உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

தேர்தல் கமிஷனர்கள் நியமன சட்டம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேர்தல் கமிஷனர்கள் நியமனம் தொடர்பாக மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மீண்டும் மறுத்துவிட்டது. ‛தலைமை தேர்தல் கமிஷனர் மற்றும் பிற தேர்தல் கமிஷனர்களை , பிரதமர் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஆகிய மூன்று பேர் அடங்கிய குழு தேர்வு செய்ய வேண்டும்' என்ற உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வு உத்தரவிட்டு இருந்தது. இதனைத்தொடர்ந்து, மத்திய அரசு சட்ட திருத்தம் கொண்டு வந்தது. புதிய சட்டத்தின்படி, தலைமை தேர்தல் கமிஷனர், தேர்தல் கமிஷனர்கள் நியமனத்தில் பிரதமர் எதிர்க்கட்சி தலைவர், பிரதமரின் பரிந்துரைக்கப்பட்ட மத்திய அமைச்சர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை தவிர்த்து அவருக்கு பதிலாக மத்திய அமைச்சர் குழுவில் இடம்பெற்றார். இந்த சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம், மனுவிற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்நிலையில், இந்த சட்டத்தை எதிர்த்து ஜனநாயக சீர்திருத்தத்திற்கான சங்கம் தொடர்ந்த பொது நல மனு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. தேர்தல் கமிஷனர் அனுப் சந்திரா நாளையுடன் ஓய்வு பெற உள்ளதால், இந்த சட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என, மனுதாரர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.அப்போது அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், புதிய சட்டத்திற்கு தடை விதிக்க மறுத்து பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், இந்த மனுவை, நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிடும்படி உத்தரவிட்டனர். இந்த மனு மீதான அடுத்த விசாரணை ஏப்ரல் மாதம் நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Nagarajan D
பிப் 13, 2024 22:35

50 வருடங்களுக்குள் தீர்ப்பு தருவீங்களா? வாய்தா ராஜாக்களால் நாடு சீர்குலைந்து போகிறது....


K.n. Dhasarathan
பிப் 13, 2024 21:31

இது அண்ணல் அம்பேத்கரை அவமானப்படுத்துவது போலாகும் அவர் எழுதிய சட்டத்தில் தவறு போல காட்டுவது ஒரு நாடகம் பிறகு அவர் சிலைக்கு மாலை போடுவது உலக மகா நடிப்பு. மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் பதில் சொல்ல மாட்டார்கள் , துரத்தி அடிப்பார்கள்.


தாமரை மலர்கிறது
பிப் 13, 2024 21:08

உச்சநீதிமன்றம் தனக்கு எவ்வளவு அதிகாரம் உள்ளது என்று தெரியாமல், பாராளுமன்றத்தின் அதிகாரத்தை மீறுகிறது. உச்சபட்ச அதிகாரம் பாராளுமன்றத்திற்கு தான் உள்ளது. அங்கு இயற்றப்படும் சட்டங்களை பாதுகாப்பது மட்டுமே உச்சநீதிமன்றத்தின் வேலை. அதனால் மத்திய அரசின் சட்டங்களை தடுக்கும்விதத்தில் ஈடுபடுவது அதிகாரவரம்பு மீறல்.


A1Suresh
பிப் 13, 2024 20:07

மேற்கத்திய நாடுகளைப் போல பாரதத்தின் நீதித்துறையை மோடிஜி மாற்றி புரட்சி செய்யவேண்டும். ஆமை வேகத்தில் நடப்பது இப்பொழுது காணும் நீதித்துறை.


Dharmavaan
பிப் 13, 2024 18:25

பாராளுமன்றம் இயற்றிய சட்டத்தை தடை செய்ய நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை.இது பாராளுமன்றத்தை கேவலப்படுத்துவதாகும் இம்பீச் செய்யும் அதிகாரம் மன்றத்துக்கு உண்டு


duruvasar
பிப் 13, 2024 18:23

இந்த தடவை தேர்தலில் முன்னெடுக்கப்பட்டுள்ள கருத்து டூல் கிட், டூல் கிட் , டூல் கிட் மட்டுமே. விவசாயிகளின் உரிமை, இ வி எம் சந்தேகம், இப்படி வரிசையாக வரும்.


Dharmavaan
பிப் 13, 2024 18:14

கொலீஜியும் முறை நீக்கப்பட்டால் தான் நீதியின் பொறுப்பற்ற வரம்பு மீறிய செயல் நிற்கும்


Indian
பிப் 13, 2024 18:14

எல்லோரும் சேர்ந்து நாட்டை குட்டிச்சுவர் ஆக்கப்போக வாய்ப்புள்ளது


முருகேசன்,சோளிங்கர்
பிப் 13, 2024 19:34

குட்டிச்சுவராகிப் போன உன் டொப்பிள் கொடி நாட்டைப் போல் யாராலும் இந்த பாரத தேசத்தை எதுவும் செய்து விட முடியாது.


Dharmavaan
பிப் 13, 2024 18:13

koleejium


செந்தமிழ் கார்த்திக்
பிப் 13, 2024 18:04

மூவர் குழு என்பது, பிரதமர், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர், மற்றும் "பிரதமரால் பரிந்துரைக்க படும் மத்திய அமைச்சர்". ஆஹா இதெல்லாவா தர்மம் நியாயம் நேர்மை. ஒவ்வொரு வினைக்கும் அதற்கு சமமான எதிர்வினை உண்டு எனபதை யாரும் மறக்க கூடாது.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை