உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பாரதத்தின் ஆன்மா!

பாரதத்தின் ஆன்மா!

பாரதத்தின் ஆன்மாவாக ஹிந்துத்துவா திகழ்கிறது. இந்த பாதையின் மூலம் கடவுளை அடைய முடியும். ஹிந்துத்துவாவின் முக்கிய கருத்துக்களை இளம் தலைமுறையினருக்கு தெரிவிக்க வேண்டும். பொது விழிப்புணர்வு, சமூக நல்லிணக்கம், சட்டங்களை கடுமையாக அமல்படுத்துவதன் மூலம், மத மாற்றங்களை தடுக்க முடியும். தத்தாத்ரேயா ஹோசபலே பொதுச்செயலர், ஆர்.எஸ்.எஸ்.,

தயாராக இருக்க வேண்டும்!

உயிரியல் பயங்கரவாதத்தை எதிர்த்து போராட உலகம் தயாராக இருக்க வேண்டும். சர்வதேச பாதுகாப்பு சூழல் நிச்சயமற்றதாக இருப்பதால், உயிரியல் ஆயுதங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்க, உலகளாவிய வழிமுறையை உருவாக்க வேண்டும். அனைத்து நாடுகளும் உயிரியல் அபாயங்களை கண்டறிந்து தடுக்க வேண்டும். ஜெய்சங்கர் வெளியுறவு அமைச்சர், பா.ஜ.,

திசை திருப்பும் முயற்சி! '

நேஷனல் ஹெரால்டு' வழக்கில் காங்., தலைவர்கள் சோனியா, ராகுலை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவே, புதிதாக முதல் தகவல்அறிக்கை பதியப்பட்டுள்ளது. ஓட்டு திருட்டு, வாக்காளர் சிறப்பு திருத்தம் ஆகியவற்றில் இருந்து மக்களை திசை திருப்பவே, பா.ஜ., இதை செய்துள்ளது. அக்கட்சியின் சதிகளை நீதிமன்றத்தில் முறியடிப்போம். சுப்ரியா ஸ்ரீநாத் செய்தித் தொடர்பாளர், காங்.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை