா தளம், சமாஜ்வாடி கட்சிகளுக்கும் இடையிலான வித்தியாசம். ஒன்று கட்சிக்கும் நாட்டிற்கும் காட்டும் விசுவாசத்திற்கு வெகுமதி அளிக்கிறது, மற்றொன்று பிரதமர் மோடியை மிகக் கடுமையாக வசை பாடுபவர்களுக்கும், ராகுல் காந்தியின் அடிவருடிகளுக்கும் வெகுமதி அளிக்கிறது!
இவர் தானே பப்பு பிளயிங் கிஸ் கொடுத்தார் என புகார் கூறினார்… வேறு ஆட்களே கிடைக்கவில்லையா
மேலும் செய்திகள்
டிரான்பார்மரில் தீ விபத்து
1 hour(s) ago
‘முதியோர் வயது வரம்பினை 50ஆக குறைக்க வேண்டும்’
1 hour(s) ago
மின் தடையை கண்டித்து எம்.எல்.ஏ., மறியலால் பரபரப்பு
1 hour(s) ago
2 தொகுதிகளுக்கு ஒரு ஐ.ஏ.எஸ்., நேரு எம்.எல்.ஏ., யோசனை
1 hour(s) ago
இன்ஸ்டாவில் கலக்கும் மத்திய அமைச்சர்கள்
1 hour(s) ago
சாலை விரிவாக்கம் ஜான்குமார் எம்.எல்.ஏ.,
1 hour(s) ago