உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கேட்கவே மனம் கலங்குது! பாலைவனத்தில் 4 நாள் பரிதவித்த இளைஞர் பலி

கேட்கவே மனம் கலங்குது! பாலைவனத்தில் 4 நாள் பரிதவித்த இளைஞர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: சவுதி அரேபியாவில் 4 நாட்களாக, பாலைவனத்தில் வழி தெரியாமல் சுற்றித்தவித்த தெலுங்கானாவை சேர்ந்த முகமது ஷேசாத் கான் என்ற 27 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தெலுங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்தவர் முகமது ஷேசாத் கான், 27. இவர் சவுதி அரேபியாவில் தொலை தொடர்பு நிறுனத்தில் 3 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அல் காலி பாலைவனத்திற்கு முகமது ஷேசாத் சென்றார்.

ஆபத்தான பாலைவனம்

650 கிலோ மீட்டர் பரப்பு கொண்ட இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உட்பட ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன் மற்றும் ஏமன் வரை நீளமானது. இந்த பாலைவனத்திற்கு, முகமது ஷேசாத் கான் சென்று விட்டு, மீண்டும் வீட்டிற்கு வர வழி தெரியவில்லை. அவர் விடா முயற்சியாக 4 நாட்களாக போராடி பார்த்தார். அவரால் வீட்டுக்கு திரும்பி வரும் வழியை கண்டுபிடிக்க முடியவில்லை.

உணவு, தண்ணீர்

பாலைவனம் என்றாலும் தண்ணீர் இருக்காது, வெயில் கொளுத்தும் என நம் அனைவருக்கும் தெரியும். அவர் உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்து வந்துள்ளார். ஷேசாத் கானின் உயிரை கடுமையான வெயில் பறித்தது. மணல் திட்டுகளில் இரு சக்கர வாகனம் அருகே இறந்து கிடந்த முகமது ஷேசாத் கானின் உடல் மீட்கப்பட்டது. ஊர் விட்டு, ஊர் பிழைக்கப்போன இடத்தில், ஷேசாத் கானுக்கு நேர்ந்த துயரம், அவரது குடும்பத்தினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
ஆக 26, 2024 10:22

புத்தி இல்லாத பயலுக்கு புத்தி இல்லாத நாட்டின் புத்தி இல்லாத நண்பர்கள்...மூளையை அடமானம் வைத்து செயல்பட்டால் காப்பாற்ற இயலாது..


God yes Godyes
ஆக 24, 2024 17:19

பாலைவனத்தில் சிக்கினாலும் செல்லில் விஷயத்தை சொல்லி இருந்தா ட்ரோன்கள் மூலமாக அந்த நபரை ஏற்றி கொண்டு வந்திருக்கலாம்.


God yes Godyes
ஆக 24, 2024 14:36

புத்தி கிடையாது. ஏக் மார் தோ துக்கடா. பாலைவனத்தில் ஒண்ணும் இருக்காது. சாலை இருக்காது. இதெல்லாம் தெரியாதா.


Kasimani Baskaran
ஆக 24, 2024 14:03

சாட்டிலைட் போன் மற்றும் போதிய தண்ணீர் மற்றும் உணவு, பொருத்தமான உடை இல்லாமல் பாலைவனத்துக்குள் செல்வது ஆபத்தானது.


Kumar Kumzi
ஆக 24, 2024 13:15

மறந்துட்டாரு போல


நிக்கோல்தாம்சன்
ஆக 24, 2024 13:14

வருத்தமான நிகழ்வு


Ramesh Sargam
ஆக 24, 2024 12:56

விபரீதமான ஆசை உயிரை பலிவாங்கிவிட்டது


ganapathy
ஆக 24, 2024 12:41

6,50,000 லட்சம் சதுர கிலோமீட்டர்.


சமீபத்திய செய்தி