உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த குழு அமைத்தது மத்திய அரசு

தேசிய தேர்வு முகமையை மேம்படுத்த குழு அமைத்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: தேசிய தேர்வு முகமை அமைப்பை மேம்படுத்துவது மற்றும் அது நடத்தும் தேர்வுகளை நேர்மையாகவும் வெளிப்படைத்தன்மையுடன் நடத்துவது குறித்தும் ஆய்வு செய்ய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து உள்ளது.நீட் தேர்வு குளறுபடி காரணமாக தேசிய தேர்வு முகமை(என்டிஏ) கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி உள்ளது. தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதன் பின்னர், நெட் தேர்வானது முறைகேடு புகார் காரணமாக ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது. என்டிஏ அமைப்பு விமர்சனத்திற்கு உள்ளானதை அடுத்து அதன் செயல்பாடுகள் குறித்து ஆராயப்படும். மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=2yfdmlbh&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், என்டிஏ நடத்தும் தேர்வுகளை வெளிப்படைத்தன்மையுடன், சுமூகமாகவும், நேர்மையாகவும் நடத்துவது குறித்து ஆராய இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் மத்திய அரசு குழு அமைத்து உள்ளது. இந்த குழு உறுப்பினர்களாக எய்ம்ஸ் முன்னாள் இயக்குநர் ரன்தீப் குலேரியா, ஐதராபாத் மத்திய பல்கலை துணை வேந்தர் பிஜே ராவ், சென்னை ஐஐடி பேராசிரியர் ராமமூர்த்தி, டில்லி ஐஐடி டீன் ஆதித்யா மிட்டல் மற்றும் கர்மயோகி பாரத் அமைப்பு குழு உறுப்பினர் பங்கஜ் பன்சால் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். மத்திய கல்வித்துறை இணை செயலாளர் கோவிந்த் ஜெய்ஸ்வால் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.இந்த குழுவானது.தேர்வு நடவடிக்கைகளில் செய்ய வேண்டிய சீர்திருத்தம்தகவல் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்துவதுஎன்டிஏவின் செயல்பாடு மற்றும் இயக்கம் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஆய்வு செய்து இரண்டு மாதங்களில் அறிக்கை அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

venugopal s
ஜூன் 23, 2024 07:28

தமிழக அரசு கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய இழப்புகளுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தது போல் இதுவும் ஒரு கண் துடைப்பு வேலை தான்!


K.n. Dhasarathan
ஜூன் 22, 2024 21:49

தவறு செய்தவர்களை தண்டிப்பது எப்போது ? சும்மா குழு வை போட்டேன் ,அறிக்கை பார்த்தேன், நடவடிக்கை இனிமேல் என்கிற கதை எல்லாம் வேண்டாம், இங்கே இவ்வளவு கடும் சோதனைகளை செய்து மாணவர்களை நீட் தேர்வுக்கு அனுப்பிய தேர்வுக்குழு அங்கு மட்டும் மெத்தனமாக, காப்பி அடிக்கும் விதமாக, வினாத்தாள் லீக் என்று கச்சேரி செய்வதை ஏற்க முடியாது? தப்பு செய்தவர்களை தண்டிக்கவில்லை எனில் அடுத்த கட்ட நடவடிக்கை பாயும் கண்டிப்பாகா, அப்புறம் செய்தி தாள்களில் வந்து விட்டதே என்று நோகக்கூடாது.


Svs Yaadum oore
ஜூன் 22, 2024 20:57

முதலில் தமிழ் நாட்டில் சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வை முறையாக நடத்த விடியல் முயற்சி செய்யட்டும் ....அப்பறம் மாநில உரிமையை மீட்கலாம் .... வெறும் 6000 குரூப் 4 பணியாளர் தேர்வுக்கு தமிழ் நாட்டில் 20 லட்சம் நபர்கள் தேர்வு எழுதும் நிலைமை ....இந்த தேர்வில் நடந்த ஏகப்பட்ட முறைகேடுகள் பற்றி விசாரிக்க பாட்டாளி அறிக்கை ...இதில் தமிழ் நாடு படித்து முன்னேறிய மாநிலமாம் . ....... தமிழ் நாட்டில் ஒரு சாதாரண சர்வீஸ் கமிஷன் தேர்வு கூட சரியாக நடத்த கூட இந்த விடியலுக்கு வக்கில்லை . ....இந்த அழகில் விடியல் மத்திய அரசை குறை சொல்லுது .....என்னய்யா இதுக்கு அர்த்தம்??...


நாகேஸ்வரன்
ஜூன் 22, 2024 20:55

இங்கே சாராயக் கேசை விசாரிக்க வெச்ச ஒரு நபர் குழு மாதிரிதான்.


ஆரூர் ரங்
ஜூன் 22, 2024 18:45

பொதுமக்கள் குறுக்குவழியில் செல்லும் ஆசையை முற்றிலும் விடாதவரை ஏமாற்றுக்காரர்கள் இருக்கத்தான் செய்வார்கள். பல்லாயிரக்கணக்கான சென்டர்களில் தேர்வு நடத்தும் போது ஓரிரண்டு புல்லுருவிகள் வேலையை காட்டுவது சாதாரணம். அதற்கு எத்தனை சட்டங்களை போட்டா லும் போதாது. TNPSC போன்றவற்றில் ஊழல் நடக்காமல் இருக்கிறதா?


Duruvesan
ஜூன் 22, 2024 17:04

விடியல் உண்மையானவன் என்றால் அணைத்து மருத்துவ கல்லூரியும் அரசுடமை ஆகுவாரா?


Svs Yaadum oore
ஜூன் 22, 2024 16:16

இவ்வளவு பெரிய நாட்டில் இந்தியா முழுக்க தேர்வு நடத்தும் போது ஒரு சில குறை இருக்கும் ...ஆனால் அது மாணவர் பிற்கால வாழ்க்கையை பாதிக்கும் அளவு இருக்க கூடாது .....தேர்வு நடத்தும் முறை சிறு அளவுக்கு கூட தவறு நடக்க அனுமதிக்க கூடாது ....அதை இந்த குழு முழுமையாக உறுதி செய்ய வேண்டும் ...குழு பரிந்துரையை முழுமையாக அமல் படுத்த வேண்டும் ...


கனோஜ் ஆங்ரே
ஜூன் 22, 2024 16:48

-////இவ்வளவு பெரிய நாட்டில் இந்தியா முழுக்க தேர்வு நடத்தும் போது ஒரு சில குறை இருக்கும்-/ . நீட்..ல எப்படி 720 மார்க் வாங்கிச்சு...? இது சிறு குறையா...? அப்புறம்... நெட்... தேர்வு வினாத்தாள் 48 மணி நேரத்திற்கு முன்னாள் 5,000, 6,000, 10,000னு கூவி கூவி வித்தது சிறு குறையா...? நீங்க சொன்ன “சில குறை”...என்பது பணக்காரன்கிட்ட பணம் இருந்தா... +2ல பெயிலானவன்கூட நீட்ல பாஸ் செய்ய முடியும்... நெட்ல பாஸ் செய்ய முடியும். என்னய்யா... இது...?


மேலும் செய்திகள்









புதிய வீடியோ