உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / குழந்தை ராமர் சிலை இறுதி செய்யப்படவில்லை

குழந்தை ராமர் சிலை இறுதி செய்யப்படவில்லை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

அயோத்தி: 'அயோத்தி ராமர் கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை, இதுவரை இறுதி செய்யவில்லை' என, அக்கோவிலின் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தின் அயோத்தியில், ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை சார்பில், பிரமாண்ட ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் கும்பாபிஷேக விழா, வரும் 22ம் தேதி நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகின்றன.இதற்கிடையே, கோவிலின் கருவறையில் பிரதிஷ்டை செய்ய, மூன்று சிலைகள் தயார் செய்யப்பட்டன. அதில், 5 வயதுடைய குழந்தை வடிவிலான ஒரு சிலையை, அறக்கட்டளை நிர்வாகிகள், ஓட்டெடுப்பு வாயிலாக இரண்டு நாட்களுக்கு முன் தேர்வு செய்ததாக தகவல் வெளியானது.இதை உறுதிப்படுத்தும் வகையில், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா, தன் சமூக வலைதளத்தில் கர்நாடகாவின் மைசூரைச் சேர்ந்த சிற்ப கலைஞர் அருண் யோகிராஜ் வடிவமைத்த குழந்தை ராமர் சிலை தேர்வாகி இருப்பதாக குறிப்பிட்டார்.இந்நிலையில், அக்கோவிலின் அறக்கட்டளை நிர்வாகிகளில் ஒருவரான பிரகாஷ் குப்தா கூறுகையில், ''இதுவரை கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் சிலையை இறுதி செய்யவில்லை. அறக்கட்டளை நிர்வாகம் சார்பில் எடுக்கப்படும் முடிவை, வெளிப்படையாக தெரிவிப்போம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

அப்புசாமி
ஜன 03, 2024 12:59

இராமா... குழந்தையா இருக்கிற நீ வளர்வதற்குள் ஆன்மீக அரசியல்வாதிகள் புகுந்து விளையாடி உன்னை க்காட்டுக்கு அனுப்பிருவாங்க. உனக்கு தென்னகம் தான் சிறந்த இடம்.


PR Makudeswaran
ஜன 03, 2024 10:42

நம் மனதில் ராமர் சிலர் மனங்களில் வக்கிரம் ?? உதாரணமாக சிலர்.............


Dharmavaan
ஜன 03, 2024 08:04

22 மத்தேதி குடமுழுக்கு இன்னும் உறுதி செய்யப்படவில்லை


Dharmavaan
ஜன 03, 2024 08:03

22 m


Ramesh Sargam
ஜன 03, 2024 07:51

சிலை வைப்பதில் சர்ச்சை, அரசியல், வெறுப்பு எதுவும் வேண்டாம் ப்ளீஸ்.


அப்புசாமி
ஜன 03, 2024 07:45

படத்திலே இருக்கிற சிலைகளைப் பார்த்தால் குழந்தைகள் சிலை போலத் தெரியலியே...


அப்புசாமி
ஜன 03, 2024 07:43

இப்பவே ராமர் கோவிலில் அரசியல் புகுந்தாச்சு. சீக்கிரம் கைகேயி, மந்தரை பிரதிஷ்டை செய்யுங்க. பரதனுக்குத்தான் முதல் மரியாதை குடுக்கணும். வெளிப்படையா இருங்க. ஆழி சூழ் உலகமெல்லாம் பரதனே ஆள நீ போய் நு கம்பர் பாடியிருக்காரே


J.V. Iyer
ஜன 03, 2024 07:14

ராமர் எதிலும் இருக்கிறார். எங்கும் இருக்கிறார். நம்மனதிலும்.


அப்புசாமி
ஜன 03, 2024 12:57

அப்போ கோவில் எதுக்கு? ஓட்டுக்கா?


venugopal s
ஜன 03, 2024 05:55

ஓ,பாராளுமன்ற தேர்தல் பாஜக கூட்டணி இன்னும் முடிவாகவில்லையா?


D.Ambujavalli
ஜன 03, 2024 05:54

ஒரு சிலையை வடிவமைக்க எவ்வளவு பொறுமை, நுணுக்கம் தேவைப்படும் ? இந்நிலையில் இவர்கள் இனிமேல் கூட்டம் கூடி, தீர்மானித்து , ஆர்டர் செய்து சிலை வடிக்க, இது என்ன ரெடிமேட் உடை தைப்பது போலவா?


Senthoora
ஜன 03, 2024 07:51

திட்டம் இட்டது பல வருடங்களுக்குமுன்பு.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ