உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / சிறுமி பலாத்காரம்; மூவருக்கு சிறை

சிறுமி பலாத்காரம்; மூவருக்கு சிறை

கலபுரகி: சிறுமியைத் தாக்கி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனையும், அவரது சகோதரருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து, கலபுரகி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.கலபுரகியின், பரஹதாபாத் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசிப்பவர் ரவிபாவுராயா, 21. தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி, அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுமிக்கு இவர் தொல்லை கொடுத்தார். சிறுமியின் குடும்பத்தினர் பல முறை புத்திமதி கூறியும், ரவி பாவுராயா பொருட்படுத்தவில்லை.இது பற்றி ரவி பாவுராயாவின் பெற்றோரிடம் புகார் தெரிவிக்க, சில மாதங்களுக்கு முன்பு, அவரது வீட்டுக்கு சிறுமியின் குடும்பத்தினர் சென்றனர். அப்போது ரவி பாவுராயாவும், அவரது சகோதரர் சிவராஜ் பாவுராயா, 23, சிறுமியின் தந்தையை கோடாரியால் தாக்கினர். மேலும், தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். சிறுமியை ரவி பாவுராயா பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, சிறுமியின் பெற்றோர் பரஹதாபாத் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், ரவி பாவுராயா, சிவராஜ் பாவுராயா, அவர்களின் தந்தை பாவுராயா ராத்தோட், 50, ஆகியோரை கைது செய்தனர்.கலபுரகியின் கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையில் மூவரின் குற்றம் உறுதியானது. ரவி பாவுராயாவுக்கு ஆயுள் தண்டனை, 63,000 ரூபாய் அபராதம், அவரது சகோதரர் சிவராஜ் பாவுராயாவுக்கு, 10 ஆண்டு சிறை தண்டனை, 60,000 ரூபாய் அபராதம், இவர்களின் தந்தைக்கு ஆறு மாத சிறை, 500 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி யமனப்பா பம்மனகி, நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !