உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இந்தாண்டு இந்தியாவில்... லோக்சபா மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல்கள்

இந்தாண்டு இந்தியாவில்... லோக்சபா மற்றும் 7 மாநில சட்டசபை தேர்தல்கள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: இந்த ஆண்டு (2024) இந்தியாவில் ஏழு மாநில சட்டசபைகளுக்கும், லோக்சபாவுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது.

முழு விபரம் பின்வருமாறு:

வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் லோக்சபா தேர்தல் நடக்க உள்ளது. அதேபோல இந்தாண்டில் ஆந்திரா, அருணாசலப்பிரதேசம், ஒடிசா, சிக்கிம், ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட் ஆகிய 7 மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. எனவே இந்தாண்டு அரசியல் களம் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த கண்டங்களில் தேர்தல்

ஐரோப்பா கண்டத்தில் 36 நாடுகளிலும், ஆப்ரிக்காவில் 18 நாடுகளிலும், ஆசியாவில் 17 நாடுகளிலும், வட அமெரிக்காவில் 25 நாடுகளிலும், தென் அமெரிக்காவில் 2 நாடுகளிலும் தேர்தல் நடைபெற உள்ளன.

வாக்காளர்கள் எண்ணிக்கை

140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் 90 கோடிக்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள். பாகிஸ்தானில் நடக்க உள்ள தேர்தலில் 12.7 கோடிக்கும் அதிகமானோர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள். அமெரிக்காவில் நடக்க உள்ள அதிபர் தேர்தலில் 16 கோடிக்கும் மேற்பட்டோர் ஓட்டளிக்க தகுதி உடையவர்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை