உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கலெக்டர் ஆபீஸ் அருகில் பதற்றம்

கலெக்டர் ஆபீஸ் அருகில் பதற்றம்

சிக்கமகளூரு: சிக்கமகளூரின், இனாம் தத்தாத்ரேயா பீடத்தில் ராமதாரக ஹோமம், பஜனை நடத்த ஹிந்து அமைப்பினர் தயாராகினர். ஆனால் மாவட்ட நிர்வாகம், போலீசார் அனுமதி அளிக்கவில்லை. இதனால் கொதிப்படைந்த ஹிந்து அமைப்பினர், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன், ராம நாமம் பாராயணம் செய்தனர். ராமரின் உருவப்படத்தை வைத்து போராட்டம் நடத்தினர்.கலெக்டர் அலுவலகம் அருகில், ஹோம குண்டம் வைத்து ஹோமம் நடத்த முற்பட்டனர். அந்த குண்டத்தை போலீசார் எடுத்துச் சென்றனர். எனவே குண்டம் கட்டிய தொண்டர்கள், கற்பூரம், சந்தன கட்டைகள் வைத்து ஹோமம் நடத்தினர். இதனால் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில், பதற்றமான சூழ்நிலை உருவானது. போலீசார் தலையிட்டு சூழ்நிலையை சரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி