உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்ச நீதிமன்றம் கண்டிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி :'ஜம்மு - காஷ்மீரில், இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்குவது தொடர்பாக, சிறப்பு கமிட்டியின் மறுஆய்வு உத்தரவுகள் அலமாரியில் வைத்து பாதுகாப்பதற்கு அல்ல' என, உச்ச நீதிமன்றம் கண்டிப்புடன் தெரிவித்தது.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தான சட்டப்பிரிவு 370, கடந்த 2019ல் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து, பாதுகாப்பு கருதி இன்டர்நெட் சேவை துண்டிக்கப் பட்டது.இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்க கோரி, உச்ச நீதிமன்றத்தில் 2020ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக பரிசீலிக்க, மத்திய உள்துறை செயலர் தலைமையில் சிறப்பு கமிட்டி அமைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த கமிட்டி கூடி, இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்குவது குறித்து மறு ஆய்வு செய்தது. ஆனால் அதுபற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.இந்த மறு ஆய்வு கூட்டத்தின் உத்தரவுகளை வெளியிட ஜம்மு - காஷ்மீர் நிர்வாகத்துக்கு உத்தரவிடக்கோரி, 'பவுண்டேஷன் பார் மீடியா ப்ரொபஷனல்ஸ்' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை விசாரித்த நீதிமன்றம், 'மறு ஆய்வு உத்தரவுகள் அலமாரியில் வைத்து பாதுகாப்பதற்கு அல்ல; அவை வெளியிடப்பட வேண்டும்' என உத்தரவிட்டதுடன், அதை உடனே வெளியிடும்படி, அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நட்ராஜுக்கு உத்தரவிட்டனர்.இது தொடர்பான அறிவுறுத்தல்களை பெற, அவர் அவகாசம் கோரினார். இதையடுத்து இரண்டு வாரம் அவகாசம் அளித்த நீதிமன்றம், அடுத்த விசாரணையின் போது மறு ஆய்வு உத்தரவை வெளியிட அறிவுறுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

ஆரூர் ரங்
ஜன 31, 2024 12:43

முர்க்க பயங்கரவாதத்தால் பல லட்சம் காஷ்மீர் ஹிந்துக்கள் அகதிகளாக ஓடிய போது கோர்ட் நீண்ட விடுமுறையில்???? இருந்ததா?


M Ramachandran
ஜன 31, 2024 10:20

நீதி மன்றம் சிறிது முன்யோசானையுடன் செயல் படுவது நன்று தீர விசாரிக்காமல் தீர்ப்பு கொடுப்புது நாட்டின் பாது காப்பு விஷயத்தியய மனதில் கொள்ள வேண்டும். அதுவும் பக்கத்துக்கு நாடு நம் எதிரி அவர்களை தீவிரவாத நடவடிக்கைகளால் பாதிக்க படுவது அதிகம் உள்ள மாநிலம் ஜம்மு காஷ்மீர் பல ஆபத்துகளை விளைவிக்க கூடியது. அதை மனதில் கொள்ள வேண்டியது அவசியம்


Dharmavaan
ஜன 31, 2024 07:41

பொறுப்பற்ற நடைமுறை அறிவற்ற தொலைநோக்கற்ற உச்ச நீதி மன்றம். பின் விளைவுகளுக்கும் பொறுப்பேற்குமா


Dharmavaan
ஜன 31, 2024 07:40

poruppatra


J.V. Iyer
ஜன 31, 2024 06:58

அனாவஸ்யமாக மூக்கை நுழைப்பதில் இவர்களுக்கு ஏன்தான் இவ்வளவு ஆர்வமோ? இழுத்தடுக்கும் கேசுகளை சீக்கிரம் முடிக்கலாம்?


t,c,parthasarathy
ஜன 31, 2024 04:23

இதை போல் ஒரு ஒரு மாநிலத்திலும் அமைத்த ஸ்டேட் கமிஷன் விசாரணை ரிபோர்டஅவ் வெளியிட சொல்வார்களா உச்ச கோர்ட் .


தாமரை மலர்கிறது
ஜன 31, 2024 01:38

தீவிரவாதிகளை கட்டுப்பாட்டுடன் வைத்திருக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு தான் உள்ளது. உச்சநீதிமன்றம் சும்மா நீதிகூறிவிட்டு வேடிக்கை பார்க்கும். சட்டத்தை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு அரசிற்கு உள்ளது என்பதை உச்சநீதிமன்றம் யோசிக்க வேண்டும்.


GMM
ஜன 30, 2024 21:44

எல்லாவற்றையும் வெளிப்படையாக பொது வெளியில் தெரிவிப்பது கூடாது என்கிறது நீதி நூல். வெளியிட்ட பின் சட்ட விரோத நடவடிக்கை அதிகரித்து நிலமை மோசமனால் மனுதாரர் பொறுப்பு ஏற்க வேண்டும். இன்டர்நெட் பல முனை கொண்ட ஆயுதம். அரசு பொறுப்பு இல்லாமல் / அடையாள படுத்த முடியாதவர் கையிலும் 2G போன்ற ஊழலில் திளைக்க , நிறுவனங்கள் வகுத்து கொடுத்த விதி முறைகளை இன்றும் மாற்ற வழி தெரியாமல் விழிக்கிறது. BSNL ஒன்று தான் சற்று கூடுதல் தகவல் சிம், இன்டர்நெட்,wifi, இணைப்புக்கு சேகரிக்கிறது. பிற தனியார் நிறுவனங்கள் வீதியில் கூட விற்பனை.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை