உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

 ஓட்டுகளை திருடுவது தேச விரோதம்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

புதுடில்லி: ''ஓட்டுகளை திருடுவது தேசத்துக்கு விரோதமானது. இந்த குற்றத்தை தான், மத்தியில் ஆளும் பா.ஜ., செய்து வருகிறது. தேர்தல் கமிஷனை கைப்பற்றி, நாட்டின் ஜனநாயகத்தையும் சீர்குலைக்கிறது,'' என, காங்கிரசை சேர்ந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டினார். லோக்சபாவில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் நேற்று பேசியதாவது: ஓட்டு திருட்டு தேச விரோதமானது; ஆனால் இந்த குற்றத்தை செய்து தான், பா.ஜ., ஆட்சிக்கு வந்துள்ளது. சுதந்திரமாக, நடுநிலையுடன் செயல்பட வேண்டிய தேர்தல் கமிஷனை மிரட்டி, தங்கள் கட்டுப்பாட்டில் அக்கட்சி வைத்துள்ளது. அதன் மூலம் ஓட்டு திருட்டில் ஈடுபடுகிறது. ஆளுங்கட்சியின் அராஜகத்துக்கு தேர்தல் கமிஷனும் துணை போகிறது. தேர்தல் கமிஷனை கைப்பற்றி, நாட்டின் ஜனநாயகத்தை பா.ஜ., சீர்குலைக்கிறது. தேர்தல் கமிஷனர்களை நியமிக்கும் குழுவிலிருந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கியது ஏன்? அதற்கான நோக்கம் என்ன? அந்த குழுவில் எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. 2023 டிசம்பரில் இயற்றப்பட்ட புதிய சட்டத்தின்படி, எந்தவொரு தேர்தல் கமிஷனரையும் பதவியில் இருக்கும் போது தண்டிக்க முடியாது. யாரை திருப்திப்படுத்த இந்த சட்டம்? ஓட்டுச்சாவடி மையங்களில் உள்ள, 'சிசிடிவி' காட்சிகளை தேர்தல் முடிந்த, 45 நாட்களில் அழிக்க உத்தரவிட்டது ஏன்? மக்கள் சக்தி மற்றும் சமத்துவத்தை மஹாத்மா காந்தி வலியுறுத்தினார். ஆனால் பா.ஜ.,வின் வழிகாட்டியான ஆர்.எஸ்.எஸ்., சமத்துவத்தை எதிர்க்கிறது. அனைவரும் சமம் என்பதை அந்த அமைப்பு எதிர்க்கிறது. தாங்கள் தான் உயர்ந்தவர்கள் என, அந்த அமைப்பு நினைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரசுக்கு தகுதியில்லை!

ஜனநாயகத்தை பற்றி பேச காங்கிரசுக்கு தகுதியே இல்லை. 1976ல், ஒரேயொரு சட்டத்திருத்தத்தின் மூலம், ஜனாதிபதியின் அனைத்து உரிமைகளையும் பறித்து, அப்பதவியை, 'ரப்பர் ஸ்டாம்ப்' ஆக அக்கட்சி மாற்றியது. ரேபரேலியில் ஓட்டுகளை திருடியே முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா வென்றார். காங்., ஆட்சியில் இருந்த போது, எதிர்க்கட்சி தலைவர் பரிந்துரைத்த தேர்தல் கமிஷனரையா நியமித்தனர்? தயவு செய்து வரலாற்றை தெரிந்து ராகுல் பேச வேண்டும். இல்லை என்றால் ஒவ்வொரு முறையும் இப்படித்தான், 'நோஸ்கட்' ஆக வேண்டியிருக்கும்.

- நிஷிகாந்த் துபே, லோக்சபா எம்.பி., - பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

shyamnats
டிச 10, 2025 07:43

அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்காக இவரை ஏன் வழக்கு பதிந்து உள்ளே தள்ள மாட்டேன் என்கிறார்கள். உளறலுக்கு அளவில்லை, ராவுல் வின்சியும், பிரியங்காவும் ஜெயிப்பது மட்டும் தேச விரோதமில்லையா? நாட்டின் மதிப்பு மிக்க ஒரு நிர்வாக அமைப்பின் மீது அவதூறு சேற்றை வாரி இறைப்பது கடுமையாக தண்டிக்க பட வேண்டிய குற்றமாகும்.


A.Muralidaran
டிச 10, 2025 07:29

அந்த மகாத்மாவே சுதந்திரம் அடைந்தவுடன் காங்கிரசை கலைக்கச் சொன்னார் இந்தியா நலம் பெற. அதைச் செய்யாமல் இப்போது ஓரு குடும்பம் மட்டும் அனுபவித்து கொண்டுள்ளது


ramani
டிச 10, 2025 06:52

ஓட்டுகளை திருடுவது தேச துரோகம் என்றால் நீங்க எல்லாம் திருடுவது எதில் சேர்த்தி.


karupanasamy
டிச 10, 2025 01:56

இவனுடைய அப்பனை கொன்றவர்களுடன் வட்டமிடும் கழுகால் வசந்த சேனையால் திட்டமிட்டு கலைக்கப்பட்டதுவைத்திருக்கும் இவனுக்கு தேசம் என்றால் என்ன என்று தெரியுமா?


சமீபத்திய செய்தி