உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சபாநாயகர் தேர்தல்: காங்., மீது திரிணமுல் அதிருப்தி?

சபாநாயகர் தேர்தல்: காங்., மீது திரிணமுல் அதிருப்தி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சபாநாயகர் தேர்தலில், காங்., சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட விவகாரத்தில் திரிணமுல் காங்கிரஸ் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த முடிவை காங்., தன்னிச்சையாக எடுத்துள்ளதாக அக்கட்சி தலைவர்கள் கூறியுள்ளனர்.

வேட்புமனு

லோக்சபா சபாநாயகர் பதவிக்கு போட்டியிட ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி இடையே ஒரு மித்த கருத்து ஏற்படவில்லை. இதனையடுத்து தேஜ கூட்டணி சார்பில் ஓம் பிர்லா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். காங்கிரஸ் சார்பில் சுரேஷ் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

அதிருப்தி

தேர்தலுக்கு முன்பாகவே, மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் மற்றும் திரிணமுல் காங்கிரஸ் சார்பில் மோதல் ஏற்பட்டது. இரு கட்சிகளும் அங்கு தனித்தனியே போட்டியிட்டன. தற்போது தன்னிச்சையாக வேட்பாளரை அறிவித்த காங்கிரஸ் மீது திரிணமுல் காங்., அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலிடம் முடிவு

இது தொடர்பாக திரிணமுல் காங்., மூத்த தலைவர் சுதீப் பந்தோபாத்யாய் ஆங்கில டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: வேட்பாளர் அறிவிப்பு குறித்து திரிணமுல் காங்., கிடம் ஆலோசனை நடத்தப்படவில்லை. டிவி மூலம் பார்த்து தான் நான் தெரிந்து கொண்டேன். டெப்ரிக் ஓ பிரையனும் என்னிடம் கேட்டார். இது குறித்து எந்த ஆலோசனையும் செய்யப்படவில்லை என தெரிவித்தேன். இது குறித்து காங்., விளக்கம் அளிக்க வேண்டும். காங்., வேட்பாளருக்கு ஆதரவு அளிப்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். எங்கள் தலைவர்கள் முடிவு செய்வர். கட்சி மேலிடம் அறிவிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

கடைசி நிமிடம்

இது தொடர்பாக காங்., வட்டாரங்கள் கூறியதாவது: வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி 10 நிமிடங்கள் மட்டுமே இருந்தது. கடைசி நேரத்தில் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்பட்டதால், யாரிடமும் ஆலோசனை நடத்தப்படவில்லை. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ராகுல் விளக்கம்

இதனிடையே, தேர்தலில் ஆதரவு கேட்டு திரிணமுல் காங்., தலைவர்களிடம் சுரேஷ் பேசி உள்ளதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜியிடம், வேட்பாளர் அவசரமாக தேர்வு செய்யப்பட்டது குறித்து ராகுல் விளக்கம் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 25, 2024 22:22

திரிணமுல் மமதா இருக்கும்வரையில் காங்கிரஸ் கட்சிக்கு என்றும் தலைவலிதான்.


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 21:49

மத்தியில் நிதிஷ் அல்லது சந்திரபாபு இருவருமே ஆதரவை விலக்கிக் கொண்டாலும் முமைதா பேகம் ஆதரவு அளிப்பார் .....


sankaranarayanan
ஜூன் 25, 2024 21:30

கூட்டணியிலுள்ளோர் இப்போதாவது காங்கிரசின் நிலைப்பாட்டை தெரிந்து கொள்ளுங்கள் உங்களை சுமை தூக்க வைத்துவிட்டு இவர்கள் உங்கள் மேலே சவாரி செய்பவர்கள். இது காலம் காலமாக நடந்துள்ளது இனியாவது விழித்துக்கொண்டு உங்கள் ஆதரவை விளக்கிக்கொள்ளுங்கள்


kulandai kannan
ஜூன் 25, 2024 20:12

நல்ல வேளை, புள்ளிக் கூட்டணி ஆட்சி அமைக்க முடியவில்லை.


S. Narayanan
ஜூன் 25, 2024 19:32

இரண்டும் ஒரே சேற்றில் ஊறிய மட்டை. இதிலென்ன அதிருப்தி.


GMM
ஜூன் 25, 2024 18:21

ராகுல் இரு தொகுதியில் வென்ற மிதப்பு. காங்கிரஸ் 99 வெற்றி பெற்ற ஆணவம்? எவ்வளவு பெரிய கூட்டணி. ஸ்டாலின், யாதவ், மம்தாவை கலந்து ஆலோசிக்க வேண்டும். கூட்டணி அமையாவிட்டால் காங்கிரஸ் 9 தொகுதியில் ஜெயிப்பது கடினம். ? மக்கள் மனநிலை புரியாமல் ராகுல் தப்பு கணக்கு போட்டு வருகிறார்.


மேலும் செய்திகள்







புதிய வீடியோ