உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரியுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரியுங்கள்: முதல்வர் ஸ்டாலினுக்கு தொலைபேசியில் ராஜ்நாத் சிங் வேண்டுகோள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஸடாலின் இடம் தொலைபேசியில் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வேண்டுகோள் விடுத்துள்ளார்.துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க செப்., 9ல் தேர்தல் நடக்கும் என்றும், ஓட்டுப்பதிவு முடிந்ததும், அன்றைய தினம் மாலை 5:00 மணிக்கு பின், ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7ம் தேதி துவங்கிய நிலையில், வரும் 21 வரை மனு தாக்கல் செய்யலாம்.வேட்புமனு தாக்கல் முடிவடைய இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், டில்லியில் உள்ள பா.ஜ., தலைமையகத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், அக்கட்சியின் பார்லிமென்ட் குழு கூட்டம் நடந்தது. கூட்டம் முடிவில் துணை ஜனாதிபதி தேர்தலில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, தமிழகத்தைச் சேர்ந்தவரும், மஹாராஷ்டிரா மாநில கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன், 68, தேர்வு செய்யப்பட்டு உள்ளார்.தற்போது சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டும் பணி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அந்த பணியை தொடங்கி உள்ளார். அந்தவகையில் முதல்வர் ஸ்டாலினை ராஜ்நாத் சிங் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். துணை ஜனாதிபதி தேர்தலில் தேஜ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ராஜ்நாத் சிங் முன்வைத்தார் என வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. பல மாநில முதல்வர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ராஜ்நாத் சிங் ஆதரவு கோரி வருகிறார் என தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Natarajan Ramanathan
ஆக 18, 2025 22:14

நாணய வெளியீட்டு விழாவிற்கு வந்து சிறப்பித்த ராஜ்நாத் சிங் தமிழக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.


V Venkatachalam
ஆக 18, 2025 21:23

ராஜ் நாத் சிங் அவர்களே என்ன இப்படி மாட்டி விட்டீர்கள்? எங்க அப்பா வின் அப்பாவுக்கு நாணயம் வெளியிட நீங்க நேரே வந்து இந்த திருட்டு தீய முக காரன்களுக்கு ஒரு பெரிய கவுரவத்தை கொடுத்தீங்க. இப்போ பாக்கலாம் இந்த கொள்ளையன்கள் அட்லீஸ்ட் நன்றி உள்ளவன்களா இல்லையா ன்னு. செஸ் ஆட்டத்தில் நீங்க காயை சரியா நகத்திப்புட்டீங்க. சாணக்யன் யாரு நீங்களா அமீத்ஷாவா?


Mariadoss E
ஆக 18, 2025 19:50

நீங்கள் தமிழ்நாட்டுக்கு ஒண்ணும் செய்ய மாட்டீங்க அப்புறம் எதுக்கு ஆதரவு கேக்குறீங்க....


Matt P
ஆக 18, 2025 19:19

தொலை பேசியில் பேசியிருந்தால் ஸ்டாலின் இந்தி தெரியாது.. .....என்று தான் சொல்லியிருக்கணும்.


தாமரை மலர்கிறது
ஆக 18, 2025 18:54

சி பி ராதாகிருஷ்ணனுக்கு திமுக எம்பிக்கள் ஓட்டுபோடாவிடில், திமுக ஒரு தமிழின துரோகி கட்சி ஆகிவிடும்.


நிக்கோல்தாம்சன்
ஆக 18, 2025 18:01

முதுகில் குத்துவதில் வல்லவர்களிடம் போயி


Kjp
ஆக 18, 2025 17:58

திராவிடனாக இருந்தால் ஆதரிப்பார்கள் தமிழனாக இருப்பதால் ஆதரிக்க மாட்டார்கள்.


என்றும் இந்தியன்
ஆக 18, 2025 17:46

ஸ்டாலின் ஐ டீ விங் இதற்கான பதிலை தேடிக்கொண்டிருக்கின்றது இன்டர்நெட்டில். ஏன்???ஸ்டாலினுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை ஆகவே. 1 டாஸ்மாக்கினாடு இவருக்கு ஓட்டு போடவில்லையென்றால் ஸ்டாலின் தமிழர்களுக்கு எதிரானவன் என்று எல்லா தமிழர்களுக்கும் தோண ஆரம்பிக்கும் என்ற பயம் 2 அப்படி இவருக்கு ஒட்டு போட்டால் INDI கூட்டணி இவரை கண்டபடி திட்டும் 3 ஒரு இந்துவுக்கு ஸ்டாலின் ஒட்டு போட்டதால் திமுக முஸ்லிம்களுக்கு கிருத்துவர்களுக்கு எதிரான கட்சி என்று பெயர் கிடைக்கும் அதனால் அவர்கள் ஆதரவு சுத்தமாக அம்பேல் ஆகிவிடும்


Natchimuthu Chithiraisamy
ஆக 18, 2025 16:55

தமிழ் நாட்டுக்கு ரெம்பநாள் கழித்து இந்திய நாட்டின் துணை ஜனாதிபதி கிடைத்துள்ளது. அதுவும் திருப்பூர் கொங்கு பகுதியில் அதிக மக்கள் வாழும் விவசாய மக்களின் ஒரு விவசாயி.


vee srikanth
ஆக 18, 2025 16:41

கலாம் என்றால் கலகம் என்று சொன்னது ஞாபகம் இல்லையா எங்களுக்கு என்றால் சிறுபான்மை அல்லது பெரும்பான்மை என்று எல்லாம் பார்க்கமாட்டோம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை