உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு; உச்ச நீதிமன்றத்தின் 12 கேள்விகள்

கவர்னருக்கு எதிரான தமிழக அரசு வழக்கு; உச்ச நீதிமன்றத்தின் 12 கேள்விகள்

கவர்னருக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ள உச்ச நீதிமன்றம், இருதரப்பும் பதில் அளிக்க, 12 கேள்விகளை எழுப்பியுள்ளது.கவர்னர் ரவிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கை தொடர்ச்சியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.அப்போது அனைத்து தரப்பும் ஒரு வார காலத்திற்குள் எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பான, 12 கேள்விகளை நீதிமன்றம் எழுப்பி உள்ளது.அதன் விபரம்:1. சட்டசபை நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாவை கவர்னர் மீண்டும் அரசுக்கு அனுப்பி வைத்தால், அதில் திருத்தங்கள் செய்தோ அல்லது செய்யாமலோ மீண்டும் நிறைவேற்றி கவர்னருக்கு அனுப்பி வைக்கும்போது, அதை கவர்னர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியுமா? ஆம் எனில் அதற்கான அதிகாரங்கள் என்ன?2. குறிப்பிட்ட மசோதாக்களை மட்டும் ஜனாதிபதிக்கு கவர்னர் அனுப்பி வைக்க முடியுமா அல்லது அனைத்து மசோதாக்களையும் அனுப்பி வைக்க முடியுமா?3. கவர்னருக்கு என்று இருக்கும் தனிப்பட்ட அதிகாரங்கள் என்னென்ன?4. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ், அமைச்சரவையின் ஆலோசனையைக் கேட்டு தான் கவர்னர் நடக்க வேண்டுமா அல்லது அதற்கு மாறாக நடந்து கொள்ள முடியுமா?5. சட்டசபை அனுப்பும் மசோதாவை கவர்னர் நிறுத்தி வைக்கிறார் எனில் அதே மசோதாவை சபை மீண்டும் நிறைவேற்றி கவர்னரிடம் சமர்ப்பித்தால் அந்த மசோதாவை அவர் என்ன செய்வார்?6. அரசியல் சாசனப் பிரிவு 200ன் கீழ், மசோதாக்களின் மீது கவர்னர் முடிவெடுக்க ஏதேனும் கால வரம்பு இருக்கிறதா?7. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தால் மசோதாவுக்கான ஒப்புதலை கட்டாயம் வழங்க வேண்டுமா?8. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ், மசோதாக்கள் மீது நான்கு விதங்களாக முடிவெடுக்க கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா?9. மசோதாக்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பிப்பதற்கு கவர்னருக்கு என்று என்னென்ன அதிகாரங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.10. சட்டசபை நிறைவேற்றிய மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும்போது, மத்திய அரசால் பரிந்துரைகள் வழங்கப்பட்டு மசோதா நிராகரிக்கப்பட்டால், அதை அரசியல் சாசனத்தின் எந்த விதி கையாள்கிறது?11. கவர்னர் அனுப்பி வைத்த மசோதாவை மீண்டும் அவருக்கே திருப்பி அனுப்பும் ஜனாதிபதி அதன் மீது சட்டசபை முடிவெடுக்க அறிவுறுத்தல் கொடுக்கிறார். பிறகு மீண்டும் சட்டசபை கவர்னரிடம் மசோதாவை கொடுக்கிறது. இப்போது அந்த மசோதாவை கவர்னர் மீண்டும் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்க முடியுமா, முடியாதா?12. அரசியல் சாசன பிரிவு 200ன் கீழ், கவர்னர் தன் விருப்பத்தின் படி எந்த அளவிற்கு செயல்பட முடியும்?இவ்வாறு 12 கேள்விகளை எழுப்பி உள்ளது. இதற்கு தமிழக அரசும், கவர்னர் தரப்பும் ஒரு வார காலத்திற்குள் பதில் அளிக்க உள்ளது. -டில்லி சிறப்பு நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Arachi
பிப் 14, 2025 06:20

எதுக்கு இவ்வளவு கேள்விகள்? மக்களால் தேர்நதெடுக்கப்பட்ட அரசு. வல்லுனர்கள் இல்லாமலா செயல்படுவார்கள்? எதற்கு கோர்ட் எல்லாம். சர்வாதிகார ஆட்சியை கவர்னரை வைத்து நடத்திகிட்டு போங்க?


பல்லவி
பிப் 13, 2025 21:23

356 உபயோகித்து ஆட்சி கலைப்பு செய்து விட்டு மீண்டும் தேர்தல் வந்தால் மாநில ஆளும் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வது ?? ஒன்றிய அரசை கலைக்கும் சாத்தியக்கூறு உண்டா???


M.COM.N.K.K.
பிப் 13, 2025 19:44

இந்த 12 கேள்விகளுக்கும் பதில் சொல்லாமலே மாநில அரசை கலைக்க ஜனாதிபதிக்கு தகவலை ஒரு ஆளுநர் அனுப்பினால் போதும் பிரிவு 356 பயன்படுத்தி மாநில அரசை கலைத்துவிட அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு.இதை இன்று இரவே செய்துமுடித்துவிடலாம்.இது காலம் காலமாக இந்தியாவில் நடந்துவருகிறது.இதில் என்ன சந்தேகம்


raman
பிப் 13, 2025 16:42

Well said you deserve full credit people are fed up with judiciary.


theruvasagan
பிப் 13, 2025 16:11

அப்ப இந்த கேள்விகளுக்கு என்ன பதில் என்று நீதிமன்றத்துக்கே தெரியாதா. கிழிஞ்சுது போங்க.


சிந்தனை
பிப் 13, 2025 14:44

ஐயா, சீக்கிரம் தீர்ப்பு மட்டும் சொல்லிடாதீங்க எல்லா கேஸுக்கும் சீக்கிரம் தீர்ப்பு சொல்லிட்டா அப்புறம் உங்களுக்கு வேலை இல்லாம போயிடும் நாங்க யாருக்கு வரி கட்றது பொறுமையாவே சொல்லுங்க ஒரு 200 வருஷத்துல


NATARAJAN R
பிப் 13, 2025 13:35

ஆளுநர் மீது நீதிமன்றம் கேள்விகளை வைக்கிறது. ஏற்றுக் கொள்ள வேண்டும். நீதிமன்றத்திற்கு சில கேள்விகள். நீங்கள் சொல்வது என்னவென்றால் தமிழக அரசு அனுப்பிய அனைத்து மசோதாக்களிலும் எந்த கேள்வியும் கேட்காமல் கையெழுத்து போட்டு விட வேண்டும். ஆளுநர் மசோதா மீது நடவடிக்கை எடுக்க எந்த கால நிர்ணயமும் அரசியல் அமைப்பு சட்டம் செய்ய வில்லை. அப்படி என்றால் நீதிமன்றம் ஏன் தலையிட வேண்டும்? அப்படி என்றால் நீங்கள் மட்டும் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தால் 30 வருடம் ஆகியும் தீர்ப்பு தராமல் இழுப்பது ஏன்? தமிழக அரசுக்கு நீங்கள் போட்ட உத்தரவுகளை எல்லாம் நிறைவேற்றி விட்டதா? திரு பொன்முடி வழக்கில் தண்டனை பெற்ற பின் எந்த விசாரணையும் நடத்தாமல் அவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மிகவும் பிரபலமானவர் என்பதால் அவர் வேண்டுகோள் விடுத்தார் என்றவுடன் உடனே தண்டனைக்கு தடை விதித்தது ஏன்? செந்தில் பாலாஜி அமைச்சர் பதவி ராஜினாமா செய்தால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் என்று அறிந்து அமைச்சர் பதவி ராஜினாமா செய்தார். இதை அறிந்த சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் தர மறுத்த நிலையில் உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மறுநாள் அமைச்சர் ஆனார். அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க விருப்பம் இல்லை. ஆனால் ஆளுநர் என்றால் கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகிறது உச்ச நீதிமன்றம். ஆளுநர் என்பவர் ஆளும் கட்சியின் மாவட்ட செயலாளர் போல செயல்பட வேண்டும் என்று ஆளும் கட்சி நினைக்கிறது. நீதிமன்றம் அதை விரும்புகிறது. நீதிமன்றம் வழக்குகளுக்கு ஒரு கால நிர்ணயம் செய்யும் போது ஆளுநரும் கால நிர்ணயம் செய்யும் காலம் வரும்.


Power Drive
பிப் 13, 2025 12:42

கவர்னருக்கு சரியான...


Ramalingam Shanmugam
பிப் 13, 2025 11:24

ஏன் நீதிபதிக்கு தெரியாதா ?


V K Sethukumar
பிப் 13, 2025 11:12

Correct


புதிய வீடியோ