மேலும் செய்திகள்
குழந்தைக்குள் ஒரு குழந்தை ஹூப்பள்ளியில் ஆச்சரியம்
2 hour(s) ago
ஆர்.எஸ்.எஸ்.,சில் இணைந்தார் கேரள மாஜி டி.ஜி.பி., தாமஸ்..
2 hour(s) ago
தேசத்திற்கான 100 ஆண்டு சேவை: பெரும் சவால்கள்
4 hour(s) ago | 1
பாகல்கோட்: தந்தை கொலையில் மகன், மருமகள் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சொத்து தகராறில் கூலிப்படை ஏவி, தீர்த்துக்கட்டியது தெரிய வந்துள்ளது.பாகல்கோட் தாலுகா, திம்மாபுரா கிராமத்தில் வசித்தவர் சன்னப்பா, 66. கடந்த 25ம் தேதி திம்மாபுரா அருகே, ராம்புரா கிராமத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். அரிவாளால் வெட்டியும், தலையில் கல்லை போட்டும், மர்ம நபர்கள் கொன்றது தெரிந்தது.பாகல்கோட் ரூரல் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த கொலை வழக்கில், விஜயபுரா நிடகுந்தியின் மகேஷ் மரடிமத், 45, நேற்று முன்தினம் காலை கைது செய்யப்பட்டார்.விசாரணையில் சன்னப்பாவை அவரது மகன் சன்னபசப்பா, 38, மருமகள் சிவபசவம்மா, 36, உறவினர் ரமேஷ் மனகுளி, 34, ஆகியோர், கொலை செய்ய கூறியதும், இதற்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததும் தெரிந்தது.இதையடுத்து அவர்கள் மூன்று பேரும், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டனர். சன்னப்பா பெயரில் 37 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்தை தனது பெயருக்கு மாற்றித் தரும்படி, சன்னபசப்பா கேட்டுள்ளார்.அவர் மறுத்ததால், ஆத்திரம் அடைந்த மகன், மருமகள், உறவினர் மூன்று பேரும் சேர்ந்து, திட்டம் தீட்டி, ரமேஷ் மனகுளியை கூலிப்படையாக ஏவிக் கொன்றதும், அவருக்கு 3 லட்சம் ரூபாய் கொடுத்ததும் அம்பலமானது. நான்கு பேரிடமும் விசாரணை நடக்கிறது.
2 hour(s) ago
2 hour(s) ago
4 hour(s) ago | 1