உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பிடித்த முதல்வர் ஸ்டாலின் என வெட்கமின்றி சொல்கிறார் தேஜஸ்வி: அமித் ஷா கடும் விமர்சனம்

பிடித்த முதல்வர் ஸ்டாலின் என வெட்கமின்றி சொல்கிறார் தேஜஸ்வி: அமித் ஷா கடும் விமர்சனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாகல்பூர்: ''தமிழகத்தில் ஆளும் தி.மு.க., பீஹார் மக்களை தொடர்ந்து இழிவுபடுத்தி வருகிறது. அப்படி இருக்கையில் அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் தான், தனக்கு பிடித்த முதல்வர் என, வெட்கமே இல்லாமல் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி கூறுகிறார்,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா காட்டமாக கூறினார். பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதற்கட்ட தேர்தல் இங்கு மொத்தமுள்ள, 243 சட்டசபை தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று முன்தினம், 121 தொகுதிகளில் முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதில், 65 சதவீத ஓட்டுகள் பதிவாகின. வரும் 11ல், மீதமுள்ள 122 தொகுதிகளில் இரண்டாம் மற்றும் கடைசி கட்ட ஓட்டுப்பதிவு நடக்கவுள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் விறு விறுப்படைந்துள்ளது. இந்நிலையில், பாகல்பூர் மாவட்டத்தில் நேற்று நடந்த தே.ஜ., கூட்டணி பொதுக்கூட்டத்தில், பா.ஜ., மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா பேசியதாவது: ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி யாதவிடம், உங்களுக்கு பிடித்த முதல்வர் யார் என, சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது. கொஞ்சம் கூட வெட்க மின்றி, 'தி.மு.க., தலைவரும், தமிழக முதல்வருமான ஸ்டாலின்' என பதிலளித்துள்ளார். ஸ்டாலின் யாரென்று நான் உங்களுக்கு சொல்கிறேன். அவரது கட்சியான தி.மு.க., தான், பீஹார் மக்களை பீடியுடன் ஒப்பிட்டு இழிவுபடுத்தியது. அவரது கட்சி தான், பீஹார் மக்களை அவமானப்படுத்தியது. இ ப்படிப்பட்ட கட்சியைச் சேர்ந்த ஸ்டாலின் தான், தேஜஸ்விக்கு பிடித்த முதல்வராம். ஸ்டாலி னின் கட்சி தான், சனாதன தர்மத்தை அவமதித்தது; ராமர் கோவில் கட்டப் படுவதை எதிர்த்தது. கூட்டணி பீஹாருக்கான வளர்ச்சி திட்டம் எதுவும் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணியிடம் இல்லை. ஆட்சியில் இருந்த போது, ஊடுருவல்காரர்களுக்கு ஆதரவளிப்பதைத் தவிர, ஏழைகளுக்காக எதுவுமே அக்கூட்டணி செய்யவில்லை. லாலுவின் ஆட்சியில் பீஹாரின் கயா, அவுரங்காபாத், ஜமுய் உள்ளிட்ட பகுதிகளில் நக்சல்கள் ஆதிக்கம் செலுத்தினர். தற் போது தே.ஜ., கூட்டணி ஆட்சியில் அது முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

KOVAIKARAN
நவ 08, 2025 10:10

ஸ்டாலினுக்கும் வெட்கமில்லை, அவரைப்பிடிக்கும் என்று உளறும் தேஜஸ்விக்கும் வெட்கமில்லை. ராகுல் வின்சியின் ராசி, காங்கிரசில் அவருடன் கூட்டு சேர்ந்த எந்தக் கட்சியும் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை. எனவே, பீகாரில் தேஜஸ்வி கட்சி படு கேவலமாக தோற்கப் போகிறது.


vbs manian
நவ 08, 2025 10:02

பீகார் மக்கள் குறித்து தமிழக அரசியல் தலைகள் பேசிய வீடியோக்கள் உள்ளன. இவற்றை தேஜஸ்வி யாதவ் பார்க்க வேண்டும். இந்தளவு குறுகிய மனப்பான்மை வேறு எங்கும் இல்லை.


xyzabc
நவ 08, 2025 09:54

இனம் இனத்தை தான் விரும்பும்.


Mario
நவ 08, 2025 09:22

அவருக்கு பிடித்ததை அவர் சொல்கிறார்


baala
நவ 08, 2025 09:14

நல்லவர்கள் எடு சொன்னாலும் ஏற்று கொள்ளலாம், கயவர்கள் கேட்ட நோக்கத்தோடு தான் சொல்லுவார்கள்.


Barakat Ali
நவ 08, 2025 09:12

கற்றோரை கற்றோரே காமுறுவர் ...... அதே போல ... யுனிவர்சல் ரூல் .....


Padmanaban Arumugam
நவ 08, 2025 08:15

டிரம்ப் இந்தியாவை வைத்து செய்வதை போல, இவர் தமிழ் நாட்டை செய்து கொண்டுஇருக்கார்.


Indian
நவ 08, 2025 07:36

கொஞ்சம் ஜெலுசில் சாப்பிடணும் ..


Shekar
நவ 08, 2025 09:29

.. ரெண்டும் குடும்ப அரசியல், ரெண்டும் ஊழலின் இலக்கணம், இரண்டும் ஊழலுக்கு சிறை சென்ற செம்மல்கள் உள்ள குடும்பம்


Indian
நவ 08, 2025 07:35

பொறாமையின் வெளிப்பாடு


raja
நவ 08, 2025 08:05

இதில் என்ன பொறாமை அவர் உண்மையை தானே சொல்கிறார் .. இந்த திராவிட கூட்டம் பிகாரிகளை எப்படி எல்லாம் இழிவு படுத்தினார்கள் என்ற யூ ட்யூப் வீடியோ க்கள் பல இருக்கின்றனவே நீ பார்ப்பது இல்லையா...


ராமகிருஷ்ணன்
நவ 08, 2025 07:14

இருவரும் பரம்பரை பரம்பரையாக ஊழல்களில் திளைத்த குடும்பம் குற்ற ஊழல் குணங்களில் ஒத்து போகிறார்கள், இதில் ஆச்சரியம் இல்லை


முக்கிய வீடியோ