உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வறுமையால் கைநழுவிய ஐ.ஐ.டி., சீட் ஒரே உத்தரவில் ஓகே செய்தது கோர்ட்

வறுமையால் கைநழுவிய ஐ.ஐ.டி., சீட் ஒரே உத்தரவில் ஓகே செய்தது கோர்ட்

புதுடில்லி : வறுமை காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாததால், தலித் இளைஞருக்கு ஐ.ஐ.டி., சீட் மறுக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்றம் தலையிட்டு மாணவனின் வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சியுள்ளது. உத்தர பிரதேசத்தின் முசாபர்நகர் மாவட்டத்தின் திடோரா கிராமத்தைச் சேர்ந்தவர் அதுல் குமார், 18.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kwt2ao0z&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பட்டியல் இனத்தைச் சேர்ந்த இவர், இந்த ஆண்டு நடந்த ஜே.இ.இ., தேர்வில் தகுதி பெற்றதை அடுத்து, அவருக்கு ஜார்க்கண்டின் தன்பாத் ஐ.ஐ.டி.,யில் பி.டெக்., இடம் ஒதுக்கப்பட்டது. இடம் கிடைத்த நான்கு நாட்களுக்குள், அதாவது கடந்த ஜூன் 24ம் தேதிக்குள் 17,500 ரூபாய் கட்டினால் சீட் நிச்சயம் என்ற நிலை. கூலித் தொழிலாளியான அதுலின் தந்தை, அந்தப் பணத்தை புரட்ட முடியாமல் போனதால், அதுலின் ஐ.ஐ.டி., கனவு தகர்ந்தது. மனம் தளராத அதுல் மற்றும் அவரது தந்தை, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் கதவை தட்டினர்; ஜார்க்கண்ட் மாநில சட்ட உதவி ஆணையத்திலும் முறையிட்டனர்.ஐ.ஐ.டி., ஒருங்கிணைந்த சேர்க்கையை சென்னை ஐ.ஐ.டி., நடத்தியதால், சென்னை நீதிமன்றத்தை அணுகும்படி, சட்ட உதவி ஆணையம் அறிவுறுத்தியது. மாநிலம் கடந்து வந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தை நோக்கி கை நீட்டியது சென்னை உயர் நீதிமன்றம். எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் படிப்பை லட்சியமாக கொண்ட அதுல், இறுதி நம்பிக்கையுடன் உச்ச நீதிமன்றத்தின் கதவை தட்டினார்.அவரது நம்பிக்கை வீண் போகவில்லை. அதுல் தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது.'நாள்தோறும் 450 ரூபாய் கூலி வாங்கும் தந்தையால், நான்கு நாட்களில் 17,500 ரூபாய் கட்டுவது என்பது இயலாத காரியம். 'ஆகையால், சட்டத்தின் 142வது பிரிவின் கீழ் நீதிமன்ற அதிகாரத்தின்படி, பட்டியல் இன மாணவருக்கு சீட் வழங்க தன்பாத் ஐ.ஐ.டி.,க்கு உத்தரவிடப்படுகிறது. 'தற்போதுள்ள மாணவர் எண்ணிக்கைக்கு தொந்தரவு அளிக்காத வகையில், சூப்பர்நியூமரரி இருக்கைபடி, மாணவருக்கு இடம் ஒதுக்கலாம்' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.நீதிபதிகளின் வாழ்த்துகளை பெற்ற அதுல், 'தடம்புரண்ட இந்த ரயில், நீதிமன்ற உத்தரவால் மீண்டும் பாதைக்கு திரும்பியுள்ளது' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

N Annamalai
அக் 06, 2024 14:53

சென்னை உயர் நீதி மன்றம் ஏன் இதில் வந்தது ?. jhaarkandh மாநிலம் அலகாபாத் உச்ச நீதி மன்றம் தானே அவர் சென்று இருக்க வேண்டும் .


வேலுச்சாமி தேவர்
அக் 02, 2024 13:40

இது போல் சில ஏழை மாணவனுக்கு நீதிமன்றம் மூலம் வெளிச்சம் கிடைப்பது மக்களின் நம்பிக்கை வீன் போகாது


VELAN S
அக் 02, 2024 13:08

இது தான் நேர்மை


VELAN S
அக் 02, 2024 13:06

இது தான் நீதி


VELAN S
அக் 02, 2024 13:06

இது தாண்டா நீதி


Saai Sundharamurthy AVK
அக் 01, 2024 18:38

இதற்கு முன்பு எத்தனை பேருக்கு இந்த மாதிரி சோகம் ஏற்பட்டது என்பது குறித்து ஆராய வேண்டும். ஏழ்மை என்பது எல்லா சமுதாய வகுப்புகளிலும் இருக்கிறது. இதில் முன்னேறிய சமூகம், பின்தங்கிய சமூகம் என்பதெல்லாம் கிடையாது. பார்ப்பதற்கு முன்னேறிய சமூகம் போல் காட்சியளித்தாலும் அவர்களிலும் ஆதரவற்ற ஏழைகள் நிறைய இருக்கிறார்கள். தங்களின் நிலமை கருதி வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள்.


jiivan
அக் 01, 2024 18:31

சீட் ஓதுக்கியாச்சு சரி. இப்போ கட்டுவதற்கு காசு வந்திருச்சா? இல்லே ஃப்ரீ கல்வியா?


வேலுச்சாமி தேவர்
அக் 02, 2024 13:42

இலவச கல்வியை கற்ற பின் இந்தியாவின் துரோகியாக மாறாமல் இருந்தால் போதும்


Subash BV
அக் 01, 2024 13:47

WHAT POLITICAL PARTIES WERE DOING, WHO WERE TOM TOMING THAT THEY THE PIONEERS IN HELPING POOR. NOT A BIG AMOUNT COMPARED TO THEIR LOOT. IS RAHUL HEARING.


Thanu Srinivasan
அக் 01, 2024 11:39

அது சரி பட்டியலின மக்கள் என்றால் போட்டி போட்டுகொண்டு உதவுவதில் நீதிமன்ம் புளகாகிதம் அடைகிறது. முன்னேறியவர்கள் என்று முத்திரை குத்தபட்ட ஜாதியினரிலும் பரம ஏழைகள் உள்ளனர். அவர்களை எவரும் கண்டு கொள்வதில்லை ஒரு சட்டம் என்றால் சட்டம்தான் என்றிருக்கவேண்டும். ஒலிம்பிக்கில் வெறும் நூறு கிராம் எடை அதிகமாக இருந்தற்காக போட்டியிட அனுமதிக்க மறுத்துவிட்டது சர்வதேச மல்யுத்த கமிட்டி நூறு கிராம்தானே என்று பல்லை இளிக்கவில்லை. ரூல் என்றால் ரூல்தான். அதுல்குமார் விஷயத்திலும் அதையே கடை பிடித்திருக்க வேண்டும்


பெரிய குத்தூசி
அக் 01, 2024 10:15

இது போன்ற சூழலில் இதுபோன்ற தகுதி வாய்ந்த ஏழை மாணவர்களுக்கு உதவ சமூக நிதி என்ற பண உதவி அமைப்பை மத்திய அரசு நிறுவ வேண்டும். வாழ்த்துக்கள் அதுல்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை