உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாலக்காட்டில் இன்று சூபி இசை நிகழ்ச்சி

பாலக்காட்டில் இன்று சூபி இசை நிகழ்ச்சி

பாலக்காடு ; பாலக்காடு ராபாடி கலையரங்கில், 'சூபி' இசை நிகழ்ச்சி இன்று மாலை நடக்கிறது.பாலக்காடு மையமாகக் கொண்டு செயல்படும், பாடல்களை விரும்புவோரின் 'மெஹபில்' அமைப்பு, 12ம் ஆண்டு விழாவின் ஒரு பகுதியாக, இன்று 'சூபி' இசை நிகழ்ச்சி நடத்துகிறது.பாலக்காடு ராபாடி கலையரங்கில், மாலை 5:00 மணி முதல் இரவு, 9:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில், புதுடில்லியை மையமாகக் கொண்டுள்ள 'ஷார் யார்' (நான்கு நண்பர்கள்) என்ற சூபி சங்கீத குழுவின் இசைக்கச்சேரி நடக்கிறது.இந்த இசை நிகழ்ச்சியில், பாடத் தெரிந்த யார் வேண்டுமானாலும், மேடையில் ஏறி பாடலாம் என்ற சிறப்பு உள்ளது. விழா ஏற்பாடுகளை அமைப்பின் நிர்வாக உறுப்பினர்களான நந்தகுமார், மனோஜ், பாபு, நீரஜ் ஆகியோர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை