உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

முன்னாள் ஜனாதிபதி, முன்னாள் பிரதமர்களிடம் வாழ்த்து பெற்றார் பிரதமர்

புதுடில்லி: 3வது முறையாக பிரதமராக பதவியேற்ற மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடாவை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.லோக்சபா தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்ததைத் தொடர்ந்து நரேந்திர மோடி, கடந்த ஞாயிற்றுக்கிழமை( பிப்.,09) 3வது முறையாக பிரதமர் ஆக பதவியேற்றுக் கொண்டார். ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் 71 பேர் மத்திய அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.இதனைத் தொடர்ந்து மறுநாள், முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோரை தனித்தனியாக அழைத்து பேசிய பிரதமர் மோடி, அவர்களிடம் வாழ்த்து பெற்றதாக தெரியவந்துள்ளது.ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது ஜனாதிபதியாக பிரதீபா பாட்டீலும், பிரதமராக மன்மோகன் சிங்கும் இருந்தனர். அதற்கு முன், காங்கிரஸ் ஆதரவுடன் தேவகவுடா பிரதமராக பதவி வகித்தார். இவரது மகன் எச்டி குமாரசாமி, தற்போது மோடி அரசில் மத்திய அமைச்சராக இடம்பெற்றுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பல்லவி
ஜூன் 12, 2024 14:41

உலக மகா நடிப்பை காட்டியாச்சு


ARUMUGAM BALAGANAPATHY
ஜூன் 12, 2024 13:47

கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக மாணவர்கள் ஆபரேஷன் ஆய்வுக் கட்டுரைகளில் தேர்ச்சி பெற அவரது புத்தகங்களைப் படித்தது உங்களுக்குத் தெரியுமா? நமது நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் முதல் முறையாக நிதியமைச்சராக வரும்போது அவருடைய ஆசிர்வாதம் ஏன் கிடைத்தது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 18:24

ஏட்டுச் சுரைக்காய்ப் புத்தகங்கள் எழுதுவதாலேயே நாட்டின் நிதி மேலாண்மை செய்து விட முடியாது.


Nagarajan D
ஜூன் 12, 2024 13:00

மன்மோகன் சிங்கிடம் பேசினால் மட்டும் புரியவா போகிறது... இத்தாலிய உத்தரவுக்கு காத்திருக்கும் ஒரு பொம்மை...


அதுல்ராஜ்
ஜூன் 12, 2024 11:23

தேர்தலுக்கு முன்னாடி எல்லோரையும் கண்டாமேனிக்கி திட்டிட்டு இப்போ ஆசீர்வாதம் வாங்கி எளிமையான ஆளாக காட்டிக்கொள்ள முயற்சி. முதல்ல மணிப்பூருக்குப் போய் மன்னிப்பு கேளுங்க.


ஆரூர் ரங்
ஜூன் 12, 2024 12:05

சோனியா இலங்கைத் தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்பாரா?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை