உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் காயமடைந்தார். ஜம்மு காஷ்மீரில் பல்வேறு மாவட்டங்களில் பயங்கரவாதிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளது. குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. ரஜோரி மாவட்டத்தில் தேடுதல் வேட்டை நடந்தது. அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் இணைந்து நேற்று நள்ளிரவு முதல் நடத்திய தேடுதல் வேட்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இரண்டு இந்திய ராணுவ வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.இந்நிலையில், இன்று (ஜூலை 07) ரஜோரி மாவட்டத்தில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் தகுந்த பதிலடி கொடுத்தனர். ராணுவ வீரர் ஒருவர் பலத்த காயமடைந்தார். பதுங்கி இருக்கும் பயங்கரவாதிகளை தேடுதல் வேட்டையில், பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

வீரமரணமடைந்த வீரர்களுக்கு அஞ்சலி

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் நேற்று நடந்த பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச் சண்டையில் வீரமரணமடைந்த இந்திய ராணுவ வீரர்கள் பர்தீப் குமார், பிரவின் ஜஞ்சால் பிரபாகர் ஆகியோரின் உடலுக்கு ராணுவ உயர் அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

nv
ஜூலை 07, 2024 21:23

ஒரு கூலிப்படை ஆளை மற்ற ஒரு கூலி படை வெட்டிவிட்டது , இதற்க்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்!!


Barakat Ali
ஜூலை 07, 2024 15:32

அதிகார மீறல் ...... ஊ பீயி கோபம் .........


Nellai Ravi
ஜூலை 07, 2024 12:00

வேறு வினையே வேண்டாம். அவர்கள் இந்திய முழுவதும் பயணம் செய்வார்கள், அவர்களது வேலையை செய்வார்கள்.


sundarsvpr
ஜூலை 07, 2024 11:29

பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது செய்தியாய் வருகிறது. இவர்கள் காஸ்மீர் தீவிரவாதிகளா என்பது அல்லது பாகிஸ்தான் ஆதரவுடன் செயல்படுபவர்களா என்பது மக்கள் அறியமுடியவில்லை. பாரத தேசத்தில் குறிப்பாய் தமிழ்நாட்டில் தெருக்களிலும் முஸ்லீம் மதத்தினர் குடிபெயர்ந்துள்ளனர். அதனால் மட்டன் ஸ்டால்களும் வந்துவிட்டன. சைவ உணவு உண்பவர்கள் படும் சிரமங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை. காலப்போக்கில் இது போன்ற இடங்களில் தீவிரவாதம் பரவலாம். மதநல்லிணக்கம் குறைய வாய்ப்புள்ளது.


Ravichandran S
ஜூலை 07, 2024 11:11

AI தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தீவிரவாதிகளை வேட்டையாடவேண்டும்.


Visu
ஜூலை 07, 2024 10:11

99 க்கே துளிர்விட்டு போய்விட்டது


Kasimani Baskaran
ஜூலை 07, 2024 09:53

பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பது காலத்தின் கட்டாயம். அப்படியே விட்டு வைத்தால் இது போல ஆயுதம் ஏந்திய மூளைச்சலவை செய்யப்பட கோழைகளிடம் மல்லுக்கட்டியே ஆகவேண்டும்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை