உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுலுக்கு கார் ஓட்டிய தேஜஸ்வி

ராகுலுக்கு கார் ஓட்டிய தேஜஸ்வி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பாட்னா: பீஹாரில், பாரத் ஒற்றுமை நியாய யாத்திரையின் போது, ராகுல் சென்ற ஜீப்பை, ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் ஓட்டிச் சென்றார்.மணிப்பூரில் இருந்து மும்பை வரை காங்கிரஸ் எம்.பி. ராகுல் இரண்டாம் கட்டமாக பாரத் ஒற்றுமை நியாய யாத்திரை மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு கட்டமாக இந்த யாத்திரை, பீஹாரின் சசாராம் பகுதிக்குள் நுழைந்தது. அப்போது, ராகுல் வந்த ஜீப்பை, பீஹார் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் ஓட்டிச் சென்றார்.இதனைத் தொடர்ந்து, இன்று மாலை நடக்கும் பொதுக்கூட்டத்திலும் ராகுலுடன் இணைந்து தேஜஸ்வி யாதவ் மேடை ஏற உள்ளார். இதன் பிறகு, இந்த யாத்திரை உ.பி., மாநிலத்திற்குள் நுழைகிறது. ராகுல் பயணித்த ஜீப்பை ஓட்டிச்சென்ற புகைப்படங்களை தேஜஸ்வி யாதவ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

DVRR
பிப் 16, 2024 17:47

கொஞ்சம் கூட வெட்கம் மானம் அறிவு இல்லவே இல்லையா???கேட்டால் பாத யாத்திரையில் இணைந்தார் தேஜஸ்வி யாதவ் என்று செய்தி வருவது ஆனால் ஜீப்பில் பஸ்ஸில் பிரயாணம் செய்வது பாத யாத்திரையில் ???


A. Sathiamurthy
பிப் 16, 2024 16:27

தாய்லாந்துக்கு விசா உடனடியாக கிடைக்காது. இத்தாலிக்கு கூட்டிச் செல்லலாம்.


sankar
பிப் 16, 2024 16:22

களவாணிக்கு களவாணி கார் ஓட்டுகிறார்


வெகுளி
பிப் 16, 2024 15:21

பாவம், அரசியலில் ராகுலை வச்சு ஆளாளுக்கு ஓட்டுறாங்க..... ஆக தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்றே புரியாமல் அரசியலில் இருப்பது ரெண்டே பேர்தான் ஆக...


ஆரூர் ரங்
பிப் 16, 2024 15:18

காருக்கு தீவனம் போட்டாரா?????( லாலுன்னாலே தீவனம் திருட்டுதான் ஞாபகத்துக்கு வருது. )


Lion Drsekar
பிப் 16, 2024 15:03

பெற்றோர்கள் எதிரிகள் , அவர்களை வீழ்த்துவதற்காக துவங்கிய கட்சி இப்போது வாரிசுகள் ஒன்றாக இணைந்தன. ஆனால் இவர்களுக்காக தீக்குளித்தது, எதிர்க்கோஷம் போட்டது , வாக்களித்தது எல்லாமே ...? இவர்கள் ஒன்றானால் வாக்காளர்களும் ஒன்றாக இருக்கவேண்டும் . இவர்கள் ஒருவருக்கு ஒருவர் முட்டிக்கொண்டாள் மக்களும் அதே பாட்டுக்கு பாடி , ஆடி , நாட்டையே சீர்குலைக்க வேண்டும் . அருமையான அமைப்புகள் . வந்தே மாதரம்


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 16, 2024 13:41

பதிலுக்கு நன்றிக்கடனா அவரை தாய்லாந்து இன்ப சுற்றுலா கூட்டிக்கிட்டு போவாரா ????


Priyan Vadanad
பிப் 16, 2024 17:25

இருங்க கேட்டு சொல்றேன்.


Anand
பிப் 16, 2024 12:57

சூப்பர் நியூஸ், உலகத்திலேயே இவன் ஒருவன் தான் முதல் ஆளாக கார் ஒட்டியுள்ளான், இது ஒரு உலக சாதனை, கின்னஸ் சாதனை.....


ராஜா
பிப் 16, 2024 12:52

சேர வேண்டிய இடத்தில் சரியாக கொண்டுபோய்ச்சேர்த்தால் சரி.


செந்தமிழ் கார்த்திக்
பிப் 16, 2024 12:50

இக்காலத்தில்- கிருஷ்ணா- விற்கு, அர்ஜுனன் கார் ஓட்டுகிறார் என்று சொல்லுங்கள்.


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை