உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கெஜ்ரிவால் சிறைவாசம் தொடர்கிறது: ஜாமின் மீதான தடை நீடிக்கிறது

கெஜ்ரிவால் சிறைவாசம் தொடர்கிறது: ஜாமின் மீதான தடை நீடிக்கிறது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமினுக்கு விதித்த தடையை நீட்டித்து டில்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி திஹார் சிறையில் இருக்கும் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ரோஸ் அவென்யூ நீதிமன்றம் கடந்த 20ம் தேதி ஜாமின் வழங்கியது. இதனை எதிர்த்து அமலாக்கத்துறை டில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனை விசாரித்த நீதிமன்றம், ஜாமினுக்கு இடைக்கால தடை விதித்தது.இந்த மனு மீண்டும் விசாரணைக்கு வந்த போது நீதிபதி சுதிர் குமார் ஜெயின் தலைமையிலான அமர்வு கூறியதாவது: கெஜ்ரிவாலுக்கு ஜாமின் மனுவை நீதிமன்றம் சரியாக விசாரிக்கவில்லை. ஜாமின் வழங்க முடிவு செய்வதற்கு முன்னர், அமலாக்கத்துறைக்கு சரியான வாய்ப்புகளை வழங்கி இருக்க வேண்டும். அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆவணங்களை ஆய்வு செய்யவில்லை எனக்கூறி கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமின் மீதான இடைக்கால தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

M Ramachandran
ஜூன் 25, 2024 20:37

ஜனநாயகத்தைய்யெ கேள்வி குரியாக்கும் பித்தலாட்டா பேர்வழி


M Ramachandran
ஜூன் 25, 2024 20:35

இந்த ஆள் சாதாரண ஆள் இல்லை. வானத்தைய்யெ வில்லாகா வளைக்கும் பொய் பேசுவாதகில் உலகமகா எத்தன்


karutthu
ஜூன் 25, 2024 17:48

சிறையில் இருக்கும் ஒரு முதல்வர் முதல்வராக செயல் பட முடியுமா ? ஒரு எம் எல் ஏ ராஜினாமா செயாமல் எம் பீ பதவிக்கு போட்டி இடலாமா ?ஒருவேளை தோற்றால் எம் எல் ஏ ஆக பதவியில் இருக்கலாமா ?


Balasubramanian
ஜூன் 25, 2024 16:07

இதெல்லாம் ஏன் இப்படி? முறைப்படி விசாரணை செய்து தீர்ப்பு வரும் வரை முதல்வர் பதவியை கோர மாட்டேன் என்று உதறித் தள்ளுங்கள்! எல்லாம் நல்லபடியாக நடக்கும்!


Narayanan
ஜூன் 25, 2024 16:01

சபாஷ் . நீதி வாழ்கிறது சிலரது மூலமாக .இறைவனுக்கு நன்றி


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 16:00

இலாகா பொறுப்பு எதுவுமே இல்லாதவர் உள்ளே இருப்பதால் நஷ்டமெதுவுமில்லை. 40 கோடி பங்களா வாசம் இனி கனவில்தான்.


sridhar
ஜூன் 25, 2024 15:25

ஹ்ம்ம் , டெல்லி மக்கள் கொடுத்து வைத்தவர்கள், அவங்க முதல்வர் சிறையில் இருக்கிறார்.


மேலும் செய்திகள்













அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை