உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தலைமை நீதிபதி மீது காலணி வீசியவர் மீது அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை

தலைமை நீதிபதி மீது காலணி வீசியவர் மீது அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 'உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் மீது, காலணி வீசிய வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை' என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய், கடந்த அக்., 6ம் தேதி வழக்கு விசாரணை நடத்திக் கொண்டிருந் தபோது, வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர், 71, என்பவர், நீதிபதி மீது காலணி வீசி தாக்குதல் நடத்தினார். அவரை போலீசார் உடனடியாக கைது செய்தனர்.தன் மீது காலணி வீசியவரை மன்னிப்பதாக தலைமை நீதிபதி கவாய் அறிவித்ததை அடுத்து, வழக்கறிஞர் ராகேஷ் விடுவிக்கப்பட்டார்.எனினும், 'நான் செய்தது சரியானதுதான்; எதிர் காலத்திலும் தொடர்ந்து இப்படி செய்வேன்' என, வழக்கறிஞர் ராகேஷ் ஊடகங்களில் தொடர்ந்து பேசி வந்தார். அவரது வழக்கறிஞர் அங்கீகாரத்தை பார் கவுன்சில் ரத்து செய்தது. அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி, மனு தாக்கல் செய்யப்பட்டது.இந்த மனு, நீதிபதி சூரியகாந்த் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது பார் கவுன்சில் சார்பில் முன்வைக்கப்பட்ட வாதம்:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலணி வீசிய நபரை, கதாநாயகன் போல் சமூக ஊடகங்களில் சிலர் சித்தரித்து வருகின்றனர். சம்பந்தப்பட்ட நபரும் தன் செயலை தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறார். இது போன்ற செயல்களை அப்படியே விட்டு விட்டால், எதிர்காலத்தில் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நடக்கும்.மேலும், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் பெருந்தன்மையுடன் தன் மீது காலணி வீசிய நபரை மன்னித்தாலும், இது ஒட்டுமொத்த நீதித்துறை சார்ந்த விவகாரம். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து, நீதிபதி சூரியகாந்த் பிறப்பித்த உத்தரவு:நீதிமன்ற அறைக்குள் கோஷம் எழுப்புவது, காலணி வீசுவது நிச்சயமாக நீதிமன்ற அவமதிப்பு தான். அதில் மாற்றுக்கருத்து இல்லை. அது தொடர்பாக நடவடிக்கை தேவையா; இல்லையா என்பது விவகாரத்தில் தொடர்புடைய நீதிபதியின் முடிவுக்கு உட்பட்டது. காலணி வீசிய வழக்கறிஞர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பது, அவர் மீது தேவையில்லாத கவனத்தை ஏற்படுத்தும். அந்த விவகாரத்தை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கும். அது தானாக மறக்கப்பட வேண்டிய சம்பவம். மேலும், தலைமை நீதிபதி கவாய், இதை பெரிதாக்க விரும்பவில்லை. அவர் மன்னிப்பும் வழங்கி விட்டார். எனவே, இந்த விவகாரத்தில் மேற் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியமில்லை என கருதுகிறோம். எனினும், இது போன்ற சம்பவங்கள் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய, வழிகாட்டு நெறிமுறை களை வேண்டுமானால் வகுக்கலாம். அதற்கான ஆலோசனைகளை பார் கவுன்சில் வழங்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Gnana Subramani
அக் 28, 2025 11:30

வேறு எந்தெந்த பதவிகளில் இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தேவையில்லை


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 28, 2025 10:31

ராகேஷ் சர்மா மீது நடவடிக்கை எடுக்கலாமா வேண்டாமா என்பதை கடவுள் முடிவு செய்யட்டுமே .எதற்காக இந்த நீதி மன்றம் முடிவு செய்யவேண்டும்?


நிக்கோல்தாம்சன்
அக் 28, 2025 07:22

அவர் இன்னமும் கதாநாயகன் தான், காவாய் போன்ற துடுக்காக பேசும் மனிதர்களும்? கவாயும் மன்னிப்பு கேட்டிருக்கவேண்டும், அவன் கேட்காததால் இவ்வளவு சிக்கலும்


அப்பாவி
அக் 28, 2025 05:45

உங்க சாமி கிட்டே போயி கேளுங்க.


Kasimani Baskaran
அக் 28, 2025 04:11

உணர்ச்சி வசப்பட்டு ஓவராக பேசினால் - இப்படித்தான் ஆகும்.


தாமரை மலர்கிறது
அக் 28, 2025 01:46

வெரி குட். யாராயிருனும் நா காக்க நல்லது.


Krishna
அக் 27, 2025 23:16

Brotherhood Bias is SoleReason for Protecting AdvocateCriminals. Punish both Advocate& CJI for Misusing Powers Against Justice& Courts by MisBe Against Duty CJI& CJIs UnJust Behaviours Against Native-NationPeopleReligionCultureLanguage Etc


Sun
அக் 27, 2025 23:09

நீதிமன்ற அறையில் காலனி வீசினால் அதற்குண்டான செக்சன் படி வழக்கு தொடருட்டும். சம்மந்தப்பட்டவர் எதிர் கொள்ளட்டும். அதை விட்டு விட்டு சம்மந்தபட்ட நீதி பதி விரும்பவில்லை அதனால் மேல் நடவடிக்கை தேவையில்லை என்பது மிகவும் தவறாகும். இது போல் நிலுவையில் உள்ள வழக்குகளில் சம்மந்தப்பட்டவர் நடவடிக்கை தேவையில்லை என்றால் சுப்ரீம் கோர்ட் விட்டு விடுமா? ஒரு சில அரபு நாடுகளில் தான் இது போல் சட்டம் உள்ளது. சம்மந்தப்பட்டவர்கள் மன்னித்தால் விடுதலை செய்யலாம் என்பது. சம்மந்தப் பட்டவர் வழக்கினை எதிர் கொள்ளட்டும் அப்போதுதான் பல்வேறு நியாய அநியாயங்கள் வெளிவரும்.


முக்கிய வீடியோ