உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பியுங்கள்; புகார் கூறிய தேஜஸ்விக்கு கெடு விதித்தது தேர்தல் கமிஷன்

ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பியுங்கள்; புகார் கூறிய தேஜஸ்விக்கு கெடு விதித்தது தேர்தல் கமிஷன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: வாக்காளர் பட்டியலில் தனது பெயர் இல்லை என கூறிய தேஜஸ்வி யாதவுக்கு, முதலில், நாளை மறுநாள் ஆகஸ்ட் 8ம் தேதிக்குள் ஆவணங்களை சமர்ப்பியுங்கள் என்று 2வது முறையாக தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.தேர்தல் கமிஷன் வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் தன் பெயரே இல்லை' என, பீஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் குற்றஞ்சாட்டிய நிலையில், 'அவர் காண்பித்த வாக்காளர் அடையாள அட்டை அதிகாரப்பூர்வமாக வழங்கப்பட்டது அல்ல' என, தேர்தல் கமிஷன் விளக்கம் அளித்துள்ளது. மேலும் வாக்காளர் அடையாள அட்டையின் அசலை அளிக்குமாறும் தேர்தல் கமிஷன் அவருக்கு 'நோட்டீஸ்' அனுப்பி இருந்தது. தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு தொடர்பாக நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், வரைவு வாக்காளர் பட்டியலில் 204வது ஓட்டுப்பதிவு மையத்தில் 416வது வரிசை எண்ணில் உங்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. பாட்னா கலெக்டர் இதை உறுதி செய்துள்ளார் என தேர்தல் கமிஷன் கூறியிருந்தது. ஆனால், வாக்காளர் அடையாள அட்டைகள் விவரங்கள் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில் இதுவரை அவர் அனுப்பவில்லை. தற்போது மீண்டும் நாளை மறுநாளுக்குள் ( ஆகஸ்ட் 8) ஆவணங்களை சமர்ப்பிக்கும் படி தேர்தல் கமிஷன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. முதலில் ஆவணங்களை சமர்ப்பியுங்கள் என கூறிய தேர்தல் கமிஷன், தேஜஸ்வி யாதவ் ஏன் தொடர்ந்து ஆதாரமற்ற கூற்றுக்களைச் சொல்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை