உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

பயங்கரவாதிகளின் அட்டூழியத்திற்கு கண்டனம்: ஸ்ரீநகரில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், காஷ்மீரில் பல இடங்களில் பேரணி ஏந்தி பேரணி நடந்தது.காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் இரண்டு வெளிநாட்டினர் உள்ளிட்ட 28 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர். இதற்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். வெளிநாட்டினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், இச்சம்பவத்தை கண்டித்து காஷ்மீரில் பல இடங்களில் பொது மக்கள் உள்ளிட்ட பலர் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி சென்றனர். ஸ்ரீநகர், தாக்குதல் நடந்த பஹல்காம், குப்வாரா உள்ளிட்ட பல இடங்களில் இந்த பேரணி நடந்தது.இதில் கலந்து கொண்டவர்கள், பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை ஏற்க முடியாது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து கொள்வதாக தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kulandai kannan
ஏப் 23, 2025 09:44

தமிழகம் முழுதும் பாஜக மெழுகுவர்த்தி ஊர்வலம் நடத்தவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு அறிவுப் பஞ்சம் என்றாகி விடும். உப்பு சப்பில்லாத விஷயங்கள அங்கெல்லாம் போராடும் திராவிட கட்சிகளிடம் பாடம் கற்கவேண்டும்.


Rajagopalan
ஏப் 23, 2025 07:23

By liberating POK terrorism will come to an end


Kulandai kannan
ஏப் 23, 2025 09:44

இருக்கின்ற பிரச்சினை போதாதா??


Kasimani Baskaran
ஏப் 23, 2025 03:54

அமைதி திரும்பி விட்டது என்று பலர் நினைத்து அங்கு சுற்றுலா சென்றுள்ளனர்.. தீவிரவாதம் முழுவதும் நின்றபாடில்லை என்பது சுடும் உண்மை. இதனால் காஷ்மீரிகளின் வாழ்க்கைதான் பாதிக்கப்படும்.


Srinivasan M
ஏப் 23, 2025 03:18

100% pre-planned and orchestrated activity.


எம். ஆர்
ஏப் 22, 2025 23:08

ஒன்றிய அரசு இனி பாதுகாப்பை பலபடுத்தி அதை உறுதி செய்ய வேண்டும் உயிரிழந்த ஆன்மாக்கள் சாந்தி அடையட்டும் அவர்களின் குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் இழப்பை தாங்கிக் கொள்ளும் சக்தியை தர இறைவனை வேண்டுகிறேன் மனம் உண்மையில் வெம்புகிறது ஈன மூர்க்கன்கள் வெறி என்று அடங்குமோ?


Jagannathan Narayanan
ஏப் 23, 2025 06:45

அது என்ன ஒன்றிய அரசு.