உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 10 காலி பணியிடங்களுக்கு திரண்ட ஆயிரக்காணக்கான இளைஞர்கள்!

10 காலி பணியிடங்களுக்கு திரண்ட ஆயிரக்காணக்கான இளைஞர்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஆமதாபாத் : குஜராத்தில் தனியார் நிறுவனத்தில் 10 பணியிடங்களுக்கான நேர்காணலில் பங்கேற்க, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.குஜராத்தில் பரூச் மாவட்டத்தின் ஜஹாடியாவில் உள்ள பொறியியல் நிறுவனத்தில், 10 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், அதற்கு கடந்த 8ம் தேதி நேர்காணல் நடைபெறும் என்றும், அந்நிறுவனம் அறிவித்திருந்தது. இதையடுத்து அன்றைய தினம், ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அந்த நிறுவனத்திற்குள் முண்டியடித்து செல்ல முயன்றனர்.எதிர்பாராதவிதமாக, அங்குள்ள தடுப்பு கம்பி, பாரம் தாங்காமல் கீழே விழுந்தது. இதனால், அங்கு நின்றிருந்த இளைஞர்கள், சரிந்து விழுந்ததில் பலர் காயமடைந்தனர். இந்த நிகழ்வு தொடர்பான வீடியோ, சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், 'நம் நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பின்மையை எடுத்துக்காட்டும் வகையில் இது அமைந்துள்ளது' என, குறிப்பிட்டனர். எனினும், இதற்கு பரூச் பா.ஜ., எம்.பி., மன்சூக் வாசவா கூறுகையில், “பரூச் மாவட்டம், மினி இந்தியா போன்றது.நம் நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் இங்கு வந்து தங்கியுள்ளனர். ஆனால், காலிப்பணியிடங்களை அறிவித்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் அதற்குரிய தகுதிகளை முறையாக வெளியிடவில்லை. இதனால் தான் அந்த நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் குவிய காரணமாக அமைந்தது,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Gnanaguru
ஜூலை 12, 2024 16:34

இந்தியா முழு வதும் இதே நிலமைதான்


karthikeyan.P
ஜூலை 12, 2024 12:03

தாத்தா வறாறு கதறவிட போறாரு இந்தியன் 2


jayvee
ஜூலை 12, 2024 11:40

இங்கு கூடிருந்த அணைத்து இளைஞர்களும் வேலை இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது.. சிறந்த சம்பளம் கிடைக்கும் என்றஎண்ணத்தில் வந்திருக்கலாம் ..


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 11:35

ஒரு காலத்தில் சம்பளத்துக்கு வேலை செய்யும் குஜராத்தி இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது கடினம். சுயதொழில், வியாபாரம் செய்யும் மாப்பிள்ளகளுக்கே டிமாண்ட் இருந்தது. இப்போ சுய தொழில் செய்யும் தைரியம் குறைந்து வருவதால் கைகட்டி சேவகம் செய்யும் ஆட்களை விரும்பும் ட்ரெண்ட். கேட்கவே கஷ்டமாக இருக்கிறது.


Saai Sundharamurthy AVK
ஜூலை 12, 2024 10:53

எல்லா மாநிலங்களிலும் இது போன்ற சம்பவங்கள் நடை பெறுகிறது. தமிழ்நாட்டில் ஆஃப் கேம்பஸ் நேர்காணல் நிகழ்வை பார்த்தவர்களுக்கு இது ஒன்றும் புதிதல்ல. சமீபத்தில் ராகுல்கந்தி குஜராத் வந்து சென்றார். எனவே, இது காங்கிரஸின் சதி வேலையாகக் கூட இருக்கலாம்.


Saai Sundharamurthy AVK
ஜூலை 12, 2024 10:44

140 கோடி மக்கள் தொகை கொண்ட ஒரு நாட்டில் நேர்காணல் என்றால் கூட்டம் அலை மோதத் தான் செய்யும். அதிலும் அந்த இடம் மினி இந்தியா என்று வேறு சொல்லப்படுகிறது. நம் தமிழ்நாட்டவர்கள் கூட அங்கு நிறைய பேர் இருந்திருப்பார்கள். இது சகஜமான விஷயம் தான். சமயத்தில் அடிதடியில் முடிந்த கதைகள் எல்லாம் உண்டு. ஆகவே தான் நிறைய கம்பெனிகள் செய்தி ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து, மனுக்களை அனுப்பச் சொல்லி , தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுக்கு மட்டும் நேர்காணல் கடிதத்தை அனுப்பி ஆட்களை தேர்வு செய்கிறார்கள்.


venugopal s
ஜூலை 12, 2024 10:37

பாஜகவின் மாடல் மாநிலமான குஜராத்தின் லட்சணமே இப்படி என்றால் மற்ற பின் தங்கிய வட மாநிலங்களின் நிலைமை எப்படி இருக்கும்? இதில் தமிழ்நாட்டை குறை சொல்ல வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுகிறார்கள்!


Shyam Venkat
ஜூலை 13, 2024 09:08

அப்போ தமிழ்நாடு ரொம்ப சீரும் சிறப்புமா ஆட்சி நடக்குதுன்னு சொல்லறீங்களா


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 10:34

அனுபவம் இல்லாத ஆசிரியர்கள். தனக்கென்று தனித்திறன் மென்திறன், இல்லாத மாணவர்கள். தெருவுக்குத் தெரு இன்ஜினீயரிங் கல்லூரி திறந்ததன் பலன் இதுதான். ஒரே படிப்பு, ஒரே விதமான வேலையை நோக்கி எல்லோரும் படையெடுத்தால்? அனைவரையும் பட்டதாரி ஆக்கும் முயற்சியின் பலன் இப்படிதான் இருக்கும்.


thiru
ஜூலை 12, 2024 11:00

Thaan mattum padikurapo nallaa irundhadhaam, ellorum padikum poludhu kasakkudhaam.


கனோஜ் ஆங்ரே
ஜூலை 12, 2024 11:55

நீ என்ன சொல்ல வர்றே...ன்னு தெரியுது, புரியுது. நீயும் உன் சொந்தக்காரனுங்க மட்டுமே படிக்கணும், அவனுங்க மட்டுமே அனுபவம், தனித்தனிறன் உள்ளவர்கள்..னு சொல்ல வர்றே...? நாங்க சொல்றது, “எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும்”...ங்றது.


Shankar
ஜூலை 12, 2024 10:05

பிஹெச்டி முடித்திருப்பான் ஆனாலும் தகுதியோடுதான் இருப்பான் என்ற இந்த பிஜேபி சொல்ல முடியுமா இந்தியா ஒரு கேவலமான கல்வி தரத்தை வைத்திருக்கிறது இது பிஜேபி ஆட்சியில் மேலும் சீர்கேட்டு சென்று கொண்டிருக்கிறது இதுதான் உண்மை இதற்கு பொறுப்பு இல்லாத அலட்சிய நோக்கோடு எந்நேரம் ஜிஎஸ்டி அதில் தான் நம் கவுரவம் என மக்களை பிழியும் பிரதமராக தன்னை பிரதிபலித்துக் கொள்ளும் எண்ணம் உடைய பிரதமராக எந்த குரோத மனிதன் ஆட்சி செய்கிறானோ நாடும் அப்படித்தான் நாசமா போகும்


ஆரூர் ரங்
ஜூலை 12, 2024 10:30

உன் குரோதம் புரிகிறது. எந்த பொருள் மீது போட்ட ஜிஎஸ்டி காகவும் திமுக நிதியமைச்சர் கவுன்சில் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்ததில்லை. அதிக வசூல் வேண்டும் எனதான் குரல் கொடுத்துள்ளார்.


அசோகன்
ஜூலை 12, 2024 09:50

அந்த நிறுவனத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும்


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி