உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மாண்டியாவில் குடியேறிய சுமலதா

மாண்டியாவில் குடியேறிய சுமலதா

மாண்டியா: மாண்டியாவின் முன்னாள் எம்.பி., சுமலதா அம்பரிஷ். சுயேச்சை எம்.பி.,யாக இருந்த இவர், தற்போது பா.ஜ.,வில் இணைந்துள்ளார். 2024 லோக்சபா தேர்தலில், சீட் பெற அதிகபட்சமாக முயற்சித்தார். பல முறை டில்லி சென்று, மேலிட தலைவர்களை சந்தித்து, சீட் கேட்டார். ஆனால் ம.ஜ.த.,வுடன் பா.ஜ., கூட்டணி அமைத்ததால், சீட் கை நழுவியது.மாண்டியாவில் குமாரசாமி போட்டியிட்டு, வெற்ற பெற்று மத்தியில் கனரக தொழில் துறை அமைச்சராக இருக்கிறார். தனக்கு சீட் கிடைக்காததால் அதிருப்தி அடைந்த சுமலதா, பிரசாரத்துக்கும் செல்லவில்லை. ஓராண்டாக அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார்.“நவம்பருக்கு பின் மாண்டியாவுக்கு வருவேன். இங்கேயே வசிப்பேன்,” என, அவர் கூறியிருந்தார். அதன்படி மாண்டியாவில் புதிதாக வாடகை வீடு பார்த்து, நேற்று பூஜை செய்து குடியேறினார்.வரும் 2028 சட்டசபை தேர்தலில், மாண்டியா தொகுதியில் சுமலதா போட்டியிட திட்டமிட்டுள்ளார். இதற்கு தயாராகும் நோக்கில், மாண்டியாவில் குடியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது. வரும் நாட்களில் கட்சி தொண்டர்கள், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை