உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆசிட் வழக்கில் திருப்பம் மாணவியின் தந்தை சகோதரன் கைது

ஆசிட் வழக்கில் திருப்பம் மாணவியின் தந்தை சகோதரன் கைது

புதுடில்லி: புதுடில்லி அசோக் விஹார் லட்சுமி பாய் கல்லுாரியில் பி.காம்., இரண்டாம் ஆண்டு படிக்கும் 20 வயது இளம்பெண், 26ம் தேதி காலை சிறப்பு வகுப்புக்கு சென்ற போது, பைக்கில் வந்து வழிமறித்த முகுந்த்பூரைச் சேர்ந்த ஜிதேந்தர் மற்றும் அவரது நண்பர்கள் இஷான், அர்மான் ஆகியோர் அந்தப் பெண் மீது ஆசிட் வீசிய தாக குற்றம் சாட்டப்பட்டது . அந்தப் பெண்ணும் தீனபந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்த விவகாரத்தில் குற்றவாளிகளை உடனே கைது செய்யும்படி துணைநிலை கவர்னர் சக்சேனாவும் உத்தரவிட்டார். தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ஆசிட் வீசியதாக அந்தப் பெண் நாடகம் ஆடியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, டில்லி மாநகரப் போலீசின் வடமேற்கு மாவட்ட துணைக் கமிஷனர் பீஷம் சிங் கூறியதாவது: ஆசிட் வீச்சுக்கு ஆளானதாக கூறப்படும் மாணவி, தன் தந்தை அகில் கான் மற்றும் கழிப்பறை சுத்தம் செய்பவருடன் சேர்ந்து ஆசிட் வீசியதாக நாடகம் ஆடியுள்ளார். அந்தப் பெண் குற்றம் சாட்டிய ஜிதேந்தர் மனைவி 2021 முதல் 2024 வரை சாக்ஸ் தொழிற்சாலையில் வேலை செய்துள்ளார். அப்போது, அகில்கான், ஜிதேந்தர் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அதேபோல, இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இஷான் மற்றும் அர்மான் சகோதரர்களின் தாய் ஷப்னமும், 2018ல் தன் மீது அகில்கான் ஆசிட் வீசியதாக புகார் செய்துள்ளார். ஷப்னம் மற்றும் அகில்கான் குடும்பத்துக்கு இடையே சொத்துத் தகராறு இருந்ததால், அதை பழி தீர்த்துக் கொள்ள இந்த நாடகத்தை ஆடியுள்ளனர். இரு பெண்களிடமும் நடத்திய விசாரணை அடிப்படையில், பாலியல் வன்கொடுமை வழக்கில் அகில் கான் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நாடகத்துக்கு உதவிய அகில் கானின் மகன் யூனுஸும் கைது செய்யப்பட்டுள்ளார். அகில்கான் குடும்ப உறுப்பினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை