உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வெற்றியே அளவுகோல்!

வெற்றியே அளவுகோல்!

காங்கிரஸ் கட்சியுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை பல்வேறு கட்டங்களாக டில்லியில் நடைபெற்றது; தொடர்ந்து நடைபெறும். எத்தனை தொகுதிகள் என்பது முக்கியம் இல்லை. வெற்றியே அளவுகோல். அதன் அடிப்படையில் முடிவு செய்வோம்.அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி

கவலை இல்லை!

மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என திரிணமுல் காங்கிரஸ் கூறி வருகிறது. எங்களுக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. எப்படி போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிலோக்சபா எம்.பி., காங்கிரஸ்

விடுமுறை வேண்டும்!

அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக நாளில் மத்திய அரசு அரை நாள் விடுப்பு அறிவித்துள்ளது. ஹிந்துக்கள் பெரும்பான்மை உடைய பீஹாரில், மாநில அரசு முழு நாள் விடுமுறையும், மதுக்கடைகள், இறைச்சிக் கடைகளை மூடவும் உத்தரவிட வேண்டும்.கிரிராஜ் சிங்மத்திய அமைச்சர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை