உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சத்தீஸ்கரில் பயங்கர கலவரம் : கலெக்டர் அலுவலகம் எரிப்பு

சத்தீஸ்கரில் பயங்கர கலவரம் : கலெக்டர் அலுவலகம் எரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ராய்ப்பூர் : சத்தீஸ்கரில் சத்னாமி சமூகத்தினரின் வழிபாட்டு தலத்தை இடித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியதில், கலெக்டர் அலுவகத்திற்கு தீ வைக்கப்பட்டது. சத்தீஸ்கர் மாநிலத்தில் லட்சக்கணக்கான சத்னாமி சமூகத்தினர் உள்ளனர். இவர்கள், பாபா குரு காசிதாஸ் என்பவரின் போதனைகளை பின்பற்றுபவர்கள். இவர்கள் 'ஜெய்த்காம்' என்ற பெயரில் தங்களுக்கான வழிபாட்டு தலங்களை பல்வேறு நகரங்களில் கட்டியுள்ளனர். பலோடா பஜார் மாவட்டம் கிரோத்புரியிலும் சத்னாமி சமூகத்தினர் புனிதமாக கருதும் இந்த வழிபாட்டு தலம் அமைந்துள்ளது.சமீபத்தில் இந்த வழிபாட்டு தலத்தை மர்ம நபர்கள் சேதப்படுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த சத்னாமி சமூகத்தினர் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் பலோடா பஜார் கலெக்டர் அலுவலகத்தின் முன் நேற்று 3,000க்கும் மேற்பட்டோர் கூடினர்.வழிபாட்டு தலத்தை சேதப்படுத்திய உண்மையான குற்றவாளிகள் இன்னும் வெளியில் சுதந்திரமாக திரிவதாக கூறி, அவர்களை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டக்காரர்களை போலீசார் கலைக்க முயன்ற போது, வன்முறை வெடித்தது.வன்முறையாளர்கள் கலெக்டர் அலுவலகம் மற்றும் அந்த வளாகத்தில் இருந்த மற்ற அலுவலகங்கள் மற்றும் வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் ஏராளமான அரசு ஊழியர்கள் காயமடைந்தனர். போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் வன்முறை கும்பலை விரட்டி அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

நிக்கோல்தாம்சன்
ஜூன் 11, 2024 03:09

மர்ம நபர்கள் ? ஓஹோ பாகிஸ்தானின் அடிமைகளின் ஆட்டம் ஆரம்பம் ?


Sathyanarayanan Sathyasekaren
ஜூன் 10, 2024 23:08

மர்ம நபர்கள் என்றல் யாரென்று புரிந்து இருக்குமே? புள்ளி வைத்த கூட்டணிக்கு வோட்டை போட்ட அறிவாளி ஹிந்துக்களுக்கு இப்போதாவது உரைக்கும்? அவர்கள் ஜெயித்து இன்னும் ஒரு வாரம் ஆகவில்லை அதற்குள் பல கலவரங்கள்.


vadivelu
ஜூன் 10, 2024 21:58

வழி ஆட்டு காலங்களை சேத படுத்துபவர்கள அரசு உடனே கைது செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ