உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம் உள்ளது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம் உள்ளது: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'பெற்றோர் விற்ற சொத்துகள் செல்லாது என அறிவிக்கும் அதிகாரம், 18 வயது நிரம்பிய வாரிசுகளுக்கு இருக்கிறது' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதற்காக, அவர்கள் முறைப்படி வழக்கு தொடர வேண்டும் என்ற அவசியம் இல்லை எனவும் தெளிவுபடுத்தி உள்ளது. கர்நாடகா மாநிலம் ஷமனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ருத்ரப்பா. இவருக்கு மூன்று மகன்கள் இருந்தனர். 1971ம் ஆண்டு, மூன்று மகன்கள் பெயரில் ருத்ரப்பா நிலங்களை வாங்கினார். அதை நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல், 1983ல், நீலம்மா என்பவருக்கு விற்றுள்ளார். மூன்று மகன்களும், 18 வயதை கடந்த நிலையில், நிலம் விற்கப்பட்டது தெரியாமல், அதை சிவப்பா என்பவருக்கு மீண்டும் விற்றுள்ளனர். இதனால், முதலில் அந்த நிலத்தை வாங்கிய நீலம்மா என்பவர் உரிமை கோரி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விற்பனையை ரத்து செய்வதற்கு வாரிசுகள் வழக்கு தொடர வேண்டுமா, வேண்டாமா? என்பதில் முரண்பட்டு தீர்ப்பு அளித்திருந்தது. இதைத் தொடர்ந்து இவ்வழக்கு உச்ச நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது. வழக்கை விசாரித்து நீதிபதி மித்தல் பிறப்பித்த உத்தரவு: பெற்றோர் விற்ற சொத்து களை ரத்து செய்யவோ அல்லது அதை வேறு ஒருவருக்கு விற்கவோ, 18 வயது நிரம்பிய வாரிசுகளுக்கு உரிமை இருக்கிறது. இதற்காக, அவர்கள் தனியே வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை. மூல விற்பனை பற்றி, மைனர்களாக இருக்கும் வாரிசுகள் அறிந்திருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை. எனவே, பெற்றோர் விற்ற சொத்துகளை ரத்து செய்யும் அதிகாரம் அவர்களுக்கு இருக்கிறது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. - டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

A. Kumar
அக் 24, 2025 16:46

இப்படித்தான் ஆண்.பெண் குழந்தை கள் இருவருக்கும் சம பங்குண்டு என்று சட்டம் போட்டும் மக்களைத் தான் அலையவிடுகிறார்கள்.ஆனால் ஆட்சியாளர்களுக்கு மட்டும் ஆண்பிள்ளைகள் மட்டுமே வாரிசாம்.முதலில் இதைத் தெளிவாக கூறவும்.


selva kumar
அக் 24, 2025 14:20

இந்தியாவில் இருக்கும் ஓட்டை உடைசல் சட்டங்களால் தான் பல பிரச்சனைகள் உருவாகின்றன என்பது உண்மை.இதில் இந்த தீர்ப்பு ஒரு புது குழப்பம்.


சிந்தனை
அக் 24, 2025 14:09

நல்லவேளை அவர் மேல் வழக்கு தொடர்ந்து இருக்காவிட்டால் அநீதியை நீதி என்று இந்த நீதிபதிகள் அறிவித்து இருப்பார்கள் இல்லையா எப்படித்தான் நம்புவதோ தெரியவில்லை நீதித்துறையை...


சிந்தனை
அக் 24, 2025 14:08

மக்களுக்கு நீதிமன்றத்தின் மேல் நம்பிக்கை வர வேண்டும் என்றால் இனிமேல் தவறான தீர்ப்பு கொடுத்த நீதிபதிகளுக்கு தண்டனை கொடுத்து விட வேண்டும் அப்பொழுதுதான் நீதித்துறை ஆரோக்கியமாக இருக்க முடியும் இது சரியா தவறா என்று மதிப்பிற்குரிய நீதிபதிகள் கூற வேண்டுகிறேன்


சிந்தனை
அக் 24, 2025 14:05

சட்டப்படி எது சரி தவறு என்று இவ்வளவு பெரிய நீதிபதிகளுக்கே தெரியாத பொழுது மக்கள் சட்டப்படி வாழ வேண்டும் என்று சொல்வது எப்படி சரியாக முடியும்


Vasan
அக் 24, 2025 12:34

இந்த உத்தரவு அரசியல் கட்சிகளுக்கும் பொருந்துமா? பழம் எனக்கே என்று தந்தையும், இல்லை இல்லை பழம் எனக்கே என்று தனையனும் போராடுகிறார்கள்.


lrbalaji
அக் 24, 2025 11:16

18 வயதுக்குள் இருக்கும் எப்படி மகன்கள் பெயரில் சொத்துக்கள் எப்படி பதிய முடிந்தது. ஏதோ குழப்பமாந தீர்ப்பு


SENTHILKUMAR
அக் 24, 2025 11:12

Ridiculous judgement. Till the siblings are minor, Father is is a guardian and sole proprietorship of the property. He can buy or sell the property.


lrbalaji
அக் 24, 2025 11:11

வாரிசுகள் பெயர்களில் வாங்கிய சொத்து அப்பா சம்பாரித்தது. தாத்தா சொத்து இல்லையே விற்கும் பொது நீதிமன்றம் நாட வேண்டும். ஆனால் மகன்கள் வழக்கு தொடர தேவை இல்லை வன்முறையை தூண்டும் தீர்ப்பு தெளிவில்லாத தீர்ப்பு


Anand
அக் 24, 2025 11:05

அதாவது, மைனர் பிள்ளைகளின் பெயர்களில் உள்ள சொத்துக்களை அவர்கள் அறியாமல் தந்தை விற்றுள்ளார், இதுதான் வழக்கின் சாராம்சம். எனவே பிள்ளைகளின் சொத்துகளை பெற்றோர் விற்றதை ரத்து செய்ய வாரிசுகளுக்கு அதிகாரம் உள்ளது என கோர்ட் தீர்ப்பு வழங்கியது சரிதான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை