உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பஸ்சுக்காக காத்திருந்த தமிழக பெண் கூட்டு பலாத்காரம்: 2 பேர் கைது

பஸ்சுக்காக காத்திருந்த தமிழக பெண் கூட்டு பலாத்காரம்: 2 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

எஸ்.ஜே.பார்க்: பெங்களூரில், பஸ்சுக்காக காத்திருந்த தமிழக பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்து, நகைகளை கொள்ளையடித்துச் சென்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.தமிழகத்தின் கிருஷ்ணகிரி பேரிகை அருகே சத்தியமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 37 வயது பெண், கடந்த 19ம் தேதி இரவு கிருஷ்ணகிரியில் இருந்து பெங்களூருக்கு தமிழக அரசு பஸ்சில் வந்தார். டவுன்ஹால் பஸ் நிலையத்தில் இறங்கியவர், அங்கிருந்து, எலஹங்காவில் வசிக்கும் சகோதரர் வீட்டிற்கு செல்வதற்கு பி.எம்.டி.சி., பஸ்சுக்காக இரவு 11:30 மணிக்கு காத்திருந்தார்.அப்போது அங்கு இரு ஆண்கள் வந்தனர். அவர்கள் போதையில் இருந்ததாக தெரிகிறது. அவர்களிடம் எலஹங்கா செல்லும் பஸ் எங்கு வரும் என்று தமிழக பெண் கேட்டார். பஸ் வரும் இடத்திற்கு அழைத்து செல்வதாக கூறி, அப்பெண்ணை இருவரும் அங்கிருந்து அழைத்து சென்றுள்ளனர். ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு பெண்ணை இழுத்துச் சென்று இருவரும், அவரை மிரட்டி கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர்.பின், அப்பெண் அணிந்திருந்த தங்க சங்கிலி உள்ளிட்ட நகைகளை பறித்துக்கொண்டு தப்பியோடினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், எஸ்.ஜே.பார்க் போலீஸ் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.சம்பவம் நடந்த இடம், அதை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், கே.ஆர்.மார்க்கெட்டில் கூலி வேலை செய்யும் கணேஷ், 27, சரவணன், 35 ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Vasudeva
ஜன 28, 2025 08:07

காவல்துறை,நீதித்துறை இரண்டும் இணைந்து தீர விசாரித்து ஒரு மாதத்தில் தீர்ப்பு வழங்கப்படும் என்ற சூழ்நிலை உறுதிபடுத்தினால் மட்டும்தான் ஒரு பயம் வரும்


Mahalingam
ஜன 27, 2025 07:26

பெயர் என்ன என்று பார்க்கவும் மேலும் "மாடல்" என்பது உலகளாவியது அதன் பெருமையே அது தான் சாம்பிள் 2g


Kuppusamy
ஜன 22, 2025 19:25

அதே கர்நாடக vule நடந்துருக்கு


JeevaKiran
ஜன 22, 2025 17:29

டெல்லி நிர்பயா வழக்கே இன்னும் முடியவில்லை கிட்ட தட்ட 5 வருடம் ஓடிவிட்டது பிறகு எப்படி பயம் வரும் குற்றவாளிகளுக்கு?


Suresh Sivakumar
ஜன 22, 2025 16:44

Dravida kalaam nangu paraviullathu


praveen nehru
ஜன 22, 2025 16:08

இது நடந்தது பெங்களூர் அண்ணா. தமிழ்நாடு இல்லை


Senthoora
ஜன 22, 2025 16:04

நல்லவேளை, இது சென்னையில் நடக்கவில்லை, பாவம் அண்ணாமலைக்கு இரண்டு சார் கிடைக்காமல் வடை போச்சே.


Raj S
ஜன 24, 2025 02:55

எவ்வளவு கீழ்த்தரமான பதிவு... பெண் பிள்ளைகளை பெற்று இருந்தாலோ, பெண்களுடன் பிறந்திருந்தாலோ.. தன்னை பெற்றவளை பெண்ணாக நினைத்திருந்தாலோ இப்படி ஒரு பதிவு வராது...


Senthoora
ஜன 22, 2025 16:00

நீங்களே ஒரு டூமில்ஸ், டூமில்ஸ் உங்க டுமில்ஸ்சை கேவலப்படுத்தலாமா?


கத்தரிக்காய் வியாபாரி
ஜன 22, 2025 15:49

தீயமுக உறுப்பினர் அட்டை உடனே இரண்டுபேருக்கும் குடுத்து வாழ்த்து சொல்லுங்கள்.


pmnr pmnr
ஜன 22, 2025 15:42

ஜென்ட்ஸ் செய்தது தவறு இல்லை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை