உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

ராகுல் கூறிய ஓட்டு திருட்டு புகாருக்கு ஆதாரம் இல்லை; போட்டு உடைத்தார் காங்கிரஸ் தலைவர் ஷக்கீல் அகமது

புதுடில்லி: பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது தெரிவித்துள்ளார். பீஹார் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி மாபெரும் வெற்றியை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஓட்டு திருட்டு, இவிஎம் இயந்திரத்தில் முறைகேடு என அடுக்கடுக்கான புகார்களை கூறிய ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான மஹாகட்பந்தன் கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இந்தத் தோல்வியானது, அடிமட்டத் தொண்டர்கள் முதல் முக்கிய தலைவர்கள் வரை காங்கிரஸ் தலைமை மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் கட்சி செயலை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஷக்கீல் அகமது கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் கூறியிருப்பதாவது; பீஹார் சட்டசபை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட யுக்திகள் அனைத்தும் பலவீனமாக இருந்தன. ராகுலின் ஓட்டு அதிகார யாத்திரையில் கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் மட்டுமே கலந்து கொண்டனர். உண்மையான வாக்காளர்கள் பங்கேற்கவே இல்லை. பீஹார் சட்டசபை தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு ஓட்டு இயந்திரங்கள் மீது காங்கிரஸ் சுமத்தும் குற்றச்சாட்டுகளுக்கு எந்தவித ஆதாரங்களும் இல்லை. அதேபோல, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை எதிர்க்கும் காங்கிரஸின் அணுகுமுறைக்கு மக்களிடையே எந்த வரவேற்பும் இல்லை. அதேபோல, தேர்தலில் போட்டியிடுவதற்கான சீட் வழங்குவதில் ஊழல் நடந்துள்ளது.கட்சியில் இருந்து ராஜினாமா செய்யும் முடிவை ஏற்கனவே எடுத்து விட்டேன். ஆனால், தற்போது தான் அதனை அறிவிக்கிறேன். என்னால் ஒரு 5 ஓட்டுகள் கூட குறைந்து விடக் கூடாது என்பதால் தான் தேர்தலுக்கு முன்பாக அறிவிக்கவில்லை. இந்த முடிவை எடுக்கக் காரணம், கட்சியின் கருத்தியலுடன் ஏற்பட்ட முரண்பாடு அல்ல. கட்சியில் உள்ள சில குறிப்பிட்ட நபர்களுடன் உள்ள தனிப்பட்ட வேறுபாடுகளினால் தான் இந்த முடிவு எடுத்துள்ளேன். நான் வேறு எந்த கட்சியிலோ அல்லது அமைப்பிலோ சேரப்போவதில்லை. அந்த எண்ணமும் எனக்கு இல்லை. எனது முன்னோர்களைப் போலவே, காங்கிரஸ் கட்சியின் கொள்கைகள் மற்றும் கோட்பாடுகளில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Rameshmoorthy
நவ 16, 2025 17:31

The cat has come out finally


Suppan
நவ 16, 2025 17:30

ஆதாரம் இருந்திருந்தால் ராகுல் சத்தியப்பிரமாணம் செய்து தேர்தல் ஆணையத்திற்கு அளித்திருப்பாரே? அவருடைய எண்ணமே மக்கள் மனதில் சந்தேகத்தை விளைவிப்பதுதான். இதுதான் ஹிட்லரின் வழியாகவும் இருந்திருக்கிறது. ஜெர்மனியின் எல்லா துன்பங்களுக்கும் காரணம் அரை சதவீதம் ஓட இல்லாத யூதர்கள்தான் என்ற பிரச்சாரம் மக்களிடம் எடுபட்டது. அதனால் லட்சக்கணக்கான யூதர்கள் கொடுமையாக தண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டார்கள். அசோம் முதல்வர் ஹிமந்தா சர்மா சொன்ன மாதிரி ராகுலை சோனியாவையும்தான் உண்மையான காங்கிரஸ்காரர்கள் புறம் தள்ளி ஒரு நல்ல தலைவரை தேர்ந்தெடுப்பதுதான் கட்சிக்கு நல்லது


senthilanandsankaran
நவ 16, 2025 17:28

சில்லறையை உருட்டிய பின் நீ கட்சில இருந்தா என்ன இல்லேன்னா என்ன.. போப்பா. .


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை