உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கண்டெய்னர் லாரியில் பயங்கர தீ விபத்து; புது கார்கள் எரிந்து நாசம்

கண்டெய்னர் லாரியில் பயங்கர தீ விபத்து; புது கார்கள் எரிந்து நாசம்

ஹைதராபாத்: தெலங்கானாவில் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த கண்டெய்னர் லாரியில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், புது கார்கள் எரிந்து நாசமாகின.ஹைதராபாத் - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் புது கார்களை ஏற்றிக் கொண்டு, கண்டெய்னர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சங்கா ரெட்டி மாவட்டத்தில் ஜாகீராபாத் தேசிய நெடுஞ்சாலை அருகே சென்ற போது, கண்டெய்னர் லாரியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ மளமளவென கண்டெய்னரின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. இதனால், அதன் உள்ளே இருந்த 8 புதிய கார்கள் எரிந்து நாசமாகின. ஓட்டுநர் 20 சதவீத காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர். இந்த விபத்தினால், ஹைதராபாத் - மும்பை தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கண்டெய்னர் லாரியில் உள்ள வயர்களில் ஏற்பட்ட மின்கசிவே இந்த விபத்திற்கு காரணம் என்று போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !