உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / மதம் மாற வற்புறுத்திய 2 பெண் உட்பட மூவர் கைது

மதம் மாற வற்புறுத்திய 2 பெண் உட்பட மூவர் கைது

ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தில் இளம்பெண்களை மதமாற்றம் செய்ய முயன்ற இரு பெண்கள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.ராஜஸ்தானின் அல்வார் நகரில் வசிக்கும் சகினா மேவ்,25, காஜல் என்ற பபிதா ஜாதவ்,24, இருவரும் அறை எடுத்து தங்கி படித்து வந்தனர். பக்கத்து அறையில் இரு சகோதரிகள் தங்கியிருந்தனர்.சகினா மற்றும் காஜல் ஆகியோரின் உறவினர் வாசிம்,23, அங்கு அடிக்கடி வருவார். நாளடைவில் நட்புடன் பழகினர். மூவரும் சேர்ந்து, சகோதரிகள் இருவரையும் மதம் மாற வற்புறுத்தினர். மேலும், இருவரும் மதம்மாறி வாசிமை திருமணம் செய்து கொள்ளவும் அழுத்தம் கொடுக்கப்பட்டனர்.இதனால் கடும் மன உளச்சலுக்கு ஆளான சகோதரிகள், கோட்வாலி போலீசில் புகார் செய்தனர்.விசாரணை நடத்திய போலீசார், சகினா, காஜல் மற்றும் வாசிம் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதேபோல, வேறு யாரையாவது மதம் மாற்ற முயற்சித்துள்ளனரா என விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை