| ADDED : ஜன 08, 2024 07:04 AM
ஏஜன்ட்களின் விளையாட்டு!முனிசி.,யில் ஏஜென்ட்கள் அட்டகாசம் ஓவரா போயிடுச்சுன்னு, அங்குள்ள வட்டார தகவல் தெரிவிக்குது. முனிசி.,யில் எந்த ஒரு வேலைக்குச் சென்றாலும், ஆபிசர்களை பார்க்க விடாமல் பிச்சு பிடுங்குறாங்களேன்னு பப்ளிக்கை அலறவிடலாமா.இவங்கள கட்டுப்படுத்த மாஜி தலைவரு புதுசா சட்டம் எல்லாம் போட்டாரு. ரகசிய கேமராக்களை ஏற்படுத்தி 'செக்' வைத்தாரு. அவரோடு பதவிக் காலம் முடிந்ததும் பழையபடி ஆட்டம் போட தொடங்கி இருக்காங்க.நடப்பாண்டில் மாணவர்களுக்கு கல்விக்கு உதவியாக லேப் டாப் தருவதாக தீர்மானங்கள் போட்டதோடு சரி. அதனை வழங்கவே இல்லை. ஸ்காலர்ஷிப் தொகைகளையும் குறிப்பிட்ட ஏஜன்ட்கள் மூலமே பணம் வழங்கியதாக பேசிக்கிறாங்க.தீராத தண்ணீர் தட்டுப்பாடு!ப.பேட்டை, மாலுார், கோலாரு நகரங்களுக்கு எரகோள் குடிநீர் வழங்க 17 ஆண்டுகளாக பல கோடிகளை செலவழைச்சாங்க. பல பேருக்கு கமிஷனில் பங்கு மட்டுமே குறை காணாதபடி சப்ளை நடந்ததாம். அந்த எரகோள் அணையை சி.எம். வரவழைச்சி திறந்தாங்க. ஆனாலும் கூட இன்னும் ப.பேட்டையில் பல கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு இப்பவும் தீரவே இல்ல. ஏரிகளும் மாயமாகுது.கோடை வரும் முன்னதாகவே தண்ணீர் பிரச்னை அல்லல்பட வைக்குது. பெரிய தலைவர்களே ஏரிகளை ஆக்ரமித்து 'பிளாட்' போட்டு விற்று ஏப்பமிட்டாங்களாம்.3 ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பு செய்ததாக கைக்கார அசம்பிளி காரரின் மதர் பேரிலும் எப்.ஐ.ஆர். பதிவாகி இருக்குதாம்.இவங்க ஜனங்கள நல்லா காப்பாத்து வாங்கன்னு அதிருப்தியை ஜனங்க வெளிபடுத்துறாங்க.புல்லுக்கட்டை நம்பியுள்ள தாமரை!முல்பாகல்னு ஒரு அசெம்பிளி தொகுதி கோலார் மாவட்டத்துக்குள்ளே தான் இருக்குது.இந்த தொகுதியில் ஒரு முறை கூட ஜெயிக்காத தாமரையை 'ஸ்ட்ராங்' ஆக்க ஒரு தலைவரும் அங்கு இல்ல.கை, அரிவாள் சுத்தி, புல்லுக்கட்டு, சுயேச்சை என எல்லோருமே அசெம்பிளிக்கு ஜெயிக்கிறாங்க. ஆனால், தாமரை மலரவே இல்ல.இன்னும் சில மாதங்களில் நடக்க இருக்கிற லோக்சபா தேர்தல்ல புல்லுக்கட்டும், தாமரையும் இணைய போகுதாம். ஆனாலும் தாமரைக்காரங்க ஓட்டு வாங்குற சக்தி அங்கு யாருக்கு இருக்கு என்பதை கண்டுப்பிடிக்கலையாம்.மாநிலத்தில் தாமரை ஆட்சியில் சுயேச்சையை மந்திரி ஆக்கி ஓரிரு ஆண்டிலேயே பதவியை பறிச்சாங்க. அந்த மாஜி மந்திரியும் தாமரையில் வேரூன்றல. அவரும் சுயேச்சையாவும் ஜெயிக்க முடியல.காவிக்காரர்கள் முல்பாகலில் ஓட்டுகளை அள்ள புல்லுக்கட்டு காரர்களை தான் நம்பி இருக்காங்களாம்.