உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அதிக மகசூல் தரும் 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் பிரதமர்

அதிக மகசூல் தரும் 109 பயிர் ரகங்களை அறிமுகம் செய்தார் பிரதமர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: அதிக மகசூல் தரக்கூடிய 109 புதிய பயிர் ரகங்களை பிரதமர் மோடி அறிமுகம் செய்தார்.டில்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடந்த நிகழ்ச்சியில் 34 களப் பயிர்கள் மற்றும் 27 தோட்டப் பயிர்கள் உள்பட 109 ரகங்களை பிரதமர் அறிமுகம் செய்து, விவசாயிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாடினார். விளைநிலங்களை பார்வையிட்டார்.இன்று அறிமுகம் செய்யப்பட்ட 109 ரகங்களில் களப் பயிர்களில் சிறுதானியங்கள், தீவனப்பயிர்கள், எண்ணெய்வித்துகள், பருப்பு வகைகள், கரும்பு, பருத்தி உள்ளிட்டவற்றின் புதிய ரகங்களும், தோட்டக்கலைப் பயிர்களில் பழங்கள், காய்கறிகள், சணல், மூலிகைப் பயிர்கள் உள்ளிட்டவை அடங்கும்.Gallery


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Mr Krish Tamilnadu
ஆக 12, 2024 09:56

குறைந்தது எத்தனை ஏக்கர் பயிரிட வேண்டும். பயிர் இட்டு எத்தனை நாள் ஆகும். மகசூல் பெறும் வரை எவ்வளவு செலவு ஆகும். விளைச்சலை எங்கு விற்பது. குறைந்தது எவ்வளவுக்கு விற்பனையாகும். இந்த கணக்கில் கிடைக்கும் லாபம், ஒரு மாதத்திற்கு எவ்வளவு. இத்தனை கேள்விக்கு பதில் சேர்த்து அறிமுகம் படுத்தினால் நன்றாக இருக்கும்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 12, 2024 01:07

நாட்டை சீனாவுக்கு அடிமையாக்க விரும்புவோர் இதைக் குறை கூறவும் ........


Ramesh Sargam
ஆக 11, 2024 20:28

பிரதமரின் அணுகுமுறை விவசாயிகளிடம் எப்படி உள்ளது. மேலும் அதில் ஒரு உண்மைத்தன்மை இருக்கிறது. ஆனால்... எதிர்க்கட்சிகள் விவசாயிகளின் திரையில் போராட்டம் செய்து ஏதோ அவர்கள் பிரச்சினை பேசுவதாக ஒரு நாடகம். எதிர்க்கட்சிகளின் சாயம் விலகும். உண்மை மக்களுக்கு தெரியவரும்.


Kasimani Baskaran
ஆக 11, 2024 17:32

கான்க்ரீட் ரோடு போடவில்லை என்பது மிக முக்கியமானது. தவிரவும் அவரே குடை பிடிக்கிறார். பலருக்கு இது அதீத எரிச்சலை ஏற்படுத்தும்.


SRIRAMA ANU
ஆக 11, 2024 16:57

இங்கு என்ன வேலை?


Kumar
ஆக 11, 2024 16:53

உரம் பூச்சி மருந்து இடு பொருட்கள் விலையை பன்மடங்கு உயர்ந்தது உள்ளது


hari
ஆக 12, 2024 08:27

ரு 100 ml பூச்சி மருந்து போதாதா


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை