உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரஸ் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா

காங்கிரஸ் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் தொடர்பில்லை: உமர் அப்துல்லா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: ' ஓட்டுத் திருட்டு' குறித்து காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும், இண்டி கூட்டணிக்கும் எந்தத் தொடர்புமில்லை, என அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கூறியுள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர், டில்லியில் நடந்த மாநாட்டில் பேசிய, தேசிய மாநாட்டு கட்சி தலைவரும், காஷ்மீர் முதல்வருமான உமர் அப்துல்லா,' இண்டி கூட்டணி உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறது. உயிர் காக்கும் மருத்துவ சிகிச்சை ஆதரவின் மூலமாகவே கூட்டணி இன்னும் உயிர்ப்புடன் உள்ளது ' எனத் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.இந்நிலையில் உமர் அப்துல்லா அளித்த பேட்டியில் கூறியதாவது:ஓட்டுத் திருட்டுக்கு எதிராக காங்கிரஸ் நடத்தும் போராட்டத்துக்கும் இண்டி கூட்டணிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அஜென்டா உள்ளது. எஸ்ஐஆர் மற்றும் ஓட்டுத் திருட்டு ஆகியவற்றை காங்கிரஸ் முக்கியமான விஷயமாக தேர்வு செய்துள்ளது. என்ன செய்ய வேண்டும் என அவர்களுக்கு சொல்ல நாங்கள் யார்? அவர்களுக்கான பிரச்னையை அவர்கள் செய்வார்கள். எங்களுக்கான பிரச்னையை நாங்கள் தேர்வு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.காங்கிரஸ் எம்பி ராகுல் ஓட்டுத் திருட்டு குறித்து நீண்ட காலமாக பாஜவையும், தேர்தல் கமிஷனையும் குற்றம்சாட்டி வந்தார். டில்லியில் நேற்று காங்கிரஸ் சார்பில் பேரணி மற்றும் போராட்டம் நடந்தது. டில்லியில் நடந்த போராட்டத்தில் ராகுல் மற்றும் பிரியங்கா உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், இது அவர்களின் சொந்த பிரச்னை என உமர் அப்துல்லா பேட்டி கொடுத்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
டிச 16, 2025 04:21

நோ காங்கிரஸ் இந்த இந்தி கூட்டணி..


Sun
டிச 15, 2025 20:53

தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காஷ்மீர் மாநில முதல்வர் கூட யதார்த்தத்தை உணர்ந்துள்ளார். தேவையில்லாமல் மத்திய அரசுடன் மோதவும் இல்லை! எதிர்கட்சிகளுடன் கண்மூடித்தனமாக இணையவும் இல்லை! மம்தா, அரவிந்த் கெஜ்ரிவால் கூட மாறி விட்டனர். நமது மாடல் அரசுதான் எல்லாவற்றிற்கும் மத்திய அரசுடன் கண்மூடித் தனமாக மோதுவது! காங்கிரசுடன் அளவுக்கு அதிகமாக அளவளாவுவது! எதற்கெடுத்தாலும் ஒன்றியம், தொட்டுப்பார், தூக்கிப் பார், அவுட் ஆப் கவரேஜ், டெல்லி பாதுஷா, கருப்பு சிவப்பு படை , என் கேரக்டரே வேற ! என தொடர் சவால் விடுவது! இதனால் பாதிப்பு என்னவோ தமிழக மக்களுக்குத்தான்.


சிட்டுக்குருவி
டிச 15, 2025 20:08

இண்டிகூட்டணி என்பது மூழ்கும் கப்பலில் இருப்பவன் படகில் இருப்பவனை வாவா வந்து கப்பலில் ஏறு என்று கூவுவதுபொள் உள்ளது.


நாஞ்சில் நாடோடி
டிச 15, 2025 18:03

இண்டி கூட்டணியை, ஸ்டாலினை தவிர யாரும் மதித்ததே இல்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை