உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சீனாவுக்கு தான் முன்னுரிமை என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு: ஜெய்சங்கர்

சீனாவுக்கு தான் முன்னுரிமை என பிரதமராக இருந்த நேரு பேசிய காலம் உண்டு: ஜெய்சங்கர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத்: ஐ.நா., பாதுகாப்புச் சபையில், இந்தியாவுக்கு முன்னர் சீனாவுக்கு இடம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என நாட்டின் முதல் பிரதமர் நேரு பேசிய காலம் உண்டு என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார்.ஆமதாபாத்தில் குஜராத் மாநில வர்த்தகர்களுடன் நடந்த கலந்துரையாடலின் போது ஜெய்சங்கர் கூறுகையில், 1950 களில் முதல் பிரதமர் நேருவுக்கும், அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேலுக்கும் இடையே கருத்து பரிமாற்றம் நடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dnraiqsf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அப்போது, நேருவிடம் சீனா குறித்து படேல் எச்சரிக்கை செய்தார். வரலாற்றில் இல்லாத வகையில் எல்லையில் சீனாவையும், பாகிஸ்தானையும் இந்தியா எதிர்கொள்கிறது என படேல் எச்சரித்தார். சீனாவின் கருத்துகள் மற்றும் நோக்கம் ஏதும் நன்றாக தெரியவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது அவசியம். அது குறித்து கொள்கை வகுப்பது முக்கியம் என வலியுறுத்தினார். இதனை நேரு ஏற்றுக் கொள்ளவில்லைநேரு,‛‛ நீங்கள் தேவையில்லாமல் சீனாவை சந்தேகப்படுகிறீர்கள். இமயமலையைத் தாண்டி வந்து யாரும் நம்மை தாக்க மாட்டார்கள்'' என படேலிடம் தெரிவித்தார்.இது நடந்த சில வருடங்களுக்கு பிறகு ஐ.நா., சபை குறித்தும், அதில் இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமா என்பது குறித்தும் விவாதம் வந்தது. அப்போதும் நேருவின் நிலைப்பாடானது, ஐ.நா.,வில் இடம்பெற இந்தியாவுக்கு தகுதி உள்ளது. அதற்கு முன்னர் சீனாவுக்கு இடம் கிடைப்பதை நாம் உறுதி செய்ய வேண்டும் என்பதாகத் தான் இருந்தது. இதனால் தான் இந்தியாவே முதன்மை என நாம் நினைக்கிறோம். ஆனால், சீனாவே முதன்மை என நினைத்த ஒரு காலமும் இருந்தது. மோடி தலைமையிலான மத்திய அரசு, கடந்த 10 ஆண்டுகளில் காலம் காலமாக இருந்து வந்த பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதில் உறுதியாக உள்ளது. இன்று நமது எல்லைகளைப் பற்றி பேசும்போது, சிலர் நமது எல்லைகளை பழைய நிலைக்கு மாற்றுங்கள் என்கிறார்கள். நமது எல்லைகள் இன்னமும் நம எல்லைகள் தான். அதை சந்தேகப்படக்கூடாது. இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

அம்பாசமுத்திரம்
ஏப் 04, 2024 09:13

இவரை ஃபாரின் செக்ரட்டரியா இருந்த போது ஒரு வாய் இப்போ ..


Azar Mufeen
ஏப் 03, 2024 22:21

சீனாவை எதிர்க்க துப்பில்லை எப்போவோ செத்துப்போன நேரு தான் காரணமா.


Easwar Kamal
ஏப் 03, 2024 21:12

முடிஞ்சு போன விஷயத்தை மீண்டும் தூக்கிட்டு வரைந்தீங்க ஒய் நேரு மேல மேல மற்றும் குற்றம் சொல்லுறீங்களே அப்போது சார்த்தர் படேலும்தன் இருந்ந்தார் இப்போ குஜராத்துல சிலை வச்சு இருக்கீங்களே அவருதான் இப்போ என்ன தீர்வு அதுக்கு வழியை காணோம் இது மோடி ஸ்டைல் எவனாவது கேள்வி கேட்டன உடனே பழங்கதைக்கு போயிற வேண்டியது அதுவே அதானி பக்கத்துல சுரங்கம் தொண்டினா உடனே சீனா என்ன அவன் அப்பன் வந்தாலும் குரல் கொடுக்குறது இதுதான் நடந்துகிட்டு இருக்கு இது மக்களுக்கு தெரியாத enna


முருகன்
ஏப் 03, 2024 19:56

கேள்விக்கு பதில் இல்லை என்றால் பழியை தூக்கி நேரு இந்திரா மீது போட்டு தப்பிக்க நினைக்கும் குணத்தை மக்கள் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டனர்


Bhakt
ஏப் 03, 2024 23:28

உனக்கு இரு நூறு ரூபா வந்துச்சா உடன் பிறப்பே?


Natarajan Ramanathan
ஏப் 03, 2024 19:55

காந்தியை சுட்ட கோட்ஸே நேருவை சுட்டிருந்தால் இன்றைய பிரச்சனைகள் பல இருந்திருக்காது


rsudarsan lic
ஏப் 03, 2024 19:18

தெரியாம ஒளறிக்கிட்டே இருந்தா விழற நாலு ஓட்டு கூட நோட்டாவுக்கு போயிடும்


Dharmavaan
ஏப் 03, 2024 18:33

இந்த நாட்டின் இப்போதைய எல்லா பிரச்சனைகளுக்கு காரணம் காந்தி,நேருவே தொலைநோக்கில்லாத புத்தி சுயநலம் ,ஆணவம் ஆகியவையே நாட்டிற்கு கேடு


Sampathkumar Sampath
ஏப் 03, 2024 17:50

உண்மை


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை