உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / கோவிலில் சட்டையை கழற்றும் விவகாரம்: மீண்டும் சர்ச்சை

கோவிலில் சட்டையை கழற்றும் விவகாரம்: மீண்டும் சர்ச்சை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருவனந்தபுரம்: “கோவில்களின் உள்ளே ஆண் பக்தர்களின் மேல் சட்டையை கழற்றும் விவகாரம் தொடர்பான சர்ச்சை ஹிந்துக்களின் ஒற்றுமையை பாதிக்கக்கூடாது,” என, ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பின் பொதுச் செயலர் வெல்லப்பள்ளி நடேசன் தெரிவித்துள்ளார்.கேரளாவில், பெரும்பாலான கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள், மேல் சட்டையை கழற்றும் முறை நடைமுறையில் இருந்து வருகிறது. அங்குள்ள நாராயண குருவின் சிவகிரி மடத்தில், சமீபத்தில் சிவகிரி யாத்திரை மாநாடு நடந்தது. இதில் பங்கேற்ற சுவாமி சச்சிதானந்தா, 'கோவில்களுக்கு செல்லும் ஆண் பக்தர்கள் மேல்சட்டை அணியக்கூடாது என்பது சமூக நீதிக்கு எதிரானது. அந்த முறை கைவிடப்பட்ட வேண்டும்' என தெரிவித்திருந்தார்.இந்த கருத்தை முதல்வர் பினராயி விஜயன் வரவேற்றார். 'மாறி வரும் காலத்துக்கேற்ப இது போன்ற நடைமுறைகளை தவிர்க்கலாம்' என அவர் தெரிவித்திருந்தார். இது, கேரள கோவில் நிர்வாகங்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து கேரளாவில் உள்ள ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.

அதன் பொதுச் செயலர் வெல்லப்பள்ளி நடேசன் கூறியதாவது:

ஹிந்துக்களிடையே உள்ள பல பிரிவினர், பல்வேறு பழக்க வழக்கங்களையும், நடைமுறைகளையும் பின்பற்றி வருகின்றனர். கோவில்களில் ஆண்கள் மேல் சட்டையை கழற்றுவது போன்ற பிரச்னைகள் அவர்களிடையே பிரிவினையை உருவாக்கக் கூடாது. சுவாமி சச்சிதானந்தா கூறியதில் தவறேதும் இல்லை. ஸ்ரீ நாராயண தர்ம பரிபாலன யோகம் கீழ் செயல்படும் கோவில்களில், ஆண்கள் மேல்சட்டை அணிய அனுமதிக்கப்படுகிறது. சில கோவில்களில் வெவ்வெறு நடைமுறைகள் இருக்கலாம். ஆனால், அவற்றை ஒரே நாளில் அழிக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். இதற்கிடையே, சுவாமி சச்சிதானந்தாவின் கருத்துக்கு முதல்வர் பினராயி விஜயன் வரவேற்பு தெரிவித்தற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்த திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் கூறுகையில், “பல்வேறு கோவில்களில் பின்பற்றப்படும் பழக்க வழக்கங்களில், சரியான நேரத்தில் மாற்றங்கள் தேவையா என்பது குறித்து, ஆரோக்கியமான விவாதம் நடத்தப்பட வேண்டும்.“அனைத்து பிரிவுகளுடனும் விவாதிக்காமல், இந்த விஷயத்தில் எந்த முடிவுக்கும் வர முடியாது,” என்றார்.

அரசு தலையிடக்கூடாது!

நாயர் சமூக சங்க பொதுச்செயலர் சுகுமாரன் நாயர் கூறியதாவது: அனைத்து ஹிந்துக்களும், அந்தந்த வழிபாட்டுத் தலங்களில் உள்ள நடைமுறைகளை சீர்குலைக்காமல் கோவில்களுக்குள் நுழைய சுதந்திரம் உள்ளது. எனவே, கோவில்களில் உள்ள பழக்க வழக்கங்கள் மற்றும் நடைமுறையில் அரசு தலையிடக் கூடாது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.கேரள யோகக்ஷேம சபா தலைவர் அக்கீரமன் காளிதாசன் பட்டாதிரிபாட்டும், இதே கருத்தை வலியுறுத்தியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 28 )

Senthil
ஜன 05, 2025 17:49

இந்து மதத்தில் உள்ள ஒரே குறை ஒரு குறிப்பிட்ட வேலையை ஒரே ஒரு கூட்டம் மட்டும்தான் செய்யமுடியும் என்ற நிலை உள்ளது. தகுதியுடைய யாரும் அந்த வேலையை செய்ய அனுமதிப்பதே சரி, ஆனால் அதைப் பற்றி இங்கு யாரும் பேசுவதில்லை. சும்மா சட்டையை கழட்டுறது மாட்டுறதை பற்றி பேசுவதால் எந்த பயனும் இல்லை.


A P
ஜன 06, 2025 15:40

அந்த தகுதியடைவதுதான் எப்படி என்று அந்தந்த கோவில் ஆகம விதிகள் சொல்கின்றன. அது சரி, கோவிலுக்கு சாமி கும்பிட போகிறீர்களா, கோவில் அடையாளத்தை சிதைக்கப் போகிறீர்களா என்பது சந்தேகமாயிருக்கிறது. சாமியே இல்லை, கும்பிடுபவன் அவன் இவன் என்கிற கும்பலுக்கு, கோவிலில் என்ன வேலை. தைரியமிருந்தால் ஒரே ஒரு நாள், பிரதம மந்திரியின் ஆபீசில் நுழைந்து அவரது நாற்காலியில் உட்கார பாருங்களேன். அல்லது கலெக்டரின் ஆபீசில் நுழைந்து அவரது நாற்காலியில் உட்கார பாருங்களேன். ஏன் அங்கும் தடுக்கிறார்கள் என்று மரமண்டைகளுக்கு புரியவரும்.


S. Neelakanta Pillai
ஜன 05, 2025 04:57

இந்த நாட்டில் எது சமூக நீதி என்கிற புரிதலே இல்லாமல் போய்விட்டது. சமூக நீதிக்கு எதிரான அனைத்து குற்ற செயல்களும் அரசியல் போர்வையில் கோலாகலமாக நடக்கிறது. அதைப்பற்றி பேச இங்கே நாதி இல்லை. ஒரு கோவிலில் அனைத்து ஆண் மக்களும் சட்டையை கழட்ட வேண்டும் என்ற நடைமுறையில் என்ன சமூக நீதி குறைபாடு வந்துவிட்டது. ஆண் பெண் பாகுபாடு பார்ப்பது சமூக நீதி குறைபாடு என்று பொத்தாம் பொதுவாக சொன்னால் பெண் மட்டும் குழந்தை பெறுவது எப்படி சமூக நீதி ஆகும் என்று கேட்பதும் நியாயம்தானே. அதனால் கேரளாவில் இருக்கும் அனைத்து ஆண் மக்களுக்கும் பினராயி விஜயன் கர்ப்பப்பை வைத்து தைக்க ஆபரேஷன் செய்ய முன்வருவாரா அல்லது சாமியார்தான் இந்த கருத்தை முன்மொழிவாரா.... உருப்படியாக குற்றம் இல்லாத நல்ல சமூகத்தை மீட்டெடுக்க சிந்தியுங்கள் அதற்கு பாடுபடுங்கள். உங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்பை நாட்டு மக்களை குற்றவாளிகளிடம் இருந்து சமூக விரோதிகளிடம் இருந்து தேச துரோகிகளிடம் இருந்து மீட்டெடுக்க உழையுங்கள்


Sivakumar
ஜன 04, 2025 21:24

This kind of Government interference in religious affairs is highly unwarranted


Senthil
ஜன 05, 2025 17:35

அதற்காக கோயில்களில் அநியாயங்கள் நடந்தால் அதை அரசு கேட்காமல் வேடிக்கை பார்க்க முடியுமா? அநியாயம் செய்பவர்களை அரசுதானே சுளுக்கு எடுக்கனும். ஆனால் இது அனைத்து ஆண்களுக்குமான ஒரு வழக்கம் என்பதால் இதில் எந்த பிரச்சினையும் இல்லை ஆனால் கேரள அரசு எதோ பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறதோ


jayvee
ஜன 04, 2025 18:35

அந்தசாமியார் கம்யூனிஸ்ட் சாமியாரை இருப்பானோ.. ? நம்ம ஊருல திராவிட சாமியார்கள் இருக்கிறமாதிரி


Tetra
ஜன 04, 2025 18:15

நாளைக்கு ஷு கூட போட்டுக்கலாம். மாட்டுக்கறி ப்ரசாதமாக தரலாம் என்று கூட சொல்வார்கள்


Saravanan K
ஜன 04, 2025 18:43

சரியாக சொன்னீர்கள்.


Tetra
ஜன 04, 2025 18:13

ஆமாம் ஆமாம் அசோக் உங்களுக்கு மட்டும்தான் ஹிந்துக்கள் நம்பிக்கையை அழிக்க உரிமையுள்ளது. ஹிந்துக்களுக்கு தங்கள் நம்பிக்கையை காக்க கூட உரிமை இல்லை.


Saravanan K
ஜன 04, 2025 17:56

ஒவ்வொரு மதத்திற்கும் தனித்தனி மரபுகள் உள்ளது. மக்களை வழி நடத்தவே மதங்களும் அதை சார்ந்த கோயில்களும் தோன்றின.இதை அ‌ந்த‌ந்த சமூகங்கள் ஏற்றுகொண்ட வரை அரசு அதில் தலையிடுவது சரியில்லை.. ஏன் இவ்வளவு பேசுபவர்கள் தங்கள் பிள்ளைகளை ஸ்கூல்-க்கு சீருடையில் மட்டுமே அனுப்பவேண்டியதன் அவசியம் என்ன?..ஏன் மற்ற உடைகளை உடுத்தினால் பாடம் தலையில் ஏறாதா என்ன?.. இதை ஏன் யாரும் கேள்வி கேட்பதில்லை?..பெரியவர்கள் சொல்வார்கள் பள்ளியும் கோவிலும் ஒன்று என்று...அறிவை போதிக்கும் தலங்களும் அவ்வாறே...ஏழை மற்றும் பணக்காரன் என்ற பாகுபாடுகளற்ற சனாதன தர்மத்தை வலியுறுத்துவே கொள்கைகளை வகுக்கின்றன...கோயில்களில் கடவுள் முன் அனைவரும் சமம் என்று வலியுறுத்தவே ஆண்கள் மேலாடை அணிய அனுமதிப்பதில்லை.. அதிகமாக ஆண் கடவுள்களும் மேலாடை இன்றியே பூஜிக்க படுகிறார்கள்...மேலும் குடும்பமும் வழிபாட்டுத் தலங்களும் ஒன்று என்றும் சொல்வார்கள்..எப்படி குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை குடும்ப உறுப்பினர்களே சரி செய்து மேடைக்கு வராமல் பார்த்து கொள்கிறார்களோ அதை போலத்தான் காக்கவேண்டும் எல்லா வழிபாட்டு தலங்களின் மரபுகளை ...மதிக்க வேண்டுமே தவிர யாரும் விமர்சனம் செய்ய கூடாது....


தமிழ்வேள்
ஜன 04, 2025 11:12

ஆப்ரஹாமிய மதங்கள் போல வழிபாட்டு இடங்களில் பிணங்களை கொண்டு வர வேண்டும் என்று கூறினாலும் கூறுவார்கள்.. ஆப்ரஹாமிய மதங்கள் பிணங்களை வைத்து பிராத்தனை செய்தால் பின் அந்த இடத்தை கழுவுவதில்லை... மாறாக உணவும் அங்கே உண்ணுகிறார்கள் பிணத்தின் பின் இடுகாடு சென்று திரும்பினாலும் பின்னர் குளிப்பது கிடையாது... வரைமுறையற்ற மாமிசம் & மைதுனம்.. இந்த அனாச்சாரத்தை ஹிந்துக்கள் மீதும் திணிக்க படாத பாடு படுகிறார்கள்...


AMLA ASOKAN
ஜன 04, 2025 08:45

கோவிலில் உள்ள சாமி தன்னை வழிபடவந்த ஒருவனின் உள்ளத்தையும் , பக்தியையும் தான் பார்ப்பானே அல்லாமல் அவன் உடம்பை பார்ப்பதில்லை . ஒருவன் மேலாடை அணிந்து வந்ததால் அவனது வேண்டுதலை அந்த சாமி நிராகரிக்க மாட்டார் . இத்தகு சம்ப்ராயதங்களினால் இன்றைய அவசரகதி உலகத்தில் தன் அலுவலகத்திற்கோ , பணிக்கோ செல்லும் ஒருவன் சாமியை வணங்கி விட்டு செல்லும் வழக்கம் மிக குறைந்து விட்டது . இது இந்து மதம் சம்பந்தப்பட்டது . மற்ற மதத்தினரை வம்புக்கு இழுப்பது தேவையற்றது .


தமிழன்
ஜன 04, 2025 11:04

சரியாக சொன்னீர்கள் நண்பரே ...விமர்சனம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் .எதிர் கேள்வி கேட்பதாக இருந்தால் சுவாமி சச்சிதானந்தாவை அல்லவா கேட்க வேண்டும்... இது அவருடைய கருத்துதானே....


Senthil
ஜன 05, 2025 17:43

ஒரு இடத்தில் ஒரு வழக்கம் நடைமுறையில் இருக்கிறது, அதில் சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை எனும்போது அதை மாற்ற ஏன் முயற்சிக்க வேண்டும்? மாணவர்கள் யூனிபார்ம் அணிந்துதான் பள்ளிக்கு வர வேண்டும் என்ற விதி ஏன் உள்ளது? மற்ற ஆடைகளில் சென்றால் படிப்பு மண்டையில் ஏறாதா? காவலர் காக்கி உடையில்தான் இருக்க வேண்டுமா? இப்படி கேட்டுக்கொண்டே போகலாம். சட்டையை கழட்டி செல்வதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அதனால் அவரவரும் அவரவர் வேலையை பார்க்கலாம்.


Sampath Kumar
ஜன 04, 2025 08:24

உங்க ஆமிக்கு மட்டும் பட்டு வேட்டி அங்கவஸ்திரம் நகை நட்டு என்று அலங்காரம் செய்கிறீர்கள் அது ஏன் பக்தனை மட்டும் சட்டையை கழட்டி விட்டு வர சொல்லகீர்கள் அதன் அர்த்தம் என்ன ? பெண்களை அப்படி வர சொல்லமால் இருப்பதின் மர்மம் என்ன ? சனாதன தர்மம் ?போதிப்பது என்ன விளக்கம் சொல்வீர்களா ? விளங்கா மட்டிகள்


Duruvesan
ஜன 04, 2025 12:02

மூர்க்ஸ் எங்க மதம், பெரியவங்க பார்த்துப்பாங்க. நீ புள்ளைகளை செருப்பு கடை, பெயிண்ட் கடைல வேலைக்கு சேர்க்காம படிக்க வெயி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை