உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காட்டில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக்குழு

காட்டில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக்குழு

பந்தலூர்: வயநாடு காட்டில் தவித்த பழங்குடியின குழந்தைகளை மீட்ட வனக்குழுவினருக்கு பாராட்டு குவிந்து வருகிறது.கேரளா மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே முண்டக்கை பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சூரல்மலை, உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் சிக்கி சின்னாபின்னமானது. இதில் அட்டமலை வனப்பகுதியில் பழங்குடியின கிராமங்கள் அமைந்துள்ளது. இதில் ஏராட்டுக்குன்னு என்ற இடத்தை சேர்ந்த கிருஷ்ணன் மற்றும் சாந்தா இருவரும் குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு, வனத்திற்குள் சென்றுள்ளனர்.அன்று இரவு நிலச்சரிவு ஏற்பட்ட நிலையில் கிருஷ்ணன், சாந்தா இருவரும் தங்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் வனப்பகுதிக்குள் சிக்கிக் கொண்டனர். வனத்துறையினர் அவர்களை மீட்டு முகாமுக்கு அழைத்து வந்த நிலையில், இவர்களின் குழந்தைகள் வனத்திற்குள் உள்ள குடிசை வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.அதனைத் தொடர்ந்து கல்பட்டா வனச்சரகர் ஆசிப் தலைமையிலான குழுவினர், சுமார் 7 கிலோமீட்டர் தூரம் உள்ள மலையில் செங்குத்தான பாதையில், கயிறு கட்டி நடந்து சென்று குழந்தைகளை மீட்டு முகாமுக்கு கொண்டு வந்தனர். அவர்களுக்கு பிஸ்கட் மற்றும் தண்ணீர் கொடுத்து கட்டி அணைத்து வனத்துறையினர் மீட்டுக் கொண்டு வந்த செயல் அனைவரின் பாராட்டையும் பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Godyes
ஆக 03, 2024 14:04

இந்திய சுதந்திரம் வாங்கி எழுப்பத்தேழு ஆண்டுளாகிவிட்டன.இன்னும் இவர்களை காட்டுவாசிகளாக வைத்திருக்கலாமா.இந்த தொகுதி சட்டமன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டு கேட்க போகும் போது இந்த காட்டு வாசிகளை பொது மக்கள் வசிக்குமிடங்களில் குடிவைத்திருக்கலாமல்லவா.


S. Narayanan
ஆக 03, 2024 13:18

Congratulations rescued team


Ramesh Sargam
ஆக 03, 2024 13:06

குழந்தைகளை மீட்ட வனக்குழுவினர்க்கு தலைவணங்குகிறேன். இனி மீட்கப்பட்ட குழந்தைகளை காக்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு. தன்னார்வலர்களும் தங்களால் முடிந்த உதவிகளை செய்யலாம்.


S SRINIVASAN
ஆக 03, 2024 12:57

Really great job, rescuers family will be blessed by God, they will live with prosperity


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை