மேலும் செய்திகள்
பாதை தகராறில் உறவினர் கொலை தந்தை, 2 மகன்கள் கைது
19-Jan-2025
மனிதர்களுக்கு கஷ்டங்கள் வருவது சகஜம். இவற்றை சமாளித்து கடந்து சென்றால் மட்டுமே, நம் வாழ்க்கை வளமாகும். இதற்கு சிறந்த உதாரணம் ஹாசனின் மூதாட்டி ஜெயம்மா.உலகில் எப்படிப்பட்ட கஷ்டங்கள் வாட்டி வதைத்தாலும், சமாளித்து வாழ வேண்டியது கட்டாயம். சோதனைகள் தொடர்ந்தாலும் தன்மானத்துடன் வாழ முடியும் என்பதை, ஜெயம்மா நிரூபித்துள்ளார்.ஹாசன் நகரில் வசிப்பவர் ஜெயம்மா, 65. இவருக்கு மூன்று மகன்கள். 10 ஆண்டுகளுக்கு முன், இவரது கணவர் இறந்துவிட்டார். திடீரென கணவர் காலமானதால், ஜெயம்மா நிலைகுலைந்தார். அதன்பின் தன்னை தேற்றி கொண்டு, பிள்ளைகளுக்காக வாழ ஆரம்பித்தார். யாரையும் சார்ந்திராமல் கணவர் பார்த்து வந்த நிலக்கடலை வியாபாரத்தை செய்ய துவங்கினார்.இவரது மூன்று மகன்களில் ஒருவர் காலமாகி விட்டார். மற்றொரு மகன், ஹாசனிலும், இன்னொரு மகன் பெங்களூரிலும் வசிக்கின்றனர். ஜெயம்மா தன் மகன்களின் உதவியை எதிர்பாராமல், தன் கையே தனக்குதவி என, தன்மானத்துடன் உழைத்து பிழைக்கிறார்.அவரே மார்க்கெட்டுக்கு சென்று, நிலக்கடலை வாங்கி, வாடகை வாகனத்தில் வந்து விற்பனை செய்கிறார். இவரிடம் கடையோ, தள்ளு வண்டியோ இல்லை. ஹாசன் நகரின், எம்.ஜி.சாலையில் உள்ள மரத்தடியில் அமர்ந்து வியாபாரம் செய்கிறார்.தன் மகன்கள், உறவினர்களிடமோ, அரசிடமோ எந்த உதவிகளையும் எதிர்பார்ப்பது இல்லை. தினமும் வியாபாரம் செய்து, அதில் கிடைக்கும் வருவாயை கொண்டு சாப்பிடுகிறார். நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களை விட, ஜெயம்மா அதிகமாகவே சம்பாதிக்கிறார். தினமும் 2,000 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். அனைத்து செலவுகளும் போக, 300 ரூபாய் லாபம் கிடைக்கிறது.மகன்கள் கை விட்டு விட்டனர், உணவுக்கு வழியில்லை என, பிச்சை எடுத்து வாழும் பலரை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் ஜெயம்மா இந்த வயதிலும், உழைத்து தன்னை தானே காப்பாற்றி கொள்கிறார். இவர் மற்றவருக்கு முன் உதாரணமாக வாழ்கிறார். - நமது நிருபர் -
19-Jan-2025