உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 7 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த மூவர் கைது

7 கிலோ கஞ்சா கடத்தி வந்த ஒடிசாவை சேர்ந்த மூவர் கைது

பாலக்காடு; பாலக்காடு அருகே, போலீசார் நடத்திய சோதனையில், விற்பனைக்காக 7 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்த ஒடிசா மாநிலத்தை சேர்ந்த மூன்று பேரை கைது செய்தனர். கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கோவை- - கொச்சி தேசிய நெடுஞ்சாலை அட்டப்பள்ளம் சுங்கச்சாவடி அருகே, எஸ்.ஐ., ஹர்ஷாத் தலைமையிலான போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி வழியாக சந்தேகப்படும் வகையில் நடந்து சென்ற மூவரிடம் நடத்திய சோதனையில், 7.311 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்திய விசாரணையில், அவர்கள் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஷ், 27, கவுரங்கா சரண், 27, கவுரங்கா டிகல், 33, ஆகியோர் என்பதும், பாலக்காடு பகுதியில் விற்பனை செய்வதற்காக கஞ்சா பதுக்கி கொண்டு சென்றதும் தெரியவந்தது. கைது செய்யப்பட்ட மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை